Published:Updated:

தங்கமே வா... தலைமையேற்க வா!

தங்கமே வா... தலைமையேற்க வா!
பிரீமியம் ஸ்டோரி
தங்கமே வா... தலைமையேற்க வா!

#Lifestyle

தங்கமே வா... தலைமையேற்க வா!

#Lifestyle

Published:Updated:
தங்கமே வா... தலைமையேற்க வா!
பிரீமியம் ஸ்டோரி
தங்கமே வா... தலைமையேற்க வா!

சஹானா

கிண்டி சிறுவர் பூங்காவில் வினுவும் விமலும் நின்றுகொண்டிருந்தார்கள். 5 நிமிடங்களுக்குப் பிறகு வித்யாவும் வந்து சேர்ந்தார்.

“என்ன வினு, பார்க்குக்கு வரச் சொல்லி ருக்கே... இங்கே நீ வந்ததே இல்லையா?” என்று வியப்புடன் கேட்டார் வித்யா.

“வித்யாக்கா, இகுவானா என்ற ராட்சசப் பல்லிக்கான பூங்காவைப் புதுசா ஆரம்பிச்சிருக்காங்க. இது அமேசான் காடுகள்ல வாழக்கூடியதாம். அதுங்களை ரொம்பப் பக்கத்தில் நின்னு பார்க்கறதுக்கு ஏற்பாடு பண்ணிருக்காங்க. அதைப் பார்க்கலாம்னுதான் வரச் சொன்னேன்” என்றாள் வினு.

“ம்... இன்ட்ரஸ்டிங். கிட்ட போனா ஒண்ணும் ஆபத்து இல்லையே?”

“இகுவானாவால நமக்கு ஆபத்து இல்லை. நம்மால அதுங்களுக்கு ஆபத்து வராம இருந்தா சரி” என்றாள் விமல்.

மூவரும் இகுவானா பகுதியைப் பார்வை யிட்டனர். அங்கே ஓர் இளம்பெண் இகுவானாக்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்.

“அம்மாடி! எவ்வளவு பெரிய பல்லி! இது என்ன சாப்பிடும் விமல்?”

“சின்னதா இருக்கும்போது பூச்சி, முட்டை, இலை, இறைச்சி எல்லாம் சாப்பிடும். வளர்ந்த பிறகு, தாவரங்கள் மட்டுமே இதுக்கு உணவு” என்று சொல்லிவிட்டு, ஒரு மரத்தடியில் போய் அமர்ந்தாள் விமல்.

“வித்யாக்கா, உங்க தீபாவளி பட்சணத்தை எடுங்க. ரொம்பப் பசிக்குது” என்ற வினுவிடம் பாத்திரத்தைக் கொடுத்தார் வித்யா.

தங்கமே வா... தலைமையேற்க வா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அமெரிக்கர்கள் நல்ல விஷயம் பண்ணிருக்காங்க. கமலா ஹாரிஸை துணை அதிபராக்கிட்டாங்க.”

“ஒரு பெண்ணைத் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வர அமெரிக்கர் களுக்கு இத்தனை வருஷங்களாகியிருக்கு! பெண்கள் விஷயத்துல அமெரிக்கர்கள் பிற் போக்கான மனநிலையிலதான் இருக்காங்க. இலங்கை, இந்தியா மாதிரி நாடுகள்லகூட 50 வருஷங்களுக்கு முன்னாலேயே பெண்கள் பிரதமர்களா வந்துட்டாங்க. அமெரிக்கர்கள் இப்போதான் துணை அதிபரா ஒரு பெண்ணைக் கொண்டுவந்திருக்காங்க” என்றாள் விமல்.

“நீ சொல்றதும் சரிதான் விமல். கமலா ஹாரிஸ் எப்பவும் ரொம்ப சந்தோஷமாகப் பேசறாங்க. அவங்க ஜெயிச்ச விஷயத்தை ஜோ பைடன்கிட்ட எவ்வளவு இயல்பா, ஜாலியா சொன்னாங்க தெரியுமா? நம்ம ஊர்ல இந்த மாதிரி ஒரு அதிகாரிகிட்டகூடப் பேச முடியாது!”

“ஆமாம். ஜோ பைடனோட மனைவி ஜில் பைடனும் சாதாரணமானவங்க இல்ல. பேராசிரியர். முதல் குடிமகளா இருந்தாலும் தன்னுடைய வேலையை விடமாட்டேன்னு சொல்லிருக்காங்க. நிறைய படிச்ச, வேலைபார்க்கக்கூடிய முதல் குடிமகளா ஜில் பைடன் இருக்கப்போறாங்க!”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நல்ல விஷயம் வினு. அர்ஜென்டினாவிலும் ஒரு மாற்றம் வரப்போகுது. லத்தீன் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான நாடுகள்ல கருக்கலைப்புக்குத் தடை இருக்கு. கியூபா, உருகுவே, கயானா நாடுகள் மட்டுமே ஆரம்பகால கருக் கலைப்பை அங்கீகரிக்குது. அர்ஜென்டினாவுல பாலியல் வன்கொடுமை, பெண்ணின் மோசமான உடல்நிலை போன்ற காரணங்களுக்கு மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். அங்கே ஒவ்வொரு வருஷமும் சட்டத்துக்குப் புறம்பான 40,000 கருக்கலைப்புகள் நடக்குது. பாதுகாப்பற்ற வகையில் செய்யப்படும் இந்தக் கருக்கலைப்புகள் மூலம் உயிரிழப்புகள் அதிகமாகியிருக்கு.

மரிக் லூகாஸ் ரிஜ்னெவல்ட்
மரிக் லூகாஸ் ரிஜ்னெவல்ட்

அர்ஜென்டினா பெண்கள் 15 வருஷமா கருக்கலைப்பு உரிமைக் காகப் போராடிட்டு வர்றாங்க. கருக்கலைப்புச் சட்டம் விரைவில் நிறைவேறும்னு அந்த நாட்டு அதிபர் சொல்லிருக்கார். போராட்ட வெற்றியைக் கொண்டாடிட்டு இருக்காங்க பெண்கள்” என்ற விமல், காராபூந்தியைச் சாப்பிட ஆரம்பித்தாள்.

``கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலை எப்படிப் போயிட்டிருக்குப்பா?” என்று வித்யா கேட்டவுடன்...

“இந்தியா உட்பட பல நாடுகளும் மருந்து கண்டுபிடிக்கிறதுல தீவிரமா இருக்காங்க வித்யாக்கா. அமெரிக்க நிறுவனம் 94.5 சதவிகிதம் பலன் தரும் மருந்தைக் கண்டுபிடிச்சிட்டதா சொல்லுது. ரஷ்ய நிறுவனம் 92 சதவிகிதம் பலன் தர்ற மருந்தைக் கண்டுபிடிச்சிட்டதா சொல்லுது” என்று வினு சொல்லிக் கொண்டிருக்கும் போதே உற்சாகமானார் வித்யா.

 ஜில் பைடன்
ஜில் பைடன்

“அப்படின்னா சீக்கிரமே தடுப்பூசி வந்துடும்னு சொல்லு!”

“அதுதான் இப்போ சிக்கல். உலக சுகாதார நிறுவனம் அறிவிச்சிருக்கிற அறிவுசார் காப்புரிமை ஒப்பந்தப்படி, மருத்தைக் கண்டுபிடிச்ச நிறுவனம் 20 வருஷங்களுக்குச் சந்தைப் படுத்தலாம்னு சொல்லுது. அதுபடி பார்த்தா பணக்கார நாடுகளுக்குதான் அதிகமான பலன் கிடைக்கும். இந்தியா மாதிரி நாடுகள், அந்த மருந்தை அதிக விலைக்கு வாங்கிப் பயன்படுத்த முடியாது. கொரோனா தடுப்பூசி மருந்தை வணிகரீதியா பார்க்காம, மனிதாபிமானத்தோட அணுகணும்னு கோரிக்கை வைக்கிற இந்தியா, இந்தக் காப்புரிமையிலிருந்து விலக்கு கேட்குது வித்யாக்கா. மருந்து அரசியல் அவ்வளவு ஈஸியான விஷயம் இல்ல” என்ற வினு, தண்ணீர் குடித்தாள்.

‘‘இதெல்லாம் எப்ப மாறும்னே தெரியல. லேட் ஆகுது. ஒரு நியூஸ் சொல்லிடறேன்... டெல்லியில் சீமா டாகாங்கிற ஹெட் கான்ஸ்டபிள்கிட்ட காணாமல்போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. காணாமல்போன குழந்தைகள்ல 76 பேரை, ரொம்பக் கஷ்டப்பட்டு, மூணு மாசத்துலயே கண்டுபிடிச்சிட்டாங்க. இதில் 56 பேர் 14 வயசுக்கும் கீழே உள்ளவங்க. சீமாவோட கடின உழைப்பைப் பாராட்டி, புரொமோஷன் கொடுத்திருக்காங்க...’’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் வித்யா.

``சின்சியர் சீமாவை நினைச்சா பெருமையா இருக்கு. காணாமல்போன குழந்தைள்கன்னு சொன்னதும் எனக்கு கென்யா தலைநகர் நைரோபி நினைவுக்கு வந்துருச்சு. அங்கே வீடு இல்லாம ஏராளமானவங்க சாலையோரத்துலதான் வாழுறாங்க. இவங்கள்ல 60,000 குழந்தைகளும் இருக்காங்க. இங்கே குழந்தை கடத்தல் பெரிய அளவுல நடந்துட்டு வருது. தூங்கிட்டிருக்கும்போது, தூக்கிட்டு ஓடிடுது கடத்தல் கும்பல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படிக் காணாமல் போகும் குழந்தைகளை யாருமே மறுபடியும் பார்க்கலை. எங்கே, யார், எப்படிக் கடத்துறாங்கன்னே அந்த ஏழைத் தாய்களுக்குத் தெரியல. குழந்தையைத் தொலைச்சு பல வருஷங்கள் ஆகியும் அந்த துக்கத்தை அவங்களால தாங்கிக்க முடியல. குழந்தை என்ன ஆச்சு, எப்படி இருக்குன்னு யோசிச்சே எங்க காலம் நிம்மதியில்லாம போயிட்டிருக்குன்னு ஒவ்வொரு தாயும் சொல்லும்போது பேட்டி எடுத்தவரும் சேர்ந்து கண்ணீர்விட்டார். எனக்கும் அழுகை வந்துருச்சு வித்யாக்கா. குழந்தை கடத்தலைத் தடுக்க திட்டங்கள் எல்லாம் போட்டிருக்காங்க. ஆனா, இந்த ஏழைத் தாய்களின் கண்ணீரை யாராலும் துடைக்க முடியல” என்றபோது விமலின் குரல் கரகரத்தது.

“கொடுமையா இருக்கு விமல்” என்ற வித்யாவும் அமைதியானார்.

“சரி... ஹேப்பியா ஒரு நியூஸ் சொல்றேன். இந்த வருஷம் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி புத்தகங்களுக்கான புக்கர் பிரைஸ் ‘தி டிஸ்கம்ஃபர்ட் ஆஃப் ஈவ்னிங்’ என்ற டச்சு புத்தகத்துக்குக் கிடைச்சிருக்கு. நெதர்லாந்தைச் சேர்ந்த ‘மரிக் லூகாஸ் ரிஜ்னெவல்ட்’ என்ற 29 வயது எழுத்தாளரின் முதல் நாவல் இது.

இந்த எழுத்தாளர் தன்னை ஒரு பெண்ணா மட்டுமே நினைக்கலை. தன்னை பெண்+ஆண் என்றே நினைக்கிறாங்க. அதனால, தன்னை ‘அவன், அவள்’னு சொல்றதுக்குப் பதிலா, ‘அவர்கள்’னு (they/them) பன்மையில சொல்லணும்னு எப்பவுமே அவங்க வலியுறுத்துவங்க. இங்கிலாந்தைச் சேர்ந்த `மிஷெல் ஹட்சிசன்’ என்ற பெண் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்துல மொழிபெயர்த்திருக்காங்க. எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் இந்தப் பரிசு சமமா பகிர்ந்தளிக்கப்படுது’’ என்று வினு சொல்லும்போதே குறுக்கிட்டாள் விமல்.

``எனக்குத் தெரியுமே... அவங்களும் என்ன மாதிரியே ஹாரிபாட்டர் ரசிகர். ஸ்கூல்ல படிக்கும்போதே லோக்கல் லைப்ரரிக்குப் போய் ஹாரிபாட்டர் புக்ஸ் படிச்சாங்களாம். அதுதான் அவங்களை எழுத்தாளரா மாத்தியிருக்கு!’’

“பிரமாதம்! இந்த வருஷம் புக்கர் ஃபைனல் லிஸ்ட்ல 6 பேர்ல 4 பெண்கள் இருந்தாங்க. கலக்குறாங்க இல்ல! சரி, ஏதோ புதிர் போடறேன்னு சொன்னியே வினு...”

“இன்னிக்கு நேரம் இல்ல வித்யாக்கா. நெக்ஸ்ட் மீட்ல சொல்றேன். இப்போ கிளம்பலாமா? மீதி பட்சணத்தை நான் எடுத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு நடந்தாள் வினு. மூவரும் தங்கள் வண்டிகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

(அரட்டை அடிப்போம்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism