பிரீமியம் ஸ்டோரி

ருவரின் முகத்தில் கண்கள்தான் முதலில் கவனம் ஈர்க்கும். மாஸ்க் அணிந்து, பாதி முகத்தை மறைத்துப் பழகிவிட்ட கொரோனா காலத்தில் கண்களின் அழகுக்குக் கூடுதல் அக்கறை காட்டவும் பழகிவிட்டோம். சிம்பிளான ஐ மேக்கப் முதல் கண்கள் பராமரிப்புவரை டிப்ஸ் தருகிறார் அழகுக்கலை நிபுணர் முத்துலட்சுமி.

கண்களால் கைது செய்யுங்கள்! -
ஐ மேக்கப் டிப்ஸ்

ஸ்டெப் 1: கண்களை மூடி கண்களின் வெளிப்புறத்தை படத்தில் காட்டியுள்ளபடி பிரித்துக்கொள்ளவும். அதாவது, புருவ எலும்புக்குக் கீழ் இருக்கும் லேயர் (Brow bone highlight) கண்மணி இருக்கும் பகுதி (crease) கண்மணிக்கும் இமை களுக்கும் நடுவில் இருக்கும் பகுதி, (Lid) மேல் இமை, (Upper Lash Line) மை இடும் பகுதி (Water Line) கீழ் இமை (Lower Lash Line) கண்ணின் முன் ஓரம் (Tearduct) என்று பிரித்துக்கொள்ளுங்கள்.

 முத்துலட்சுமி
முத்துலட்சுமி

ஸ்டெப் 2: கண்களின் வெளிப் புறத்தில் மாய்ஸ்சரைஸர் அப்ளை செய்யவும். ஜெல் அல்லது லோஷன் வடிவ மாய்ஸ்சரைஸர் பயன்படுத்துவது நல்லது.

கண்களால் கைது செய்யுங்கள்! -
ஐ மேக்கப் டிப்ஸ்

ஸ்டெப் 3: அலுவலகத்துக்கான ஐ மேக்கப் என்றால் உங்களின் ஸ்கின் டோனுக்கு ஏற்ப நியூடு நிற ஐ ஷேடோக்களைத் தேர்வு செய்யலாம். கண்மணி இருக்கும் பகுதியில் (நடுப்பகுதி) முதலில் ஐ ஷேடோ அப்ளை செய்யவும். நீங்கள் தேர்வு செய்திருக்கும் நிறத்தின் ஃபேமிலியில் உள்ள டார்க் நிற ஷோடோவை முதலில் அப்ளை செய்யுங்கள்.

கண்களால் கைது செய்யுங்கள்! -
ஐ மேக்கப் டிப்ஸ்

ஸ்டெப் 4: அதே ஃபேமிலி நிறத்திலிருக்கும் லைட் நிறத்தை புருவ எலும்புக்கு கீழ் இருக்கும் பகுதியில் அப்ளை செய்து, கண்மணி இருக்கும் பகுதியில் அப்ளை செய்த நிறமும், எலும்புக்கு கீழ் அப்ளை செய்த நிறமும் ஒன்றாகக் கலப்பதுபோல் மிருதுவாக பிரஷ்ஷால் தேய்க்கவும்.

கண்களால் கைது செய்யுங்கள்! -
ஐ மேக்கப் டிப்ஸ்

ஸ்டெப் 5: கண்களின் இமைப் பகுதிக்கு மேல், ஐ லைனர் அப்ளை செய்துகொள்ளவும். லிக்யுட் ஐ லைனர் பயன் படுத்தத் தெரியாதவர்கள் ஜெல் டைப் ஐ லைனர் அல்லது, ஸ்டாம்ப் போன்ற ஐ லைனர் பயன்படுத்தலாம்.

கண்களால் கைது செய்யுங்கள்! -
ஐ மேக்கப் டிப்ஸ்

ஸ்டெப் 6: இமைகளுக்கு மஸ்காரா பயன்படுத்தவும். மஸ்காரா பயன்படுத்தும் போது இமைப்பகுதி முடிகளை, லேசாக வளைத்துவிட்டால் கண்கள் பெரியதாகத் தெரியும்.

கண்களால் கைது செய்யுங்கள்! -
ஐ மேக்கப் டிப்ஸ்

ஸ்டெப் 7: இப்போது கண்ணின் வாட்டர் லைனில் காஜல் அப்ளை செய்யவும்.கண்ணின் முன்ஓரம் வரை காஜல் அப்ளை செய்யாமல், பாதியில் நிறுத்திக்கொண்டு, இமைகளுக்குக் கீழே உங்கள் சருமத்தின் நிறத்திலேயே ஐ ஷேடோ அப்ளை செய்தால், கண்கள் கவர்ச்சியாக இருக்கும்.

கண்களால் கைது செய்யுங்கள்! -
ஐ மேக்கப் டிப்ஸ்

ஸ்டெப் 8: ஐ ப்ரோ பென்சில் பயன்படுத்தி புருவத்தை அடர்த்தி யாக்கவும். மஸ்காரா பயன்படுத்தி புருவத்தை லேசாக டச் செய்தால் புருவம் இன்னும் அழகாக இருக்கும்.

கண்களால் கைது செய்யுங்கள்! -
ஐ மேக்கப் டிப்ஸ்

ஸ்டெப் 9: கவர்ந்திழுக்கும் காந்தக் கண்களில் அசத்துங்கள்.

ஐ ஷேடோ நிறத் தேர்வு

ஐ ஷேடோ பேலட்டில் இருக்கும் ஒரு ஃபேமிலி நிறத்திலிருக்கும் அடர் நிறத்தை `ஷேடோ' என்றும், வெளிர் நிறத்தை `டின்ட்' என்றும் அழைப்பது வழக்கம்.

தினசரி மேக்கப் எனில், நியூடு ஷேட் ஐ ஷேடோக் களையே தேர்வு செய்யலாம். விசேஷங்களுக்குச் செல்லும்போது வார்ம், கூல் நிறங்கள் கலந்த ஐ ஷேடோக்களைத் தேர்வு செய்யலாம்.

உங்களுக்கு டார்க் ஸ்கின் டோன் எனில் வார்ம் நிற ஐ ஷேடோக்களைத் தேர்வு செய்யலாம்.

லைட் ஸ்கின் டோன் எனில் கூல் நிற ஐ ஷேடோக்களைத் தேர்வு செய்யலாம்.

மாநிறமானவர்கள் காப்பர், தேன் நிறம், கோல்டன் நிற ஐ ஷேடோக் களைத் தேர்வு செய்யலாம்.

ஐ ஷேடோக்களை உடையுடன் மேட்ச் செய்கிறேன் என்ற எண்ணத்தில் ஆரஞ்சு, ஊதா என அடுத்தவர்களை பயமுறுத்த வேண்டாம்.

வார்ம் (மெரூன்), சிவப்பு, ஆரஞ்சு நிறங்களில் ஆடை அணிகிறீர்கள் எனில் பீச் நிற ஐ ஷேடோக்களை பயன்படுத்தலாம். மற்ற நிற ஆடைகளுக்கு பிங்க் நிறம் பொருத்தமாக இருக்கும்.

கண்களால் கைது செய்யுங்கள்! -
ஐ மேக்கப் டிப்ஸ்

கண்கள் பளபளக்க...

உருளைக்கிழங்கையும், வெள்ளரிக்காயையும் சம அளவு எடுத்துத் துருவி சாறு எடுக்கவும். அத்துடன் எலுமிச்சைச் சாறு ஒரு துளி, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை கலந்துகொள்ளவும். இதை ஒரு காட்டன் துணியில் நனைத்து கண்களின் மீது 10 நிமிடங்கள் வைத்தெடுக்க கண்கள் மின்னும்.

10 சாமந்திப்பூக்களை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் இட்டு சூடுபடுத்தவும். பிறகு, வடிகட்டி அந்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் கண்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

சிலருக்கு கண்களின் அடியில் வீக்கம் இருக்கும். அவர்கள், கிரீன் டீ டிகாக்‌ஷன் 20 மில்லி, தேன் 20 சொட்டு, கேரட் ஜூஸ் 20 சொட்டு மூன்றையும் ஒன்றாகக் கலந்து காட்டன் துணியில் நனைத்து கண்களின் மேல் அரைமணி நேரம் வைத்து எடுத்தால் வீக்கம் குறைந்து கண்கள் மிளிரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு