இன்றைய நியூ ஏஜ் பெற்றோர்களுடைய குழந்தை வளர்ப்பு எப்படியிருக்கிறது... சொல்கிறார், பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்.

‘`முன்னர் எல்லாம் முதல் குழந்தையை வளர்க்கும்போது தவறவிட்ட விஷயங்களை, இரண்டாவது குழந்தையை வளர்க்கும்போது சரிசெய்து கொண்டார்கள். இன்றைக்கு ஒரே ஒரு குழந்தை என்று முடிவுசெய்துவிட்ட வீடுகளில், பெற்றோர்களின் கோபம், குணம், அன்பு, விரோதம் என அனைத்துக்குமான பாத்திரமாக அந்தக் குழந்தை ஆகிவிட்டது.

குழந்தை வளர்ப்பு என்பது பார்ட் டைம் ஜாப் அல்ல. நமக்குப் பதிலாக வேறொருவர் நம் பிள்ளைகளுக்குப் பெற்றோராக இருக்க முடியாது. ஆனால், இன்றைய சூழ்நிலைகள் பெற்றோரை அப்படித்தான் வைத்திருக்கின்றன.

குழந்தை வளர்ப்புக்கு மிக மிக முக்கியமான படிநிலை, குழந்தையின் அருகில் பெற்றோர் இருப்பதுதான். அது முடியாததால், அந்த இயலாமைக்கு நஷ்டஈடாக வண்ண வண்ண உடைகளையும் பொம்மைகளையும் வாங்கிக்கொடுக்கிறோம். அப்படித்தான் செல்போனும் ரிமோட்டும் குழந்தைகளின் கைகளில் சென்றடைந்துவிட்டன. இது ஒரு பொறுப்புத் துறப்பு மனநிலை. பின்னர், ‘என் பிள்ளை எப்பப்பாரு மொபைல்ல கேம் விளையாடுறான்’; ‘என் பொண்ணு ரிமோட்டும் கையுமா இருக்கா’ என்று அவர்கள் மீதே புகார் சொல்லிக்கொண்டிருக் கிறோம்.

ஒரு குழந்தையை உருவாக்கு வதற்கு உடலளவிலும், பொருளாதார அளவிலும் தம்பதி தயாராக இருக்கலாம். ஆனால், மனத்தளவில் தயாராக இருந்தால்தான், பொறுப்பெடுத்துக்கொள்ளும் மனப்பான்மை வரும். அது இல்லையென்றால், குழந்தை வளர்ப்பில் ஒருவித பயம் வந்துவிடும். இந்தப் பயம், நம் சென்ற தலைமுறைகளுக்கும் இருந்தது. ஆனால், தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா என்று உதவுவதற்கு மிகப்பெரிய உறவு வட்டம் அவர்களுடைய வீடுகளுக்குள்ளேயே இருந்தது. கூட்டுக் குடும்பங்களைத் திட்டமிட்டுத் தொலைத்தவர்கள் நாம்தானே? அதன் விளைவுகளைத்தான் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

அந்தக் காலத்தில் பெரியவர்களின் காலில் விழுந்தால், ‘ஆண்டவா, என் பேரப்பிள்ளைகளுக்கு நல்ல புத்தியைக் கொடு’ என்று சொல்வார்களே தவிர, `நல்ல வேலையைக் கொடு; நிறைய சம்பளத்தைக் கொடு’ என்றெல்லாம் கேட்க மாட்டார்கள். இப்போது அதிலும் மாற்றம் வந்துவிட்டது. நம் தலைமுறைக்குக் கிடைத்த பொறுமை, காத்திருப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற நல்ல இயல்புகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டாமா?”