Published:Updated:

வினு விமல் வித்யா: விண்ணிலும் பெண்... மண்ணிலும் பெண்!

கேத்ரின், சாரா அல் அமீரி
பிரீமியம் ஸ்டோரி
கேத்ரின், சாரா அல் அமீரி

சஹானா

வினு விமல் வித்யா: விண்ணிலும் பெண்... மண்ணிலும் பெண்!

சஹானா

Published:Updated:
கேத்ரின், சாரா அல் அமீரி
பிரீமியம் ஸ்டோரி
கேத்ரின், சாரா அல் அமீரி
வித்யாவையும் விமலையும் வீடியோ காலில் அழைத்தாள் வினு.

“வினும்மா, இப்படி திடீர்னு வீடியோ கால் போட்டா... நான் என்ன பண்றது. டிரஸ்கூட நல்லா பண்ணல” என்றாள் வித்யா.

“நீங்க நல்லாதான் இருக்கீங்க வித்யாக்கா. இப்ப எல்லாம் ஜூம் மீட்டிங்ல ஆண்கள் பனியனோடவும் சட்டை இல்லாமலும் வர்றாங்க. ஒரு பேஸிக் மேனர்ஸ்கூட இல்ல'' என்று கொந்தளித்த வினு,

``சரி, எனக்கு ஒரு கட்டுரை தயார் பண்ண வேண்டியிருக்கு. உடனே நம்ம மீட்டிங்கை முடிச்சிடலாம்” என்றாள்.

“குஜராத் மாநில அமைச்சரோட மகன் காரைத் தடுத்து நிறுத்தின காவலர் சுனிதா யாதவ் பற்றிதான் ஊர்முழுக்கப் பேச்சு. ஆட்சி, அதிகாரம் கையில இருக்கறதால, அரசாங்க ஊழியரை மிரட்டுற அளவுக்குத் துணிச்சல் வந்துடுது” என்று அரட்டையை ஆரம்பித்து வைத்தாள் விமல்.

“எல்லோரும் பாராட்டறாங்க. அதேநேரம், அரசியல் சக்திகள் மிரட்டுது. அதனால ராஜினாமா லெட்டரை அனுப்பிட்டாங்க சுனிதா. இதுதான் நேர்மைக்குக் கிடைச்ச மரியாதை’’ என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய வினு,

‘`அரபு நாடுகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப் போகுது. அந்தத் திட்டத்துக்குத் தலைமை, சாரா அல் அமீரி.

கேத்ரின், சாரா அல் அமீரி
கேத்ரின், சாரா அல் அமீரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

33 வயதே ஆன சாராவும் அவரோட குழுவும் ஆறு ஆண்டுகளா இதுக்காக உழைச்சிட்டிருக்காங்க. அமெரிக்க விஞ்ஞானிகள் வழிகாட்டுதலோடதான் இந்த விண்கலத்தை அனுப்பறாங்க. இது, செவ்வாய் கிரகத்தோட பருவநிலையைத் துல்லியமா கண்டறியுமாம். சாராவுக்கு இப்பவே நம்ம வாழ்த்துகளைச் சொல்லிவைப்போம்” என்றாள்.

“வாவ் சூப்பர்... அரபுப் பெண்களின் நிலையில் இப்போது ஆரோக்கியமான மாற்றங்கள் நடக்க ஆரம்பிச்சிருக்கிறது மகிழ்ச்சியான விஷயம் வினு. இதேபோல குவைத் நாட்டுல நீதிபதியா ஆகறதுக்கான அங்கீகாரம் எட்டுப் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கு. இதைப் பலரும் வரவேற்றாலும்... சிலர் எதிர்க்கவும் செய்றாங்க” என்றாள் விமல்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இனிமேலும் பெண்களோட வளர்ச்சியை எந்தக் காரணமும் கொண்டும் யாரும் தடுக்க முடியாது என்பதை உலகம் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கு. அதான் நல்ல மாற்றங்கள் வர ஆரம்பிச்சிருக்கு. இந்த கொரோனா காலத்தில் 114 நாடுகளைச் சேர்ந்த 4.7 கோடி பெண்களுக்குக் கருத்தடை சாதனங்கள் சரிவர கிடைக்கல. அதனால் 70 லட்சம் திட்டமிடாத கர்ப்பம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறதா ஐக்கிய நாடுகள் சபையோட மக்கள்தொகை நிதியம் அறிக்கை விட்டிருக்கு.

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழல்ல குழந்தையைப் பெத்து வளர்க்கறதுக்கு பலராலும் இயலாது. அதனால, மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாம, அங்கீகாரமற்ற வழிகள்ல கருக்கலைப்பு செய்யும் அபாயம் ஏற்பட்டிருக்கு. இப்படிச் செய்யும்போது பெண்களின் உடல்நலம் பாதிக்கப்படுறதோட, உயிரிழப்பும் ஏற்படலாம்னு மருத்துவர்கள் எச்சரிக்கை செஞ்சிருக்காங்க” என்று எச்சரிக்கைத் தகவல் தந்தாள் வித்யா.

டார்க்
டார்க்

“பெண்கள் நிலை இப்படினா, குழந்தைகளோட நிலையும் பரிதாபம்தான். கொரோனாவோட எதிர் விளைவுகள்ல ஒண்ணா... பல்வேறு நாடுகள்ல குழந்தை களுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைக்கல. இங்கிலாந்து நாட்டிலேயே ஊட்டச்சத்துக் குறைவு காரணமா, 2,500 குழந்தைங்க நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகள்ல சேர்க்கப்பட்டிருக்காங்க. தமிழ்நாட்டுலகூட பள்ளிக்கூட மதிய உணவு சாப்பிடுற குழந்தைகள், இப்ப பள்ளிக்கூடமெல்லாம் மூடியிருக்கிறதால உணவின்றி சிரமப்படுறாங்க'' என்று கவலைக்குரலில் சொன்ன விமல்,

``சரி, வினுவை உற்சாகப்படுத்துறதுக்காகக் கேட்கிறேன், லேட்டஸ்ட்டா என்ன சினிமா பார்த்தே...” என்றாள்.

“சூஃபியும் சுஜாதையும் பார்த்திருப்பாள். ஸ்டேடஸ்ல தேவ் மோகன் படத்தைப் பார்த்தேனே!” என்று சிரித்தாள் வித்யா.

“தேவ் மோகன் நடிப்புக்காக ஸ்டேடஸ்ல போடல. அந்தப்படத்தோட இசையில் உருகிப்போனதுக்காகத்தான் அந்த ஸ்டேட்டஸ். எங்க வீட்டுக்கு எதிரில் பல வருஷமா பள்ளிவாசல்ல பாங்கு ஒலிக்கக் கேட்டிருக்கேன். ஆனா, இந்தப் படத்தில் வந்த பாங்கு... அடடா, சொல்ல வார்த்தைகளே இல்லை. விமல், அதை நீ கேட்டியா?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இல்லை வினு. இனிமேல்தான் கேட்கணும்.”

“நான் படம் பார்த்துட்டேன் விமல். சாதாரணமான காதல் கதைதான். இசைதான் அதை அடுத்த இடத்துக்கு எடுத்துட்டுப் போயிருச்சு. அதிதி ராவ் அதிக மேக்கப்போ, ஆடம்பர உடைகளோ இல்லாம அமர்க்களமா இருக்காங்க. நேரம் கிடைக்குறப்ப படத்தைப் பாரு” என்றாள் வித்யா.

“எனக்கு இப்போ நேரம் இல்லை வித்யாக்கா. `டார்க்’ங்கற வெப் சீரிஸ் பார்த்துட்டு இருக்கேன். டைம் மெஷின் மூலம் கடந்த காலம், எதிர்காலம்னு மனிதர்கள் போயிட்டும் வந்துட்டும் இருக்காங்க. இப்படி ஒரு கதையை எழுத எவ்வளவு உழைப்பும் திறமையும் வேணும்னு யோசிச்சிட்டிருக்கேன். கேத்ரின் சல்லிவன் பற்றி உங்ககிட்ட சொல்லணும் நினைச்சிட்டிருந்தேன். மறந்தே போயிட்டேன்...” - விமல்

“பெயரைக் கேள்விப்பட்ட மாதிரி இருக்கே...” - வித்யா.

“இந்தக் கொரோனா காலகட்டத்துல கேத்ரின் செய்த சாதனை அவ்வளவா வெளியில தெரியல. உலகின் ஆழமான கடல் பகுதி... பசிபிக் பெருங்கடல்ல இருக்கிற மரியானா டிரெஞ்ச். 11 கி.மீ ஆழத்திலிருக்கும் இந்தப் பகுதிக்குப் போய் திரும்பியிருக்காங்க கேத்ரின். கடல்ல வெறும் 10 மீட்டர் ஆழம் போனாலே தண்ணீரோட அழுத்தம் ரெண்டு மடங்கு இருக்கும். இதுல 11 கி.மீ ஆழத்துக்குப் போனா... மனிதர்கள் நசுங்கி, சட்னியாகிடுவாங்க. அவ்வளவு அழுத்தம் இருக்குற பகுதிக்கு நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர் விக்டர் வெஸ்கோவோவுடன் கைகோத்துப் போயிட்டு வந்திருக்காங்களாம் கேத்ரின்” என்று விமல் முடிக்க...

“வாவ்...” என்று வித்யாவும் வினுவும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

“ஏற்கெனவே விண்வெளி வீராங்கனையா விண்வெளியில் நடந்த முதல் பெண் இந்தக் கேத்ரின் தெரியுமோ” என்று மேலும் வியக்கவைத்தாள் விமல்.

“அப்படின்னா விண்ணிலும் மண்ணிலும் உயரத்திலும் ஆழத்திலும் சாதனை படைச்ச ஒரே பெண் கேத்ரின். கிரேட். அருமையான வாழ்க்கை” என்று சிலாகித்த வித்யாக்கா,

“கேத்ரினுக்கு என்ன வயசு, விமல்?” என்றாள்.

“33 வயதில் விண்வெளி நடை. 69 வயதில் மரியானா டிரெஞ்ச் சாதனைன்னு கலக்கிட்டார் கேத்ரின்'' - ஆச்சர்ய தகவல் தந்த விமல்,

``வினுவுக்கு வேலை இருக்குன்னு சொன்னாளே, நாம கிளம்பலாமா வித்யாக்கா?” என்றாள்.

“ஓகே... பை... விமல், வினு.”

“பை வித்யாக்கா” என்று வினுவும் விமலும் இணைப்பைத் துண்டித்தனர்.

(அரட்டை அடிப்போம்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism