Published:Updated:

இந்த வாழ்வே நம்பிக்கைதானே? நாளை நல்லதாகவே விடியும்! - உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்

வாழ்வே நம்பிக்கைதானே
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்வே நம்பிக்கைதானே

நாம் வெல்வோம்

கொரோனா நோய்ப்பரவல் மற்றும் லாக் டௌன் சூழ்நிலை பணப்பிரச்னை, மனச்சோர்வு, வேலை பறிபோகும் சூழல், பயம், பதற்றம், எரிச்சல், சலிப்பு, பணிச்சுமை அதிகரிப்பு எனப் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நாம் முதலில் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டியது கொரோனா பிரச்னைக்குத் தீர்வு நம் கையில் இல்லை என்பதையே. என்றாலும், இந்த நேரத்தில் நம்பிக்கையை இழக்காமல் பாசிட்டிவ்வாக இருக்க வேண்டியது நம் உடல் மற்றும் மன நலனுக்கு மிகவும் அவசியம். அதற்கு என்னவெல்லாம் செய்யலாம்? பார்ப்போம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அச்ச உணர்வு அழுத்தத் தொடங்கினால், ஒரு பேப்பரிலோ, செல் போனிலோ உங்கள் உணர்வுகளைப் பதிவு செய்யலாம். இதை கடைப் பிடித்தால் மன உளைச்சல் குறைந்து பாசிட்டிவ்வாக உணர்வீர்கள்.

இந்த வாழ்வே நம்பிக்கைதானே? நாளை நல்லதாகவே விடியும்! -  உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்

பாசிட்டிவிட்டி அதிகரிக்க தினமும் இரவு படுக்கும் முன், நீங்கள் வாழும் வாழ்க்கைக்கு நன்றி தெரிவிக்கலாம். மற்ற வர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்து அன்பு பாராட்டலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டில்தானே இருக்கிறோம் என இஷ்டப்பட்ட நேரத்தில் எழுந்து, இஷ்டப்பட்ட நேரத்தில் உறங்கி, இஷ்டப்பட்ட நேரத்தில் கேட்ஜெட் பயன்படுத்தி என... இவையெல்லாம் மனச்சோர்வை ஏற்படுத்தும்.

எனவே, சுய ஒழுக்கம் கடைப் பிடித்தல் மிகவும் அவசியம். அதுவே மனத்தைப் புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

வாழ்வே நம்பிக்கைதானே
வாழ்வே நம்பிக்கைதானே

சரியான லைஃப்ஸ்டைல் - அதாவது, சரியான நேரத்துக்கு உண்பது, மிதமான உடற்பயிற்சி, இரவு 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் (இரவு 10:00 மணி முதல்) ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது உங்கள் மன உளைச்சலை வெகுவாகக் குறைக்கும்.

வேலைப்பளு அதிகம் உள்ளவர்கள் வார/தினசரி அட்டவணை போட்டு, உங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதைச் செய்து முடிக்க சரியான நேரம் ஒதுக்கி ஒழுங்கமைக்கலாம். அதிக வேலை, குறைந்த கால அவகாசம் எனில், வேலைகளை மற்றவருக்குப் பிரித்துக் கொடுக்கலாம். அல்லது ‘நோ’ சொல்லப் பழகிக்கொள்ளலாம். அதிக பளுவை ஏற்றுக்கொள்ளாமல், இப்படியான செயல்பாடுகள் மூலம் வேலையின் தன்மையை எளிதாக்கிக்கொள்ள வேண்டும்.

தியானம், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றில் கவனத்தைச் செலுத்தலாம்.

உறவுகளை பலப்படுத்த வீட்டில் உள்ளவர்களுடன் பேசி, விளையாடி என பொழுதைக் கழிக்கலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள அருமையான நேரம் இது.

குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் உபயோகமான வேலைகளைச் செய்வது மனநலத்துக்கு மிகவும் அவசியம். 3 - 4 மணி நேரம் டி.வி, சமூக வலைதளம் எனச் செலவழித்தாலும், குறைந்த பட்சம் 1 - 2 மணி நேரம் வீட்டு வேலை செய்வது, புத்தகம் படிப்பது, எழுதுவது, வரைவது போன்ற வேலைகளைச் செய்வது மனத்தைத் தெளிவாக வைத்திருக்க உதவும்.

திடீரென பிஸி வாழ்க்கையிலிருந்து விலகியதால் வேலை அதிகமின்றி சலிப்பாக உணர்பவர்கள், தங்களுக்குப் பிடித்த ஹாபியைத் தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்தலாம். தங்கள் திறன்களை ஆன்லைன் கோர்ஸ்கள், புத்தக வாசிப்பு என ஏதேனும் ஒரு வழியில் வளர்த்துக்கொள்வதற்குச் சரியான தருணமிது. தொழிலில் அடுத்த கட்ட முன்னேற்றமடைவதற்கான திட்டங்களை வகுக்க இந்த நாள்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்கள் ஆளுமை குறித்து ஆழமாகச் சிந்தித்து சரி செய்ய உரிய நேரமிது. அதுபோலவே, வெளித்தோற்றத்தை மேம்படுத்தும் செயல்களிலும் ஈடுபடலாம்.

இந்நாள்களில் எதிர்மறை உணர்வுகள் அவ்வப்போதோ, அடிக்கடியோ வருவது இயல்புதான். அதைக் கண்டு அஞ்சாமல், கவலைப்படுவதால் ஒன்றும் ஆகப் போவ தில்லை என்பதை உணர்ந்து, கெட்டதிலும் உள்ள நல்ல விஷயங்களைப் பிரித்தெடுக்க மனத்தைப் பயிற்றுவிப்பது நல்லது. அதை ஒரு பட்டியலிட்டு தினமும் பார்க்கும்போது, நம்பிக்கை நம்முள் ஊற்றெடுப்பதை உணரலாம்!