Published:Updated:

``ஓ... இதனால்தான் பெண்களுக்கு டெடி பியரை பிடிக்கிறதா?"- இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே!

டெடி பியர்

எத்தனையோ பொம்மைகள் இருக்கும்போது டெடி மேல மட்டும் பொண்ணுங்களுக்கு ஏன் இவ்ளோ லவ்வு?

``ஓ... இதனால்தான் பெண்களுக்கு டெடி பியரை பிடிக்கிறதா?"- இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே!

எத்தனையோ பொம்மைகள் இருக்கும்போது டெடி மேல மட்டும் பொண்ணுங்களுக்கு ஏன் இவ்ளோ லவ்வு?

Published:Updated:
டெடி பியர்

``டெடி பியரா நான் இருந்தா..." எனப் பசங்களே ஏங்கிப்பாடும் அளவுக்கு இளம்பெண்கள் மத்தியில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றன ``டெடி பியர்" வகை பொம்மைகள். இன்று பல டெடி பொம்மைக் கடைகள் இயங்கிக்கொண்டிருப்பதே `லிட்டில் பிரின்சஸ்' என்று தம்மைத் தாமே கூறிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கும் பெண்களை நம்பித்தான். அந்த அளவுக்கு இந்தப் பெண்களுக்கு டெடி மீது லவ்வோ லவ்வு... அவ்வளவு லவ்வு!

டெடி
டெடி

இப்போதெல்லாம் ஆண்கள் தங்கள் க்ரஷ் மற்றும் காதலிகளை இம்ப்ரெஸ் செய்ய டெடி பியரை மிகப்பெரிய ஆயுதமாகவே பயன்படுத்தத் தொடங்கிட்டாங்க. இதற்காகவே கடை கடையாக ஏறி ``ஹல்லோ, அந்தக் கரடி பொம்மை என்ன வெல?" என்று கேட்டு அதிக விலையாக இருந்தாலும் பேரம் பேசி வாங்கும் அளவுக்கு தீயா வேலை செய்றாங்க. ஆனால், ``நீ பழநிக்கே பால் காவடி எடுத்தாலும் ஒண்ணும் நடக்காது ராஜா" என்ற ரேஞ்சில் ஆண்கள் எவ்வளவுதான் அலைஞ்சி திரிஞ்சி அழகான டெடியை வாங்கிக்கொடுத்தாலும் நம்ம புள்ளீங்க தரும் முத்தமும், அணைப்பும் டெடிக்கு மட்டும்தான். இதனாலேயே பசங்க டெடிக்கு சூனியம் வைக்கும் அளவுக்குக் கடுப்பாகியிருக்காங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``எத்தனையோ பொம்மைகள் இருக்கும்போது டெடி மேல மட்டும் பொண்ணுங்களுக்கு ஏன் இவ்ளோ லவ்வு? தூங்கும்போது கூட அத அணைச்சிக்கிட்டேதான் தூங்கணுமா? அப்படி டெடியில என்னதான் இருக்கோ?" என்று புலம்பும் அளவுக்கு நம்ம பசங்களை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கு இந்தக் கரடி பொம்மை.

டெடி பியர்
டெடி பியர்

``நமக்கு ஏன் டெடியை இவ்வளவு பிடிச்சிருக்கு?" என்று பல பெண்களுக்கே சந்தேகம் இருக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் ஆண்களையும் பெண்களையும் தொந்தரவு செய்து கொண்டிருக்கிற இந்த டெடியைப் பெண்களுக்குப் பிடித்திருப்பதற்குப் பின்னால் செம சுவாரஸ்யமா ஒரு விஷயம் இருக்குங்க!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆலன்-பார்பரா பீஸ்-ங்கிற தம்பதி இந்த `டெடி ரகசியத்தை' தங்களோட ``ஆண்கள் ஏன் கேட்பதில்லை" புத்தகத்துல அழகா சொல்லியிருக்காங்க. அது என்னானு பாத்துடுவோமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெடி பியரும், ஹார்மோனும்

டெடி பியர்
டெடி பியர்

``புரோஜெஸ்டிரான்''- இந்த ஹார்மோன் தாங்க நம்ம கட்டுரையோட ஹீரோ. இது பெண்களுக்கான லவ் ஹார்மோன். இதோட வேலை என்ன தெரியுமா? பெண்களுக்குத் தாய்மை மற்றும் குழந்தையைச் சீராட்டும் உணர்வை ஏற்படுத்துவது.

அதெல்லாம் சரிதான். ஆனால், இதுக்கும் டெடிக்கும் என்னமா சம்பந்தம் என்கிறீங்களா? இருக்கு. சம்பந்தம் இருக்கு!

பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக உற்பத்தியாகும் இந்த ஹார்மோனின் சுரப்பு குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் அதிகரிக்குமாம். முக்கியமா குழந்தையோட வடிவம்தான் இந்தச் சுரப்பைத் தூண்டுது. குண்டான, குட்டையான கைகால்கள், உப்பிய மார்பும், வயிறும், சற்று பெரிய தலை மற்றும் பெரிய கண்கள் குழந்தைகளுக்கு உண்டு. இந்த வடிவங்களை ரிலீசர்ஸ்னு சொல்வாங்க.

இந்த வடிவங்களால் உண்டாகும் எதிர்விளைவுகள் மிகவும் வலுவானவையாக இருப்பதால் இப்படிப்பட்ட வடிவங்கள் ஒரு பொம்மையில் இருப்பதைப் பார்த்தாலும் கூட இந்த ஹார்மோன் பெண்ணின் உடலில் சுரக்கத் தொடங்கிவிடும். இதனால்தான் குழந்தை போன்ற வடிவில் இருக்கும் கரடி பொம்மைகளைப் பார்த்ததும் பெண்கள் குஷியாகி அதைத் தூக்கி ``சோ ஸ்வீட்" என்று கொஞ்சத் தொடங்கிவிடுகிறார்கள்

டெடி பியர்
டெடி பியர்

இந்தக் காரணத்தால்தான் குழந்தை வடிவில் இருக்கும் குண்டான பொம்மைகள் பெண்களிடம் அதிகம் விற்பனையாகின்றன. ஒல்லியான, நீண்ட வடிவில் உள்ள பொம்மைகளை பெண்கள் அதிகம் விரும்புவதில்லை. மேலும், இந்த ஹார்மோன் சுரப்பு அதிகம் உள்ள பெண்கள் குள்ளமான, குண்டான, கொழு கொழு கன்னங்கள் இருக்கின்ற ஆண்களை விரும்பித் திருமணம் செய்து கொள்வார்களாம்!

பெரும்பாலும் இந்த ஹார்மோன் சுரப்பு ஆண்களுக்கு இல்லாததால்தான் ``இந்தக் கரடி பொம்மைகிட்ட உணர்ச்சிவசப்பட என்ன இருக்கு" என்று ஆச்சர்யப்படுகிறார்கள்.

டெடி பியர்
டெடி பியர்

ஆக, ஆண்களே டெடிக்கு சூனியம் வைப்பதையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் காதலிக்குப் பிடித்த கலரில் அழகான டெடி பியர் ஒன்றை வாங்கிக் கொடுங்கள். அப்படித் தரும்போது ஒருமுறை இறுக்கமாக அணைக்க மறந்துவிடாதீர்கள்... அட, நான் டெடியைச் சொன்னேன். உங்களுக்கும் தாய்மை உணர்வு ஏற்படுகிறதா என்பதை செக் செய்யலாமே என்றுதான்....!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism