Published:Updated:

``திருமணமானால் பெற்றோரைப் பிரிய வேண்டுமா?''- வாசகிக்கு நிபுணர் அட்வைஸ்! #LetsSpeakRelationship

A sad woman ( freepik )

``உங்கள் பெற்றோரை உங்களுடன் வைத்துப் பராமரிப்பதற்கான வழிகளைப்பற்றித்தான் நீங்கள் சிந்திக்க வேண்டுமே தவிர, திருமணத்தை நிறுத்துவதற்கான வழிகளை அல்ல.’’

``திருமணமானால் பெற்றோரைப் பிரிய வேண்டுமா?''- வாசகிக்கு நிபுணர் அட்வைஸ்! #LetsSpeakRelationship

``உங்கள் பெற்றோரை உங்களுடன் வைத்துப் பராமரிப்பதற்கான வழிகளைப்பற்றித்தான் நீங்கள் சிந்திக்க வேண்டுமே தவிர, திருமணத்தை நிறுத்துவதற்கான வழிகளை அல்ல.’’

Published:Updated:
A sad woman ( freepik )

"நான் என் பெற்றோருக்கு ஒரே மகள். என் பெற்றோர் இருவருமே பணி ஓய்வு பெற்றவர்கள். நான் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காகக் கடந்த மூன்று வருடங்களாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். நாங்கள் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், சென்னையில் பணிபுரிகிற ஒருவருடன் எனக்குத் திருமணம் பேசி முடித்துள்ளனர் என் பெற்றோர். எனக்கு என் பெற்றோரைத் தனியாக விட்டுச்செல்ல விருப்பமில்லை. என்னை அவர்கள் எப்படிப் பார்த்துக்கொண்டார்களோ அதேபோல அவர்களை நான் பார்த்துக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய இன்னொரு பிரச்னை, நான் வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். என் பெற்றோர் அதை விரும்பவில்லை. திருமணத்துக்கு முந்தைய இந்தக் காலகட்டத்தை மகிழ்ச்சியாக வீட்டில் கழிக்கச் சொல்கிறார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. மனஅழுத்தத்துடனும் தாழ்வு மனப்பான்மையுடனும் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்தக் காலகட்டத்தை நான் எவ்வாறு பயனுள்ளதாக்கிக்கொள்வது?"

விகடனின் uravugal@vikatan.com மெயிலில் வாசகி ஒருவர் இந்தக் கேள்வியை அனுப்பியிருந்தார். இவருக்கான பதிலை மனநல மருத்துவர் பூங்கொடி பாலா அளித்துள்ளார்.
மனநல மருத்துவர் பூங்கொடி பாலா
மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நீங்கள் பல விஷயங்களில் குழப்பத்தில் இருக்கிறீர்கள். அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பிரித்து அவற்றுக்கான தீர்வைத் தேட வேண்டும்.

* திருமணம் தற்போது வேண்டுமா, வேண்டாமா?

* திருமணத்துக்குப் பிறகு பெற்றோரைப் பார்ப்பதே கடினமாகிவிடுமா?

* வேலைக்குச் செல்ல முடியாமல் போய்விடுமோ?

* திருமணத்துக்கு முந்தைய காலகட்டத்தை எப்படிக் கையாள்வது..?

மேலே சொன்னவைதான் உங்களுடைய பிரச்னைகள். இனி தீர்வுகளைச் சொல்கிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெற்றோரைப் பார்த்துக்கொள்ள திருமணத்தைத் தள்ளிப்போட வேண்டுமா?

உங்கள் பெற்றோரைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே நீங்கள் திருமணத்தைத் தள்ளிப்போட நினைக்கிறீர்கள் எனில், அது சரியான முடிவில்லை. ஏனென்றால் இங்கே திருமணமான பல பெண்களுக்கும், தன் பெற்றோரை தன்னுடன் வைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. உங்களுக்கும் இந்த எண்ணம் வருவது இயல்புதான். அதனால் திருமணத்துக்குப் பின்னரும் உங்கள் பெற்றோரை உங்களுடன் வைத்துப் பராமரிப்பதற்கான வழிகளைப்பற்றித்தான் நீங்கள் சிந்திக்க வேண்டுமே தவிர, திருமணத்தை நிறுத்துவதற்கான வழிகளை அல்ல.

sad woman
sad woman
freepik

உங்களுக்கு நிச்சயித்து வைத்துள்ள நபரிடம் உங்கள் நிலையை விளக்கி, பெற்றோரைத் திருமணத்துக்குப் பின்னர் நீங்கள் பராமரிக்க விரும்புவதையும் பொருளாதாரரீதியாக உதவி செய்ய விரும்புவதையும் தெரிவிக்கலாம்.

வேலைக்குச் செல்வது பெண்களுக்கு எப்போதும் சாத்தியம்தான்...

வேலைக்குச் செல்ல வேண்டும் என நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். ஆனால், உங்கள் பெற்றோர் அதை விரும்பவில்லை. இது பெரும்பாலும் எல்லா பெற்றோரும் கூறுவதுதானே. அவர்கள், நீங்கள் வேலைக்கே செல்லக் கூடாது என்று கூறவில்லையே... திருமணத்துக்குப் பின்னரும் நீங்கள் வேலைக்குச் செல்லலாமே... திருமணம் முடிந்த ஐந்தாறு வருடங்களுக்குப் பின்னர் வேலைக்குச் சென்று சாதித்த பல பெண்கள் நம்மிடையே இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் இப்போது வேலைக்குச் செல்லாமல் இருந்தாலும்கூட எதிர்காலத்தில் வேலைக்குச் சென்று சாதிக்க முடியும்.

happy
happy
freepik

திருமணமான பின்னர் வீட்டிலேயே அடங்கியிருக்க வேண்டும் என்று எதுவுமில்லை. எதிர்காலத்தில் சூழ்நிலை உங்களுக்குச் சாதகமாக மாறலாம். வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்துக்காகவோ, பெற்றோரைப் பராமரிக்க வேண்டும் என்பதற்காகவோ திருமணம் வேண்டாம் என முடிவெடுப்பது சரியில்லை. அதற்கு பதில், உடனடியாகத் திருமணம் செய்யலாமா அல்லது சில வருடங்கள் கழித்துச் செய்துகொள்ளலாமா என்பது குறித்து வேண்டுமானால் சிந்திக்கலாம்.

திருமணத்துக்கு முந்தைய இந்தக் காலகட்டத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?

relationship
relationship

நீங்கள் பட்டப்படிப்பு முடித்தவர் என்பதால், இணையவழி பயிற்சி வகுப்புகளில் உங்களுக்குப் பிடித்த பயிற்சியில் சேர்ந்து புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். அல்லது உங்களால் முடிந்த பயிற்சியை மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்றுத்தரலாம். குறிப்பாக, இலவசமாகவோ, கட்டணம் பெற்றுக்கொண்டோ ஆன்லைனில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம். எதிர்காலத்தில் இதுவேகூட உங்களுடைய முழுநேர வேலையாக மாறலாம்.

இந்தக் கட்டுரையைப் படித்த பின்னரும் உங்களுக்கு மனஅழுத்தமும் தாழ்வு மனபான்மையும் அதிகரிக்கிறது என்றால், தகுந்த உளவியல் ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.