Published:Updated:

‘ஏழையின் குழந்தையைவிட ஒரு பணக்கார வீட்டு நாய் அதிக ஊட்டச்சத்துடன் இருக்கிறது!’ - திவ்யா சத்யராஜ்

திவ்யா சத்யராஜ்
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா சத்யராஜ்

தொண்டுள்ளம்

‘ஏழையின் குழந்தையைவிட ஒரு பணக்கார வீட்டு நாய் அதிக ஊட்டச்சத்துடன் இருக்கிறது!’ - திவ்யா சத்யராஜ்

தொண்டுள்ளம்

Published:Updated:
திவ்யா சத்யராஜ்
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா சத்யராஜ்
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' -வறுமைக்கு எதிரான வலிமையான பாரதியின் வார்த்தைகள் இவை. 'பசிக்கு உணவில்லாமல் இருப்பது மட்டுமல்ல. ஊட்டச்சத்துமிக்க உணவில்லாமல் இருப்பதும் வறுமையே’ என்ற வாதத்தை அழுத்தமாக முன்வைக்கிறார் ஊட்டச்சத்து ஆலோசகரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ்.வறுமைக்கோட்டுக்குக்கீழ் வசிக்கும் மக்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருள்களை வழங்கு வதற்காக `மகிழ்மதி இயக்கம்' என்ற ஒன்றை அண்மையில் தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக, சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 100 பேருக்குத் தலா 5 கிலோ வீதம் 500 கிலோ (வைட்டமின் சத்து செறிவூட்டப்பட்டது) அரிசியை இலவசமாக வழங்கியிருக்கிறார்.

“இது அரசியல் கட்சி, சாதி மதம் சார்ந்த அமைப்பு கிடையாது. ஊட்டச்சத்து ஆலோசகராக என் சொந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தொடங்கப்பட்ட மக்கள் இயக்கம்” - டிஸ்கிளைமருடன் பேச ஆரம்பிக்கிறார் திவ்யா.

“அரசுப் பள்ளிகளில் நான் நடத்திய ஆய்வில் 38 சதவிகிதம் ஆண் குழந்தைகளுக்கும் 40 சதவிகிதம் வளரிளம் பருவப்பெண்களுக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இரும்புச்சத்துமிக்க உணவும் ஊட்டச்சத்து மாத்திரைகளும் கொடுக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தினேன். லாக்டௌனில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை அனுப்பியிருக்கிறேன்.

‘ஏழையின் குழந்தையைவிட ஒரு பணக்கார வீட்டு நாய் அதிக ஊட்டச்சத்துடன் இருக்கிறது!’ - திவ்யா சத்யராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நேரத்தில்தான் மகிழ்மதி இயக்கம் தொடங்கவும் முடிவு செய்தேன். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவைக் கொடுப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம். முதல்கட்டமாக வைட்டமின் சத்துமிக்க அரிசியைக் கொடுத்திருக்கிறோம். அரிசி கொடுத்ததோடு நிற்காமல், அவர்களின் ஊட்டச்சத்து விகிதம் அதிகரிக்கிறதா என்பதையும் கண்காணிப்போம். தேவைப்படுபவர்களுக்கு உணவுப் பொருள்களுடன் வைட்டமின் மாத் திரைகள் வழங்கவும் திட்டமுள்ளது.

சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தை தமிழக கிராமப்புற பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் நோக்கம். இதற்காக என்னுடன் சில தன்னார்வலர்கள் இணைந்திருக்கிறார்கள். இதை என்னுடைய சேமிப்பிலிருந்துதான் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்” எனத் தீர்க்கமாகப் பேசுகிறவர், `மகிழ்மதி இயக்கம்' தொடங்க வேண்டும் என்ற பொறி தோன்றியதற்கான இரண்டு முக்கிய சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்...

“நான் ஒருமுறை சூப்பர் மார்கெட்டுக்குச் சென்றிருந்தேன். பில் கவுன் ட்டரில் எனக்கு முன் வசதியான பெண் ஒருவர் நின்றிருந்தார். அவருடைய ட்ராலியில் வீட்டில் வளர்க்கும் நாய்க்கான விலையுயர்ந்த இறக்குமதி உணவுகள் நிறைந்திருந்தன. வெளியே வந்த அந்தப் பெண்ணிடம், கடைக்கு முன்னால் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இரு குழந்தைகள் கையேந்தினர். அவர் அந்தக் குழந்தைகளைக் கண்டுகொள்ளாமல் காரில் ஏறிச்சென்றுவிட்டார். அந்தச் சம்பவத்தைப் பார்த்தபோது ஓர் ஏழையின் குழந்தையைவிட ஒரு பணக்கார வீட்டு நாய் அதிக ஊட்டச்சத்துடன் இருக்கிறது என்று தோன்றியது.

என்னுடைய உறவினர்கள் திருமணங் களுக்குச் செல்லும்போது ஆடம்பரத்துக்காக பிரமாண்டமாக விருந்து பரிமாறப்படும். அவற்றில் பெரும்பாலானவை வீணாகி குப்பையில் கொட்டப்படுவதைப் பார்த் திருக்கிறேன். அதைப் பார்க்கும்போது அங்கே சாப்பிடக்கூட மனம் வராது. ஒருபுறம் உணவு வீணாகிறது. மற்றொருபுறம் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுதான் மகிழ்மதி இயக்கத்தின் தோற்றம்” - உணர்வுகள் பொங்கப் பேசுகிறார்.

திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ்

`மகிழ்மதி என்ற பெயர் பாகுபலியின் நீட்சியா...' என்றதற்கு, ‘`அம்மா மகேஸ்வரியின் பெயரை நினைவுப்படுத்தும் வகையிலும் அதே நேரம் தமிழ்ப் பெயராகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சங்க இலக்கியப் பெயர்களைத் தேடினேன். அப்பா நடித்த 'பாகுபலி' படத்தில் வரும் நாட்டின் பெயரும் மகிழ்மதி. ஆக, அப்பா - அம்மா இருவரையும் நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்று மகிழ்மதி என்ற பெயரையே பதிவு செய்துவிட்டேன்” - சந்தோஷம் பகிர்ந்தவரிடம்...

`உங்கள் முயற்சிக்கு அப்பாவின் கருத்து என்னவாக இருந்தது' - கேட்டதற்கு, “சிறு வயதிலிருந்தே சந்தோஷமான சுதந்திரமான வளர்ப்பையே எனக்குக் கொடுத்தவர் அப்பா. அவருடைய தார்மிக ஆதரவு எனக்கு எப்போதுமே இருக்கும். அதேநேரம் என் அப்பாவின் புகழையோ, சம்பாத்தியத்தையோ என் வளர்ச்சிக்காக எப்போதுமே பயன் படுத்தியது கிடையாது. மகிழ்மதி இயக்கத்திலும் என்னுடைய நிலைப்பாடு இதுதான்” - உறுதியுடன் நிறைவு செய்தார் திவ்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism