Published:Updated:

வினு விமல் வித்யா : பசிச்சா எடுத்துக்கோங்க... பிரியாணி இலவசம்!

வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா

சஹானா

வினு விமல் வித்யா : பசிச்சா எடுத்துக்கோங்க... பிரியாணி இலவசம்!

சஹானா

Published:Updated:
வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா
திய உணவுக்கு அழைத்திருந்தார் வித்யா. வினுவும் விமலும் இனிப்பு களுடன் வித்யா வீட்டுக்கு வந்தார்கள்.

“என்ன விசேஷம்... சாப்பிடக் கூப்பிட்டிருக் கீங்க வித்யாக்கா?”

“விசேஷம்னாதான் கூப்பிடணுமா என்ன... பிரியாணி செஞ்சேன். அதான் வரச் சொன் னேன்” என்று சிரித்தார் வித்யா.

“நீங்க எது செஞ்சாலும் கலக்கிடுவீங்க வித்யாக்கா... இன்னிக்கு நான் காலையிலிருந்தே பட்டினியா கிடக்கேன், ஒரு பிடி பிடிக்கப் போறேன்” என்றாள் வினு.

மூவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். “அடடா! உங்க கைப்பக்குவத்துக்கு மோதிரம் போடணும் வித்யாக்கா” என்றாள் விமல்.

வினு விமல் வித்யா : பசிச்சா எடுத்துக்கோங்க... பிரியாணி இலவசம்!

“உங்க மனசு மாதிரியே கோயம்புத்தூர்ல ஸஃப்ரீனாங்கிற பெண், பிரியாணி செஞ்சு விக்கறாங்க வித்யாக்கா. இருபது ரூபாய்க்கு ஒரு பொட்டலம் பிரியாணிங்கிறதை நினைச்சுக்கூடப் பார்க்க முடியல. இது எப்படிக் கட்டுப்படி ஆகும்னு யோசனையா இருக்கு. அது மட்டுமில்லே, தினமும் 40 பிரியாணி பொட்டலங்களை, இலவசமா தர்றாங்க. ‘பசிச்சா எடுத்துக்கோங்க’னு போர்டு எழுதி, பக்கத்தில் பொட்டலங்களை வெச்சிருக்காங்க. காசு இருக்கிறவங்க, இல்லாதவங்கனு எந்தப் பாகுபாடும் கிடை யாது. பசிச்சா எடுத்துக்க வேண்டியதுதான்னு சொல்றாங்க. குறைஞ்ச லாபம் எங்களுக்குப் போதும்னு நினைக்கிறதால இதையெல்லாம் செய்ய முடியுதுன்னு சொல்றாங்க. ரொம்ப நல்ல மனசு இவங்களுக்கு... நல்லா இருக்கணும்” என்று பிரியாணியைச் சுவைத்துக்கொண்டே அடுத்த விஷயத்தை ஆரம்பித்தாள் வினு.

“இதுதான் போன வாரம் செம வைரலான நியூஸ். சரி, ஒரு குட்டிப் பெண்ணோட கேள்விகள் உலகத்தை அசைச்சுப் பார்த் திருக்குத் தெரியுமா... அந்த வீடியோவும் செம வைரலாச்சு!”

“நான் பார்க்கலையே...” என்றாள் விமல்

“மேன் மேட்னு என்னோட பாடப் புத்தகத்துல அடிக்கடி வருதே... ஆண்கள்தான் எல்லாத்தையும் உருவாக்கினாங்களா? பெண்கள் எதுவுமே செய்யலையா? ஆண்களும் பெண்களும் சேர்ந்து செஞ்சிருந்தா, `ஹியூமன்’னுதானே எழுதணும்னு கேட்கிறா! ஆறு வயசு குழந்தை எவ்வளவு யோசிக்குது பாருங்க. தமிழில்கூட மனிதன் உருவாக்கின துன்னு எழுதாம, மனித இனம்னு எழுதினா தான் சரியா வரும்!” என்றாள் வினு.

“கிரேட்! நான்கூட இப்படி யோசிச்சதே இல்ல. நானும் ஒரு குழந்தையைப் பத்திச் சொல்லிடறேன்... இங்கிலாந்துல லில்லி ரிச்சர்டு குடும்பம் செளத் வேல்ஸ் கடற்கரைக் குப் போயிருக்கு. அங்கே நாலே வயசான லில்லி, பாறையில ஒரு காலடித் தடத்தைக் காட்டி, டைனோசரோடதான்னு கேட்டி ருக்கா. லில்லியோட அப்பாவும் அம்மாவும் அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்காங்க. உடனே நேஷனல் மியூசியத்துக்குத் தகவல் கொடுத்தாங்க. அங்கயிருந்து நிபுணர்கள் வந்தாங்க. 22 கோடி வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்த டைனோசரின் பின்னங்கால் தடம்னு சொல்லிருக்காங்க. இந்த டைனோசர் படிமத்தை எடுத்து, கண்டு பிடிப்பாளர் லில்லின்னு பொறிக்கப் போறாங்க. டைனோசர் படிமத்தைக் கண்டு பிடிச்ச இளம் கண்டுபிடிப்பாளர் இந்த லில்லிதான்!” - இன்னும் கொஞ்சம் பிரியாணியை பரிமாறியபடி தொடர்ந்தார் வித்யா.

“ இது குட்டீஸ்களின் வாரம் போலிருக்கு. பிரபலமான ஃபோர்ப்ஸ் இதழ் இந்தியாவின் தலை சிறந்த 30 ஆளுமைகளின் பட்டியலை வெளியிட்டி ருக்கு. அதுல இடம் பிடிக்காத குழந்தைகளையும் இளைஞர் களையும் கொண்ட ஒரு துணைப் பட்டியலையும் இந்திய ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கு. இதுல ஒன்பது வயசு காலநிலை ஆர்வலர் லிசிபிரியா இடம்பிடிச்சிருக்காங்க!”

“சூப்பர்! வித்யாக்கா, காஷ்மீர் பெண்கள் இப்போ பல சாதனை களைச் செஞ்சிட்டு வர்றாங்க. சமீபத்துல ஒரு பெண், பஸ் டிரைவரா ஆனாங்க. இப்போ 25 வயசு ஆயிஷா பைலட்டா ஆகியிருக்காங்க. இது சவாலான வேலையா இருந்தாலும் சுவாரஸ்யமான வேலைனு சொல் றாங்க. 200 உயிர்களைப் பத்திரமா அழைச்சிட்டு வரணும்கிற பொறுப் புணர்வும் எனக்கு இருக்குன்னு அழகா சொல்றாங்க ஆயிஷா” என்றாள் விமல்.

“மியான்மர்ல மறுபடியும் ராணுவம் ஆட்சியைப் பிடிச்சிருக்குப் பார்த்தீங்களா... 1962-லிருந்து 2010 வரைக்கும் 38 வருஷங்கள் ராணுவம் தான் ஆட்சி செஞ்சுச்சு. அடக்கு முறையில மக்கள் அல்லல்பட்டாங்க. அந்த நாட்டோட தலைமை ஆலோசகரான ஆங் சான் சூகியும் வீட்டுச் சிறையில தான் இருந்தாங்க. 2015-ம் வருஷம் மக்களாட்சி அரசாங்கம் அமைஞ்சாலும், பல பகுதிகள்ல ராணுவக் கட்டுப்பாடு இருந்துகிட்டுதான் இருந்துச்சு. சூகி ஆட்சியில் தமிழர்கள் நிம்மதியா இருந்தாங்க. ஆனா, ரோஹிங்கா முஸ்லிம்கள் ரொம்பவும் பாதிக்கப்பட்டாங்க. இப்போ ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய தால மறுபடியும் சூகி வீட்டுச் சிறையில இருக்காங்க. எப்போ என்ன நடக்குமோனு மக்கள் பயத்துல இருக்காங்க. இனி என்ன ஆகுமோ தெரியல. சரி, வினு என்ன படம் பார்த்தே...” என்றார் வித்யா.

லில்லி ரிச்சர்டு குடும்பம் - டைனோசர் படிமம்
லில்லி ரிச்சர்டு குடும்பம் - டைனோசர் படிமம்

“படம் இல்ல வித்யாக்கா. நானும் கொரியன் சீரிஸுக்குள் கால் வெச்சிட்டேன். என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சொல்ற அளவுக்கு கொரியன் சீரிஸ்ல என்னதான் இருக்குன்னு பார்க்கலாம்னு நினைச்சேன். It’s Okay to Not Be Okay... இதுதான் நான் பார்த்த சீரிஸ். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட அண்ணனை அம்மா ரொம்ப அக்கறையா கவனிச்சுக்கறாங்க. தம்பிக்குப் புரியாத வயசுங்கிறதால தன் மேல அம்மாவுக்குப் பிரியம் இல்லையோன்னு தோணுது. அண்ணன் முன்னால அவங்க அம்மா கொல்லப்படறாங்க. அந்த அதிர்ச்சியில் அவன் பட்டாம்பூச்சிகளைப் பார்த்தாலே பயப்பட ஆரம்பிச்சிடறான். அதனால அண்ணனைக் கூட்டிட்டு பட்டாம்பூச்சிகள் இல்லாத இடமா போய், வேலை செய்யறான் தம்பி. இவங்களுக்குத் திகில் நாவல் எழுதற பொண்ணு அறிமுகம் ஆகறா. அவளோட ஃபேனா இருக்கான் அண்ணன். அவ புத்தகங்களுக்குப் படம் வரையிற வேலையை அண்ணனுக்குக் கொடுக்கறா. மனநல மருத்துவமனையில் வேலை செய்யும் தம்பியைக் காதலிக்கவும் செய்யறா. அண்ணனுக்காகக் காதலை ஏற்கத் தயங்குறான் தம்பி. அந்தப் பெண் அண்ணனையும் தன் சகோதரனா அரவணைச்சுக்கறா. இதனால தம்பியும் அவ காதலை ஏத்துக்கறான். அதுக்கப்புறம் அம்மாவைக் கொன்னது காதலியின் அம்மான்னு தெரிய வருது. அந்த விஷயத்தால அவன் காதலியைப் புறக்கணிக்கல. இந்த விஷயம் அவளுக்குத் தெரியக் கூடாதுன்னு நினைக்கிறான். ஆனா, தெரிஞ்சுடுது. காதலி ரொம்பவும் உடைஞ்சி போயிடறா...”

“அட, கடைசியில் என்ன ஆகுது வினு?”

“ நீங்களே பார்த்துக்கோங்க வித்யாக்கா. ஹீரோயினா வரும் சியோ இஜி சூப்பரா இருக்காங்க. என்ன ஹேர்ஸ்டைல் பண்ணாலும் நல்லா இருக்காங்க. என்ன டிரஸ் போட்டாலும் நல்லா இருக்காங்க. ஹீரோ கிம் சூ ஹுன் மட்டும் என்ன குறைஞ்சவரா என்ன... தேவ் மோகன்லயிருந்து கிம்முக்கு மாறிட்டேன். ஆர்ப்பாட்டம் இல்லாம எல்லோரும் நல்லா நடிக்கிறாங்க. மனநலம் பாதிக்கப்பட்டவங்களை அவ்வளவு நல்லா காட்டி யிருக்காங்க. நேரம் இருந்தா பாருங்க ரெண்டு பேரும்.”

“சரி, பார்ப்போம். இப்ப கிளம்பலாமா வினு? வித்யாக்கா ரொம்ப நல்ல லஞ்ச். ஓகே, பை” என்று கிளம்பினாள் விமல். அவளைத் தொடர்ந்து வினுவும் கிளம்பினாள்.

அரட்டை அடிப்போம்...