Published:Updated:

நிறைய படிக்கணும்... நிறைய தெரிஞ்சிக்கணும்!

பாவனா
பிரீமியம் ஸ்டோரி
பாவனா

சேனல் ஸ்டார்

நிறைய படிக்கணும்... நிறைய தெரிஞ்சிக்கணும்!

சேனல் ஸ்டார்

Published:Updated:
பாவனா
பிரீமியம் ஸ்டோரி
பாவனா

சை, நாட்டியம், நிகழ்ச்சித் தொகுப்பு எனப் பல துறைகளில் சிறந்து விளங்குபவர், பாவனா. சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முதன்முதலில் தமிழில் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் இவருடன் ஒரு குட்டி சாட்.

நிறைய படிக்கணும்... 
நிறைய தெரிஞ்சிக்கணும்!

உலகக்கோப்பை அனுபவம் எப்படி இருக்கிறது?

ரொம்பவே உற்சாகமா இருக்கு. பொதுவா நாம எந்த ஒரு விளையாட்டையும் முழுமையாகப் பின்தொடர மாட்டோம். நம்ம அணி விளையாடுறப்போதான் பார்ப்போம். இங்கே வந்து பார்த்த பிறகுதான் விளையாட்டு எவ்வளவு பெரிய விஷயம்னு தெரியுது. மற்ற நாடுகளைப் பற்றித் தெரிஞ்சுக்க அதிக வாய்ப்பு இருக்கு. ஒவ்வொரு போட்டிக்குப் பின்னாடி இருக்கிற கதைகளைக் கேட்டாலே, தமிழ்ப் படம் பார்க்கிற மாதிரிதான் இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 தோனியுடன்...
தோனியுடன்...

ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் பயிற்சி எடுத்துப்பீங்களா?

நிச்சயமா... ஒவ்வொரு போட்டியும் போட்டித் தேர்வு எழுதுறது மாதிரிதான். விளையாட்டில் தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது. ஏதாவது தப்பா பேசிட்டோம்னா, சிரிக்கமாட்டாங்க; நம்மளை ஜட்ஜ் பண்ணுவாங்க. ஒரு பொண்ணு கிரிக்கெட் பற்றிப் பேசுறப்போ, இவங்களுக்கு என்ன தெரியப்போகுதுங்கிறதுதான் எல்லோருடைய மனநிலையா இருக்கும். இந்த ஸ்டீரியோடைப்பை உடைக்கிறது எனக்கு சுவாரஸ்யமான விஷயம்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்காக நீங்க எதிர்கொண்ட சவால்கள்?

கபடி விளையாட்டு மூலம்தான் முதலில் என் பயணத்தை ஆரம்பிச்சேன். என் கணவர் கபடி பற்றி முழுமையா சொல்லிக் கொடுத்தார். பொழுதுபோக்கு நிகழ்ச்சியி லேருந்து விளையாட்டுக்கு வர்றப்போ, `இங்கே எதுக்கு? நடிக்கப்போகலாமே'ன்னு ஈஸியா சொல்லிடுவாங்க. விளையாட்டு கத்துக்கக் கூடாதா, சர்வதேச அளவுக்கு முன்னேறக் கூடாதா... இந்தமாதிரி கேள்விகள்தாம் என்னை இந்த இடத்துக்குக் கூட்டிக்கிட்டு வந்திருக்கு. நிறைய படிக்கணும். நிறைய தெரிஞ்சிக்கணும். லெஜென்ட்ஸ்கூட பேசுறப்போ ரொம்பக் கவனமா இருக்கணும். எந்தத் துறையில முன்னேற நினைச்சாலும் திறமையும் கடின உழைப்பும் அவசியம். அதனால், உடல் மற்றும் மனரீதியா கடினமா உழைக்க ஆரம்பிச்சேன். எட்டு கிலோ எடை குறைச்சேன். உருவ கேலி மாதிரி ஏராளமான எதிர்ப்புகளையும் சந்திச்சேன். எந்த அளவுக்கு விமர்சனம் பண்ணாங்களோ, அதே அளவுக்கு பாராட்டுகளும் கிடைச்சது.

 அனில் கும்ப்ளே, பிரையன் லாராவுடன்...
அனில் கும்ப்ளே, பிரையன் லாராவுடன்...

முதன்முறையா உலகக்கோப்பைக் களத்தில் இறங்கியபோது எப்படி இருந்தது?

எனக்குக் கொடுத்த முதல் வேலையே பிரையன் லாராவோடு லைவ். அன்னிக்கு நடக்கக்கூடாத எல்லா தவறுகளும் நடந்தன. ஓரளவுக்கு எல்லாத்தையும் சமாளிச்சு கொஞ்சமா ஓய்வெடுத்துட்டு இருந்தப்போதான், மழை வந்தது. எல்லோரும் அப்படியே ஸ்டூடியோவுக்கு ஓடிப்போனோம். சமாளிச்சு இன்னொரு பக்கம் திரும்புனா, `யுவராஜ் சிங் ரிட்டையர்டு'னு சொல்லி, அவரைப் பற்றி பேசச் சொன்னாங்க.

10 நிமிடங்களே எனக்குக் கிடைச்ச நேரம். இப்படி என் முதல் உலகக்கோப்பை பயணம் ரொம்பவே பரபரப்பா தொடங்குச்சு.

விளையாட்டைத் தொகுத்து வழங்க நினைக்கும் பெண்களுக்கு உங்களுடைய டிப்ஸ்?

விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சிகளில் பெண்களின் பங்கு ரொம்பக் குறைவா இருக்கு. இந்த நிலை மாறணும். விளையாட்டு பற்றி படிக்கிறதோடு, லைவ்ல என்ன நடந்தாலும், அதை சரியா சமாளிக்கிற அளவுக்கு நிறைய விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சுக்கணும்.

கணவர் என்ன சொன்னார்?

அவர் தமிழ் சேனல் அதிகம் பார்க்க மாட்டார். ஆனால், இந்த வாய்ப்பைப் பார்த்துட்டு ரொம்பவே சந்தோஷப்பட்டார். ‘உனக்கேற்ற சரியான பிளாட்ஃபார்ம் இது, சந்தோஷமா பண்ணு’ன்னு சொன்னார்.

தோனியைச் சந்தித்தது பற்றி?

ஏற்கெனவே நிறைய நிகழ்ச்சிகளைப் பண்ணியிருந்தாலும், இந்த முறைதான் தல தோனியைப் பற்றி நிறைய படிச்சு, சி.எஸ்.கே அணியை முழுமையா பின்தொடர்ந்தேன். அந்த டீமின் பிரைவேட் நிகழ்ச்சியை நான்தான் தொகுத்து வழங்கினேன். அப்போ அவரோடு நிறைய பேசினேன். ரொம்ப நல்ல மனிதர். அவரை மாதிரி இன்னொருத்தர் பொறந்துதான் வரணும்.

நிறைய படிக்கணும்... 
நிறைய தெரிஞ்சிக்கணும்!

மாஷ்-அப் சீரிஸ் பற்றி?

எனக்கு இசைன்னா உயிர். மற்ற வேலைகளில் பிஸியானதுக்குப் பிறகு, இசையை மிஸ் பண்ணினேன். இப்போ நான் ஒரு மியூசிக் பேண்டு வெச்சிருக்கேன். அப்பப்போ பெர்ஃபார்ம் பண்ணுவோம். ரெண்டு மாஷ்-அப் பண்ணினேன். மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைச்சது. பட வாய்ப்பும் வந்தது. ஆனா, எனக்கு நடிக்க வராது!

உங்கள் ஃபேவரைட் தொகுப்பாளர் யார்?

பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறதுதான் கஷ்டம்னு நினைச்சிட்டிருந்தேன். இப்போ இதுதான் கஷ்டமா தெரியுது. அந்த வகையில, இப்போ என் ஃபேவரைட் தொகுப்பாளர் மயந்த்தி லாங்கர். அவங்க 12 வருடங்களா ஸ்போர்ட்ஸ் ஆங்கரா இருக்காங்க.

உங்கள் சக்ஸஸ் ஃபார்முலா?

நான் இன்னும் முழுமையா வெற்றி பெறலைன்னு நினைக்கிறேன். இந்தத் துறையில ஈஸியா நம்மளை மட்டம் தட்டுறதுக்குப் பலர் இருக்காங்க. எதிர்மறை விமர்சனங்கள் சொல்றவங்களும் ஏராளம். அதையெல்லாம் காதுல வாங்கிக்காம, நம்மளால முடியும்னு ரெண்டு பேர் சொல்லுவாங்கள்ல... அவங்களை ஏத்துக்கிட்டாலே போதும். ‘Never Ever Give up’ - இதை நான் எப்போவுமே பின்பற்றுவேன். ஷார்ட்-கட்ல போகணும்னு நினைச்சா, அது ஷார்ட்டாவே போய்டும். ஸோ, நேர்மையா உழைக்கணும்!