மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ... இன்னொரு போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். கூடவே, அவள் விகடன் பற்றிய தங்கள் கருத்தை ஒரே வரியில் ஸ்லோகனாக எழுதி அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்துக்குள் எழுதவும். சரியான தீர்வுடன், சிறந்த ஸ்லோகன் எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

பேனாவை எடுத்தவர் யார்?

அந்தப் பள்ளியில் முப்பெரும் விழா. அங்கே கடைகள் போடுவதற்காகச் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் வந்திருந்தார்கள். வசந்தி மண்பொம்மைகளை விற்பனைக்கு வைத்திருந்தார். கலா கடலை மிட்டாய்க் கடை வைத்திருந்தார். நிர்மலா அனைத்து நாடுகளின் கொடிகளையும் கடை பரப்பியிருந்தார். சுமதி பென்சில், பேனா, நோட்டுப் புத்தகங்களை அடுக்கியிருந்தார். கீதா பருத்திப்பால், கீரை சூப் ஆகியவற்றைத் தயாரித்து மண்குவளைகளில் வைத்திருந்தார்.

கடைகள் வைக்கப்பட்டிருந்த ஹாலுக்கு வந்தார் தலைமை ஆசிரியர். சுய உதவி குழுக் களைச் சேர்ந்த பெண்களைப் பாராட்டினார். பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார். “இந்த ஹாலின் நடுவில் உள்ள ஒரு மேஜையில் விலையுயர்ந்த பேனா ஒன்றை அழகான பரிசுப் பெட்டிக்குள் வைத்திருக்கிறேன். அதைப் பிறர் அறியாமல் இன்னும் 10 நிமிடங்களில் இங்குள்ள பெண்களில் ஒருவர் எடுத்துவிடுவார். 15 நிமிடங்களுக்குப் பிறகு ஆசிரியர்கள் அனைவரும் இங்கே வர வேண்டும். பெண்களிடம் ஒரே ஒரு கேள்வியை நான் கேட்பேன். அவர்கள் சொல்லும் பதில்களில் இருந்து, பேனாவை எடுத்தவர் யார் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். யார் சரியாகச் சொல்கிறாரோ, அவருக்கு அந்த விலையுயர்ந்த பேனா பரிசு!”

புதுவிதமான போட்டியாக இருக்கிறதே என்று ஆசிரியர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஹாலை விட்டு அகன்றார்கள். தலைமை ஆசிரியர் சொன்னது போலவே 10 நிமிடங்களில் பேனா காணாமல் போய்விட்டது.

15 நிமிடங்களுக்குப் பிறகு தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் வந்தனர். “கடந்த 15 நிமிடங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று கடைவைத்திருக்கும் பெண்களைப் பார்த்துக் கேட்டார் தலைமை ஆசிரியர்.

”சின்ன பொம்மைகளில் இருந்து பெரிய பொம்மைகள் வரை வரிசையாக அடுக்கி வைத்துக்கொண்டிருந்தேன்” என்றார் வசந்தி.

கலா, “நான் பெட்டியிலிருந்த மிட்டாய்களை எண்ணி, பாட்டில்களில் போட்டுக் கொண்டிருந் தேன்” என்றார்.

“நான் தலைகீழாக இருந்த , ஸ்விட்சர்லாந்து கொடிகளைக் கண்டுபிடித்து, சரியாக வைத் தேன்” என்றார் நிர்மலா.

“பென்சில், பேனா, ரப்பர் போன்றவற்றை ஒன்றாகக் கட்டி, காம்போ ஆஃபர் கொடுப்ப தற்காகப் பெட்டிகளில் போட்டுக் கொண்டிருந் தேன்” என்றார் சுமதி.

கீதா, “நான் பருத்திப்பாலையும் சூப்பையும் சூடாக வைத்திருப்பதற்காக. ஸ்டவ்வை ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார்.

“இவர்கள் சொன்ன பதில்களில் இருந்து, பேனாவை எடுத்தவர் யார் என்பதைச் சொல்லுங்கள்” என்று ஆசிரியர்களிடம் கேட்டார் தலைமை ஆசிரியர்.

வசந்தியா, சுமதியா, கீதாவா, கலாவா, நிர்ம லாவா என்று ஒவ்வொருவருக்கும் குழப்பமாக இருந்தது. ஆனால், பேனாவை எடுத்தவரை சரியாகக் கண்டுபிடித்துவிட்டார் மாலா டீச்சர்.

1. ஆர்.ரங்கநாயகி, கோவை-25

தனி மனுஷியாக ஐந்து மகள்களை ஆளாக்கிய தன்னம்பிக்கைத் தாய் சசிரேகாவுக்கு ஒரு பாராட்டு. ஆணாதிக்கத்தில் திளைக்கும் பலவீன ஆண்களுக்கு ஒரு குட்டு என்று சமநிலை காத்த அவள் ஒரு நியாய தேவதை.

2. கே.எஸ்.சுரபி வாசுதேவன், புலிவலம்

பார்வை இல்லாத செல்வராணியின் சாதனை உள்ளம் கவர்ந்தது; புத்தாண்டு ரெசிப்பிகள் நாவுக்கு ருசி கூட்டின.

3. எம்.ரஹிலா பானு, திருச்சி

ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தலான ஆலோசனைகள்... 32 பக்க இணைப்பு - பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

4. வ.ஜெயசுதா, காரைக்கால்

சமையல் சந்தேகங்களுக்கு சமையற்கலை நிபுணர்கள் தரும் தீர்வுகள், என்னைப் போன்ற இளம் இல்லத்தரசிகளுக்கு வரப்பிரசாதம்.

5. இரா.ஜயலட்சுமி, சென்னை-125

புதிர்ப்போட்டி போதை ஏற்றுகிறது. புதிய செய்திகள் ‘கற்றது கைம்மண் அளவு’ என்பதை நினைவூட்டுகின்றன. மொத்தத்தில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்று பாடத் தோன்றுகிறது.

6. எஸ்.என்.பாக்யலக்ஷ்மி, மதுரை-9

அவள் என்றும் இனியவள்... மதுரையில் நடந்த அவள் ‘ஜாலி டே’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவள்... இன்று வரை என் தோழியாக தொடர்பவள்.

7. பிரபாவதி, கிருஷ்ணகிரி

பூ வைக்க விரும்பாத இன்றைய பெண் களுக்கு `கஜ்ரா' ஹேர்ஸ்டைல் டிப்ஸும், இளம் குழந்தையைப் பராமரிக்க வேண்டியவர் களுக்கு ‘ஓ... பாப்பா லாலி’ ஒரு பக்க தகவல் களும் பயனுள்ளதாக இருந்தன.

8. ஜனனி கண்ணாத்தாள், ஆலந்துறை

என் அம்மா ‘ஆனந்த விகடன்’ வாசகி - வயது 86. நான் `அவள் விகடன்' வாசகி - வயது 64. என் பெண் அவள் `2கே கிட்ஸ்' பக்கங்களின் வாசகி - வயது 20.

9. ஆர்.கங்கா, புதுக்கோட்டை

`முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்' போன்ற தகவல்களைத் தரும் அவள் குறிஞ்சியாக வருடுபவள். மகளிர் முன்னேற்றத்துக்குத் தூணாக இருப்பவள்.

10. எஸ்.பிரியம்வதா, சென்னை-28

சாமானியர்களையும் சாதிக்கத் தூண்டும் வகையில் மிளிரும் அவளை வாழ்த்தி மகிழும் பெண்ணுலகம்.