பிரீமியம் ஸ்டோரி
தீபாவளி என்றதுமே நம் மனதுக்குள் புது ஆடைகள் தான் நினைவுக்கு வரும். ‘நாம் வாங்கும் ஆடை மற்றவர் ஆடைகளைவிட வித்தியாசமாக இருக்க வேண்டும். நாம் தனித்து தெரிய வேண்டும்’ என்பதுதான் பலருடைய தீபாவளி பர்சேஸ் டார்கெட்டாக இருக்கும். இந்த வருடம் தீபாவளிக்கு, பெண்களுக்கு என்ன ஆடைகள் டிரெண்ட் ஆகும் எனச் சில ஃபேஷன் டிசைனர்களிடம் கேட்டோம்.
டிரெடிஷனல்... டிரெண்ட்!

டிரெடிஷனல் ஆடைகளில் என்ன வகை டிரெண்ட் ஆகிறது என்ற தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் மபியா பொட்டிக்கின் உரிமையாளர் பிரியா. “டிரெடிஷனல் ஆடைகளைப் பொறுத்தவரை நம்முடைய பாரம்பர்யமான தாவணி பாவடை கான்செப்ட் டிரெடிஷனல் லெஹங்காக வாக ரீ-டிரெண்ட் ஆகிறது. பெரிய பார்டரில் அதிக ஃப்ரில் வைத்த ஸ்கர்ட் அதற்கு மேட்சிங்காக எம்ப்ராய்டரி அல்லது ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஃப்ளவுஸ், கான்ட்ராஸ்டான நிறத்தில் தாவணி மேட்சிங் செய்யலாம். பாரம்பர்யமான லுக் வேண்டும் என்பவர்கள் காஞ்சிபுரம் பட்டில் வடிவமைக்கப்பட்ட லெஹெங்காவை தீபாவளி ஆடையாகத் தேர்வு செய்யலாம். காஞ்சிபுரம் சில்க் மெட்டீரியல் அளவுக்கு பட்ஜெட் ஒதுக்க முடியாது என்பவர்கள் ராசில்க் மெட்டீரியல் அல்லது பனராசி மெட்டீரியலைக்கூட தேர்வு செய்து டிசைன் செய்து கொள்ளலாம்.

டிரெடிஷனல்... டிரெண்ட்!

ந்த வகை சில்க் மெட்டீரியலாக இருந்தாலும் ஸ்கர்டின் உட்புறம் கேன் கேன் அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும். சிம்பிளான பிளைன் புடவை அதற்கு கான்ட்ராஸ்டான நிறத்தில் டிரெண்டியான ப்ளவுஸ்கள் அணிவது இப்போதைய டிரெண்ட். அதனால் உங்களின் ப்ளவுஸ்ஸை வித்தியாசமான லுக்கில் காலர் வைத்த ப்ளவுஸ், போட் நெக் ப்ளவுஸ் பேட்டர்ன் ப்ளவுஸ் என விதவித மாக வடிவமைத்துக் கொள்ளலாம். இது உங்களுக்கு நியூ லுக் கொடுக்கும். என்னுடைய சாய்ஸ் டிரெடிஷனல்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிரெடிஷனல்... டிரெண்ட்!

ண்டோ வெஸ்டர்னில் டிரெண்ட் ஆகும் ஆடைகள் குறித்து மெர்ஷல் பொட்டிக் உரிமையாளர் நந்திதா தரும் தகவல்கள்... புடவைகளுக்கு பெல்ட் அணிந்துகொள்வது இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட். உங்கள் வீட்டில் இருக்கும் சிம்பிளான காட்டன் புடவையுடன் போல்டான ஒரு பெல்ட் அணிந்து சிம்பிளான கம்மல்கள் அணியலாம்.

டிரெடிஷனல்... டிரெண்ட்!

சாதாரண புடவை வாங்கி அதில் உள்ள பார்டரை எடுத்துவிட்டு கான்ட்ராஸ்டான நிறத்தில் ரஃபில் வைத்து தைத்துக்கொண்டால் இந்த தீபாவளிக்கு டிரெண்டியாக வலம் வரலாம்.

டிரெடிஷனல்... டிரெண்ட்!

கிரேப் சில்க் அல்லது ஷிவாஃன் புடவை வாங்கி அதற்கு மேல் கான்ட்ராஸ்டான நிறத்தில் ஓவர் லே ஒன்றை அணிந்துகொண்டால் நீங்கள்தான் டிரெண்ட் செட்டர் அல்லது போட் நெக் ப்ளவுஸ் அணிந்து வித்தியாசமாக சாரி டிரெப்பிங்கை முயற்சி செய்து பார்க்கலாம்.

டிரெடிஷனல்... டிரெண்ட்!

ல்வார் ஒன்றை வாங்கி அதன் பேன்ட் துனியை ஃப்ரில்கள் இருப்பது போன்று இரண்டடுக்காக தைத்து ஷார்ட் டாப்புடன் மிக்ஸ் மேட்ச் செய்தால் பட்ஜெட்டுக்குள் நீட் லுக் கிடைக்கும். லாங் சல்வார் அல்லது ஜம்ப் ஷூட் ஒன்றை அணிந்து, அதற்கு கான்ட்ராஸ்டான நிறத்திலிருக்கும் துப்பட்டாவை ஸ்கார்ப் போன்றோ, புடவையின் மடிப்பு போன்றோ அணியலாம்.''

டிரெடிஷனல்... டிரெண்ட்!

ட்ஜெட்டுக்குள் ஸ்டைலிங் செய்துகொள்ளும் வழிகளை விளக்குகிறார் V7 பொட்டிக்கின் உரிமையாளர் வின்யா ஏழுமலை... ``வீட்டிலிருக்கும் காட்டன் அல்லது பழைய பட்டுப்புடவையை லாங் அம்பர்லா டைப் டிரஸ் போன்று தைத்து அதற்கு கான்ட்ராஸ்டான நிறத்தில் பார்டர் வைத்து டாப்ஸ்க்கு மேட்சிங்கான நிறத்தில் துப்பட்டவை மேட்ச் செய்தால் பட்ஜெட்டுக்குள் சூப்பரான ஆடை தயார். ஸ்கர்ட் ஒன்றை தைத்து அதற்கு மேட்சிங்காக கிராப் டாப் ஒன்றையும் எடுத்துக்கொள்ளலாம்.

டிரெடிஷனல்... டிரெண்ட்!

ங்களுடைய சல்வாருக்கு மேல் ப்ரோகேட் அல்லது செக்ட் டிசைன் கொண்ட ஒவர் லே அணிந்து கொள்ளலாம். ஸ்டைலாக இருக்கும். பழைய பட்டுப் புடவைகளை லெஹெங்கா போன்று அணிந்துகொள்வது இப்போது மீண்டும் டிரெண்ட் ஆகிறது. அவ்வளவு தொகை செலவழித்து இப்போது ஷாப்பிங் செய்ய இயலாது என்பவர்கள், டிசைனர் துப்பட்டாவை பழைய பட்டுப்பாவடைகளுடன் மேட்ச் செய்து கொள்ளலாம்.

டிரெடிஷனல்... டிரெண்ட்!

ரு சல்வார் மெட்டீரியல் வாங்கி அதன் டாப் மற்றும் பேன்ட் துணியை இரண்டு டாப்ஸ்களாக தைத்துக்கொள்ளலாம். அதற்கு மேட்சிங்காக ஒரு லெகின்ஸ் அல்லது பலாசோ பேன்ட் எடுத்துக் கொண்டால் டூ இன் ஒன்னாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். சல்வார் அல்லது ப்ளவுஸ் மெட்டீரியலை வழக்கமாகச் செய்வதைப் போன்று டிசைன் செய்யாமல் இப்போது இருக்கும் டிரெண்டுக்கு ஏற்றாற்போல் ஸ்ட்ரைட் கட் பேன்ட், பலாசோ பேன்ட், பேட்டட்ன் ப்ளவுஸ்கள் என வடிவமைத்தால் நியூ லுக் கிடைக்கும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு