Published:Updated:

பட்டுச்சேலை, பிரியாணி பிளேட், மண் குவாரி... டிசைன் டிசைனா கேக் - தூள்கிளப்பும் திவ்யா

கேக்
பிரீமியம் ஸ்டோரி
கேக்

#Lifestyle

பட்டுச்சேலை, பிரியாணி பிளேட், மண் குவாரி... டிசைன் டிசைனா கேக் - தூள்கிளப்பும் திவ்யா

#Lifestyle

Published:Updated:
கேக்
பிரீமியம் ஸ்டோரி
கேக்

கிறிஸ்துமஸ் என்றதுமே கேக் தான் முதலில் நினைவுக்கு வரும். கேக் என்றால் வட்டமாகவோ, சதுரமாகவோ இருக்க வேண்டும். என்ற காலமெல்லாம் போயாச்சு. விருப்பமான தீமில் கேக்குகளை வடிவமைப்பது தான் இப்போதைய டிரெண்ட். கார்ட்டூன் கேக், ரெப்ளிக்கா கேக், தீம் கேக் என விதவிதமான கேக்குகளை வடிவமைக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த கேக் டிசைனர் திவ்யா.  தான் வடிவமைத்த கேக்குகள் பற்றியும் மக்களிடம் தீம் கேக்குகளுக்கு இருக்கும் வரவேற்பு பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

பட்டுச்சேலை, பிரியாணி பிளேட், 
மண் குவாரி... டிசைன் டிசைனா கேக் - தூள்கிளப்பும் திவ்யா
பட்டுச்சேலை, பிரியாணி பிளேட், 
மண் குவாரி... டிசைன் டிசைனா கேக் - தூள்கிளப்பும் திவ்யா

‘`எம்.டெக் படிச்சிருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு, ஹோம் மேக்கரா இருந்தேன். விதவிதமாக சமைக்கிறதும், கிராஃப்ட் வேலைப்பாடுகள் செய்யுறதும் சின்ன வயசுலேருந்தே பிடிக்கும். வித்தியாசமான உணவுகளைத் தேடி சமைச்சு, போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துட்டு இருந்தேன். அப்படி ஓர் ஆர்வத்தில் செய்ய ஆரம்பிச்சதுதான் கேக் பேக்கிங்கும்.

நான் வடிவமைக்கும் கேக்கு களின் டிசைன்கள் தனித்துவமா இருக்கணும்னு முடிவு பண்ணினேன். கேக் செய்ய ஆரம்பிக்கும் முன்பே அதன் வடிவத்தை வரைஞ்சு நுணுக்கமான விஷயங்களைச் சேர்ப்பேன். ஒவ்வொரு டிசைனையும் கைகளால் உருவாக்கறேன். கேக் தயாரிக்க வனஸ்பதி பயன்படுத்த மாட்டேன். முழுக்க முழுக்க வெண்ணெய்தான். சுகர் ஃப்ரீ கேக்குகள், சிறுதானிய கேக்குகள்கூட செய்யுறேன்’’ என்ற திவ்யா, தீம் கேக் பக்கம் கவனம் திரும்பிய கதை பகிர்கிறார்.

‘`தோழியின் மகள் பிறந்த நாளைக்கு கேக் செய்யச் சொல்லிவந்த முதல் ஆர்டர் அது. குழந்தையை சர்ப்ரைஸ் பண்ணணும்னு யோசிச்சேன். குழந்தைக்குப் பிடிச்ச டெடி டிசைனில் கேக் செய்து, அதை கலர் மிட்டாய்களால் அலங்கரிச்சுக் கொடுத்தேன். அதுதான் ஆரம்பம்.

பட்டுச்சேலை, பிரியாணி பிளேட், 
மண் குவாரி... டிசைன் டிசைனா கேக் - தூள்கிளப்பும் திவ்யா
பட்டுச்சேலை, பிரியாணி பிளேட், 
மண் குவாரி... டிசைன் டிசைனா கேக் - தூள்கிளப்பும் திவ்யா
பட்டுச்சேலை, பிரியாணி பிளேட், 
மண் குவாரி... டிசைன் டிசைனா கேக் - தூள்கிளப்பும் திவ்யா

கஸ்டமர்கள் கேட்கும் கான்செப்ட்டை க்ரீம் பேஸ்ட் பயன்படுத்தி கேக்கின் மீது படமாக வரைஞ்சு கொடுக்குறதுதான் அதுவரை நடைமுறையில் இருந்துச்சு. ஆனா, நான் சுகர் பேஸ்ட் பயன்படுத்தி, படத்துக்குப் பதிலா சின்னச் சின்ன உருவங்களைச் செய்து கேக்குகளை அழகுபடுத்தினேன்.

இன்னொரு ஃபிரெண்டுக்கு அவங்க அப்பா உருவத்தை கேக்கில் ரெப்ளிக்காவா பண்ணிக் கொடுத்தேன். அப்படியே அப்பா மாதிரி இருக்குன்னு நெகிழ்ந்துட்டாங்க. இதுவரைக்கும் 3,000-க்கும் மேலான டிசைன் கேக்குகளை உருவாக்கியிருக்கேன். யாரையும் வேலைக்கு வைக்காம, எந்த ஆர்டர் வந்தாலும் நானேதான் செய்யுறேன். அதுதான் எனக்கு திருப்தி'' என்கிறார்.

திவ்யாவின் லேட்டஸ்ட் அட்ராக்‌ஷன் அவர் செய்கிற கல்யாண கான்செப்ட் கேக்குகள். ‘`பட்டுச்சேலை போல வடிவமைக் கப்பட்ட கேக், மண் குவாரி டிசைன் கேக், சிக்கன் கேக், பிரியாணி பிளேட் போல வடிவமைக்கப்பட்ட கேக், கப்பல் கேக்னு நிறைய இருக்கு. இன்றைய மணமக்கள் வெடிங் தீமுக்கேற்ப கேக் ஆர்டர் பண்றாங்க.

பாடலாசிரியர் விவேக் சாருக்கு அவரது உருவத்தி லேயே நான் வடிவமைச்சுக் கொடுத்த கேக்கை நிறைய பேர் பாராட்டினாங்க.

விஜய் சேதுபதி சார் அந்த கேக்கை ரொம்ப ஆச்சர்யமா பார்த்தாராம்.

நிஷா கணேஷ், அவங்க கணவர் கணேஷ் வெங்கட் ராமுக்கு ஜிம் தீம்ல கேக் கேட்டாங்க. அதுக்கும் நிறைய பாராட்டு’’

-பெருமையாகச் சொல்பவர், கிறிஸ்துமஸுக் காக ஸ்நோ மேன், கிறிஸ்துமஸ் தாத்தா, இயேசுவின் பிறப்பு, ஸ்டார்ஸ் என கான்செப்ட் கேக் மேக்கிங்கில் பிசியாக இருக்கிறார்.