“திருப்பூர் சொந்த ஊர் என்றாலும், பிறந்தும் வளர்ந்ததும் கோவையில். சென்னை எத்திராஜ் கல்லூரியில் யு.ஜி-யும், ஐஐபிஎம்-மில் எம்.பி.ஏ-வும் படித்துவிட்டு கார்ப்பரேட் செக்டாரில் வேலை பார்த்துட்டு இருந்தேன். ஒருகட்டத்தில் கார்ப்பரேட் உலகம் பிடிக்காமல் போகவே வேலையை விட்டுட்டேன்” - தன்னைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறார், சென்னையில் உள்ள ‘மெர்சல்’ டிசைனர் பொட்டீக்கின் உரிமையாளர் நந்திதா. ஜோதிகா முதல் பிரியா பவானிசங்கர்வரை பல செலிபிரிட்டிகளுக்கும் டிசைனராக இருந்து வருபவர், இப்போது சினிமா டிசைனரும்கூட!

“என் தாத்தா, கொள்ளுத் தாத்தா எல்லாருமே டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரியலிஸ்ட். அப்பாவுக்கும் எக்ஸ்போர்ட் கார்மென்ட்ஸ்தான் பிசினஸ். அம்மா, திருப்பூர்ல டிசைனர் பொட்டீக் வெச்சிருக்காங்க. பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்கும் ஃபேஷன் டிசைனில் ஆர்வம் உண்டு.

கார்ப்பரேட் வேலையை உதறிட்டு வந்தப்போ, ஃபேஷன் டிசைனரான என் தோழி ரெஹானா பஷீர், ‘என் பிசினஸுக்கு ஹெல்ப் பண்ணு’ன்னு கூப்பிட்டாங்க. அவங்க ஸ்டூடியோவில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துட்டு, 2011-ல் ராயப்பேட்டையில் ஒரு பொட்டீக்கை ஆரம்பிச்சேன்'' என்கிற நந்திதா, 2013-ல் பெசன்ட் நகருக்குத் தன் பொட்டீக்கை மாற்றியிருக்கிறார்.

“2015-ல், ஃபேஷன் இண்டஸ்ட்ரி கோர்ஸ் படிக்க லண்டனுக்குப் போனேன். இந்தியா வந்ததுக்கு அப்புறம் டெல்லியில் நடந்த ‘இந்தியா ரன்வே வீக்’கில் வாரணமாயிரம், ஆண்டாள், கிருஷ்ணன் கான்செப்ட்டுகளில் என் ‘மெர்சல்’ கலெக்ஷனை லான்ச் செய்தேன். நல்ல வரவேற்பு கிடைச்சது’’ என்றவரிடம், பிராண்டின் பெயர் குறித்துக்கேட்டோம். ‘ஐ’ படத்தின் ‘மெர்சல் ஆயிட்டேன்’ பாட்டு நந்திதாவின் ஃபேவரைட்டாம். அதைத்தான் தன் பிராண்டு பெயர் ஆக்கியிருக்கிறார்!

‘`2018-ல் சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்த பொட்டீக்கை ஆரம்பிச்சேன்.
.ஜோதிகா மேடம் பாராட்டை மறக்கவே முடியாது! - நிவேதிதா.
2019-ல், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தின் சினிமாட்டோகிராபரான என் நண்பர் மூலமா ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானிசங்கர் நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’ படத்துக்கு காஸ்ட்யூம் டிசைனராகும் வாய்ப்பு கிடைச்சது” எனப் பூரிப்புடன் சொல்கிறார்.

“சூர்யா அண்ணா, கார்த்தி அண்ணா எல்லாம் எனக்கு ஃபேமிலி ஃபிரெண்ட்ஸ். பிருந்தா அக்காவுக்கு டிரஸ் டிசைன் பண்ணிக்கொடுப்பேன். உறவினர் திருமணம் ஒன்றில் ஜோவைச் சந்திச்சேன். அன்னிக்கு நான் போட்டிருந்த தோதி ஸ்டைல் புடவை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அதேமாதிரி தனக்கும் ஒரு டிரஸ் டிசைன் செய்துதரச் சொன்னாங்க. அவங்களுக்காக நான் டிசைன் செய்த தோதி ஸ்டைல் புடவையை பிலிம்ஃபேர் நிகழ்ச்சிக்குப் போட்டுட்டுப் போனாங்க. அடுத்தடுத்து ‘மகளிர் மட்டும்’ ஆடியோ ரிலீஸ், ‘தம்பி' பிரஸ் மீட்னு நான்தான் அவங்களுக்கு டிரஸ் டிசைன் பண்ணினேன்.

ஜோவைப் பொறுத்தவரை நிகழ்ச்சிக்கு நாலு, அஞ்சு நாள்கள் முன்னாடி போன் செய்து, ரீசன்ட் டிசைன்ஸை வாட்ஸ்அப் பண்ணச் சொல்லுவாங்க. ரெடியா இருக்கிற ரெண்டு, மூணு டிரஸ்ஸை அனுப்புவேன். அதுல ஏதாச்சும் ஒண்ணையோ, எல்லாவற்றையுமோ ஓகே பண்ணிடுவாங்க. பெரும்பாலும் சரியா இருக்கும்; தேவைப்பட்டால் சின்னச் சின்ன ஆல்ட்ரேஷன் வொர்க் பண்ணி வாங்கிக்குவாங்க அவ்ளோதான்.

பொதுவா, ஒரு சின்ன நிகழ்ச்சிக்குப் போகணும்னாகூட உடை விஷயத்துல எல்லா பொண்ணுங்களும் ரொம்ப மெனக்கெடுவாங்க. ஜோ, அவங்க வார்ட்ரோப்ல இருக்கிற சிம்பிளான ஒரு புடவையைக் கட்டிக்கிட்டு வந்தாலே எல்லார் மத்தியிலும் பளிச்சுன்னு தனியா தெரிவாங்க. ஜோகிட்ட இருக்கும் அந்த `வேற லெவல்' தன்னம்பிக்கைதான் அவங்க தோற்றத்துக்கு எக்ஸ்ட்ரா ப்ளஸ்.ஜோவின் இந்தக் குணத்தைப் பார்த்து ‘ஆள் பாதி ஆடை பாதி’ கான்செப்ட்டிலேயே எனக்கு உடன்பாடில்லாமல் போச்சு” - ஜோதிகா குறித்து சிலாகித்த நந்திதா, தன் மற்ற செலிபிரிட்டி கஸ்டமர்கள் பற்றிப் பேசினார்.

“ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானிசங்கர், மஞ்சிமா மோகன், விஜே ரம்யா, கிகி சாந்தனு, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, டைரக்டர் பாலாவின் மனைவி மலர்னு சினிமா செலிபிரிட்டிகளுடன் பெண் தொழிலதிபர்கள் பலரும் என் கஸ்டமர்கள். இவங்களும் என்னோட மற்ற கஸ்டமர்களும், கோயில் பிரசாதம் கொடுக்கிறதிலிருந்து கெட்டுகெதருக்குக் கூப்பிடுறவரை என்னை குடும்பத்தில் ஒருத்தியா நினைக்கிற தெல்லாம், என் வேலைக்கான அங்கீகாரம். இந்த உற்சாக டானிக்தான் என்னை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துது...”

நிறைவுடன் சொல்கிறார் நந்திதா!