குழந்தைகளிடம் பெற்றோர் ஏன் பாலியல் தொடர்பான விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும்?

இந்தக் கேள்வி பெரும்பாலான பெற்றோருக்கு இருக்கிறது. குழந்தைகளிடம் பாலியல் பற்றிய விஷயங்களைப் பேசுவதில் பெரிய தயக்கம் இருக்கும்தான். அந்தத் தயக்கத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, குழந்தைகளிடம் அந்த விஷயங்களைப் பற்றிப் பேசும்போது அவர்களுக்குப் பெற்றோரிடம் நம்பிக்கையும் நெருக்கமும் கூடும். எந்தப் பெற்றோரும் தம் குழந்தைக்குத் தவறான எதையும் போதிக்க மாட்டார்கள். இந்த உலகத்திலேயே அதிக அக்கறையோடு குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் ஆகச் சிறந்த ஆசான்கள் பெற்றோர் மட்டுமே.

இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. பெற்றோர் எல்லோரும் நிபுணர்களாக இருக்க வாய்ப்பில்லை; பாலியல் விஷயங்களில் தெளிவு பெற்றவர்களாகவும் எல்லாம் தெரிந்தவர்களாகவும் மாறி விடுவதில்லை. நம்மூர் பெற்றோருக்கு இதைப் பற்றிய விஞ்ஞானபூர்வமான தகவல்கள் கிடைப்பதுமில்லை. பாலியலைப் பொறுத்தவரை எது சரி, எது தவறு, எது விஞ்ஞானபூர்வமானது எனத் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில்தான் பலரும் இருக்கிறார்கள். அந்த விஷயங்களைப் பற்றிதான் இந்த இதழில் பேசப் போகிறோம். அவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் தங்களின் குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசவும் நெருக்கம் வளர்க்கவும் முடியும்.

குழந்தைகளிடம் பாலியல் விஷயங்களை அவசியம் பேசியாக வேண்டுமா என்றால் பேசித்தான் ஆக வேண்டும். `ப்ரீடேட்டர்ஸ்' எனப்படும் பாலியல் அரக்கர்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் இதைப் பற்றிப் பேசித்தான் ஆக வேண்டும். அவர்கள் மட்டுமன்றி பொறுப்புள்ள ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் அனைவரும் பேச வேண்டும்.பெற்றோருக்கு இந்தப் பொறுப்பு மிகமிக அதிகம். ஏனெனில், குழந்தைகள் பெற்றோரைத் தவிர வேறு யாரையும் நம்புவதில்லை. குழந்தைகள் தம் வாழ்நாள் முழுவதும் பாலியல் தொடர்பான பல்வேறு முடிவுகளை பெற்றோர்களின் போதனைகளிலிருந்து எடுக்கிறார்கள். இது உலகம் முழுவதிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இதை நான் ஏன் இன்றே பேச வேண்டும், இன்றைக்கு இது தேவையா என்ற கேள்விகள் சில பெற்றோருக்கு எழலாம். இன்று தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், அது குழந்தைகளின் வாழ்நாள் முழுவதற்குமான புரிந்துணர்வுக்குத் தேவைப்படும் கல்வி.வளரிளம் பருவத்தினரின் உடல், மன வளர்ச்சிக்கும் இது உதவும். குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கும்போதே சிக்கலான கணக்குப் பாடங்களை போதிப்பதில்லையே... அடிப்படையிலிருந்துதானே ஆரம்பிக் கிறோம். வயதுக்கேற்றாற்போல சொல்லிக் கொடுப்பதைப் போன்றதுதான் இதுவும்.

இன்றைய குழந்தைகள் 11, 12 வயதில் பருவமடைகிறார்கள். எட்டு, ஒன்பது வயதில் யாராலோ தவறாக நடத்தப்பட்டிருக்கலாம். இவையெல்லாம் அவர்களுக்குள் குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தலாம். சம்பவங்கள் நடந்தபிறகு அவற்றைப் பற்றிப் பேசுவதில் என்ன பயன்?

சமீபத்தில் சென்னையில் டியூஷன் சென்டரில் குழந்தைகளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது நினைவிருக்கலாம். பாதிக்கப் பட்டவர்கள் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கிற குழந்தைகள். பெற்றோர் எதையும் சொல்லித் தராததால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இப்படி பாதிக்கப்படுகிறார்கள். யாரேனும் தவறாக அணுகினால் பயப்படாமல் ‘நோ’ சொல்லிவிட்டு, உடனே பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என முன்கூட்டியே சொல்லித் தந்திருக்க வேண்டும். எதுவுமே சொல்லித் தரப்படாத குழந்தைகளுக்கு அசம்பாவிதங்கள் நிகழுமிடங்களில் என்ன செய்ய வேண்டும், எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதெல்லாம் தெரிவதில்லை.

அவசியமான விஷயங்களைக் கற்றுத்தருவதன் மூலம் குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கலாம். தேவையற்ற கர்ப்பம், பாலியல் தொற்றுகள், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றலாம். இதையெல்லாம் கேட்டால் நம்மூர் பெற்றோர் பலரும் அதிர்ந்துபோவார்கள். தவிர, வயதுக்கேற்ற விஷயங்களைத்தான் பேச வேண்டும் என்ற கருத்திலும் ஊறிப்போயிருப்பவர்கள் அவர்கள்.

உலகெங்கிலும் நடத்தப்பட்ட பாலியல் பற்றிய ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன தெரியுமா?

பெரும்பாலான குழந்தைகள் எட்டு வயதாகும்போது தம் சக நண்பர்கள், தோழிகளிடம் செக்ஸ் பற்றி உரையாடுகிறார்கள். 14 வயதாகும்போது பாலியல் படங்களைப் பார்க்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் தம் பெற்றோரிடம் ஆபாசப்படங்களைப் பற்றியோ, சக நட்பு வட்டத்தில் உரையாடிய பாலியல் விஷயங்களைப் பற்றியோ பகிர்ந்து கொள்வதில்லை.

நம் குழந்தைகள் வெகுவிரைவில் பருவமடைந்துவிடுகிறார்கள். அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போது பெற்றோர் அவர்களை மிகவும் பாதுகாப்பாக, பத்திரமாக வைத்துக்கொள்கிறார்கள். சிறுவயதுக் குழந்தைகளுக்கு பெற்றோர் மேலாளர்களாக இருக்கிறார்கள். பதின்பருவத்தை எட்டிய பிறகு அப்படி இருக்க முடியாது. அதன் பிறகு குழந்தைகளுக்கு ஆலோசகர்களாக மட்டுமே இருக்க முடியும். குழந்தை களுக்குத் தேவைப்படும் நேரத்தில் ஆலோசனைகள் மட்டுமே சொல்பவர் களாக இருக்க முடியும். இதை அனைத்துப் பெற்றோர்களும் உணர வேண்டும். உணராததால்தான் பல நேரங்களில் ஏமாற்றம் மிஞ்சுகிறது.

நம்மை நாம் அறிந்துகொள்வது...

குழந்தைகளைப் பற்றி பெற்றோருக்கு ஏராளமான எதிர்பார்ப்புகள் இருக்கும். அவை சரியா, தவறா என்பது வேறு விஷயம். ‘எங்க காலத்துல எங்க வீட்டுல பார்த்த பையனை / பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்’ என்பதுபோன்ற எதிர்பார்ப்புகள் அவை. இந்த எதிர்பார்ப்புகள் நம் சொந்த அனுபவங்களிலிருந்து வருகின்றன. அடுத்து, பல்வேறு தரவுகள், பார்க்கிற, படிக்கிற, கேள்விப்படுகிற தகவல்கள், டிரெண்டு போன்றவை ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகள். மூன்றாவது, குழந்தைகளை நாம் கவனிப்பதிலிருந்து பெற்றோருக்கு உருவாகும் எதிர்பார்ப்புகள்.

நம் காலத்தில் நாம் எப்படி இருந்தோம் என்பதும், பொதுவாக சமுதாயம் தரும் புள்ளிவிவரங்களும் குழந்தைகள் விஷயத்தில் பெரிய அளவில் உபயோகப் படுவதில்லை. இத்தனை சதவிகிதக் குழந்தைகள் காதலில் விழுகிறார்கள், இத்தனை சதவிகிதக் குழந்தைகள் திருமணத்துக்கு முன்பே உறவு வைத்துக்கொள்கிறார்கள் என்றெல்லாம் கேள்விப்படும்போது நம் குழந்தைகள் அவற்றில் எல்லாம் வர மாட்டார்கள் என்றே பெற்றோர் நினைக்கிறார்கள். நாம் அப்படி இருந்ததில்லை; அதனால் நம் பிள்ளைகளும் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறார்கள். ஆனால், குழந்தைகள் அவற்றுக் குள்ளும் வரலாம்.

குழந்தைகளின் முடிவுகளைப் பல நேரங்களில் பெற்றோரால் கண்டுபிடிக்க முடிவதில்லை. இப்படி ஒன்று நடக்கிறதென்பதையே பெற்றோர் கவனிப்பதில்லை. அது செய்தியாகி, மீடியாவில் கசிந்தபிறகுதான் அவர்களது கவனத்துக்கு வருகிறது. இதற்கு விஞ்ஞான பூர்வமான காரணங்கள் சில உண்டு. உங்களுடைய பதின்பருவக் குழந்தைகளின் போக்கு தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும். அவர்களுக்கு நேற்றுவரை காதல் இல்லாமலிருந்திருக்கலாம். இன்று காதலில் விழுந்திருக்கலாம். அவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அவர்களது முடிவெடுக்கும் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கிறது. அவர்கள் பெரியவர்களிடமிருந்து ஒரு பகுதியை மறைக்கிறார்கள். அவர்கள் முடிவெடுக்கும்போது நண்பர்களைக் கலந்தாலோசிக்கவே விரும்புகிறார்கள். பெற்றோரைச் சேர்க்க விரும்புவதில்லை. அதனால்தான் பிள்ளைகளின் முடிவுகள் பெற்றோருக்குத் தெரியாமல் விளைவுகள் மட்டும் தெரிகின்றன.

குழந்தைகள் மீதான பெற்றோரின் நம்பிக்கைகள் எப்படியிருக்கின்றன என்பது கவனிக்கப்பட வேண்டும். மத நம்பிக்கையின் அடிப்படையில், சொந்த அனுபவங்களிலிருந்து, அல்லது பெற்றோரின் பெற்றோர் எதிர்பார்ப்பு எப்படியிருந்தது என்பதன் அடிப்படையில்... இப்படி எங்கிருந்து அந்த எதிர்பார்ப்புகள் கிளம்புகின்றன என ஆய்வு செய்யுங்கள்.

குழந்தைகள் பற்றிய பயம்...

அதாவது... தம் பிள்ளைகள் தவறான உறவுகளில் சிக்கியிருக்கலாம். அவர்களுக்குப் பால்வினை நோய்கள் வந்திருக்கலாம். கர்ப்பமாகியிருக்கலாம். குழந்தைகளைப் பற்றி இப்படியான பயங்கள் பெற்றோர்களுக்கு வரலாம். இப்படிப்பட்ட பயம் இருந்தால் சில விஷயங்களைப் பெற்றோர் ஆராய வேண்டும். குழந்தைகளிடம் அவற்றை எப்படி சரியான நேரத்தில் சரியான முறையில் பேசுவது... எது சரியானது என்று அவர்களுக்குச் சொல்லித் தருவது என யோசிக்கலாம். தேவையற்ற பயத்துடனும் தவறான எதிர்பார்ப்புகளுடன் வாழ்வதற்குப் பதில் குழந்தைகளுடன் மனம்திறந்து பேசுவது பல சிக்கல்களைத் தீர்க்கும்.