Published:Updated:

“ஒரு மகன் பிரதமர், இன்னொரு மகன் குடியரசுத் தலைவர்!” - ‘விழிச்சவால்’ அம்மாவின் பெருங்கனவு

பெனோ செபீன்
பிரீமியம் ஸ்டோரி
News
பெனோ செபீன்

வழிகாட்டி

ந்தியாவின் பார்வை யற்ற முதல் ஐ.எஃப்.எஸ் அதிகாரியான பெனோ செபீன், மாற்றுத் திறனாளிகளில் முக்கியமான நம்பிக்கை அடையாளம். தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பணியாற்றுகிறார். சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் மகிழ்ச்சியுடன் பேசினார்.

பெனோ செபீன்
பெனோ செபீன்

“ஐ.எஃப்.எஸ் பணி ஒதுக்கீடு பெற்றவர்கள், இந்தியாவில் சில மாதங்கள் அடிப்படைப் பயிற்சி முடிந்ததும் ஏதாவதோர் அயல்நாட்டு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக, மதிப்பெண் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் வெவ்வேறு நாடுகளுக்கு எங்களை அனுப்புவார்கள். 2015-ல் எனக்கு பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்க, பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றேன். தனி ஆசிரியர் உதவியுடன், பிரெய்லி முறையில் அடிப்படையிலிருந்து பிரெஞ்ச் மொழியைக் கற்றுக்கொண்டேன். தினமும் பாதி நேரம் மொழியைக் கற்றுக்கொள்வோம். மீதி நேரம் அங்குள்ள இந்திய தூதரகத்தில் பணி செய்வோம். ஓராண்டு முடிவில், பிரெஞ்சு மொழியை இன்னும் வளமையுடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையே, 2018-ல் டெல்லியில் பணி ஒதுக்கீடு கிடைத்தது” என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் கொள்கைத் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் இணைச் செயலாளராகப் பணியாற்றுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“ஒரு மகன் பிரதமர், இன்னொரு மகன் குடியரசுத் தலைவர்!” - ‘விழிச்சவால்’ அம்மாவின் பெருங்கனவு

“மற்ற நாடுகளுடனான இந்தியாவின் கொள்கைகளை வரையறை செய்வது மற்றும் மக்களையும் வெளிநாட்டுக் கொள்கைகளையும் ஒருங்கிணைப்பது எனது துறையின் பணி. ‘ஸ்கிரீன் ரீடிங் சாஃப்ட்வேர்’ மூலம் கணினி, செல்போனில் எல்லாத் தகவல்களையும் ஒலி வடிவில் எங்களால் கேட்க முடியும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் தட்டச்சு செய்ய முடியும். இதனால் அலுவல் ரீதியாக எல்லாப் பணிகளையும் பிறர் உதவியின்றி செய்துகொள்வேன். வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் உட்பட உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மட்டத்திலான கூட்டங்களில் நானும் இயல்பாகவே கலந்துகொள்வேன். விழித்திறன் சவால் உள்ளவர், இல்லாதவர் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல், நானும் சக அரசுப் பணியாளர் என்ற அளவில்தான் பணியாற்றுகிறேன்” என்று புன்னகைக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“தீ தடுப்புத் துறைப் படிப்பை முடித்த என் கணவர் ஜோசப் க்ளமென்ட் ராஜ், எந்தக் குறைபாடும் இல்லாதவர். முழுமையாகப் புரிந்துகொண்டு என்னைத் திருமணம் செய்துகொண்டவர், இன்றுவரை என் முன்னேற்றத்துக்குப் பக்கபலமாக இருக்கிறார். எல்லா விஷயங்களையும் செவியால் கேட்டுப் பழகிவிட்டேன். எனவே, விழிச்சவால் இருந்தாலும் அதனால் ஒருபோதும் வருத்தப்படுவதில்லை. அதை ஒரு குறைபாடாகவே நான் கருதுவதில்லை. எல்லோரையும்போல நானும் இயல்பாகவே செயல்படுகிறேன்.

“ஒரு மகன் பிரதமர், இன்னொரு மகன் குடியரசுத் தலைவர்!” - ‘விழிச்சவால்’ அம்மாவின் பெருங்கனவு

பிரான்ஸில் இருந்தபோது மூத்த மகன் கிறிஸ்டன் பெவிஸ் பிறந்தான். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்புதான் இளைய மகன் அன்செல் லெவிஸ் பிறந்தான். எத்தனை வெற்றிகளைக் கண்டாலும், தாய்மை விவரிக்க முடியாத உணர்வு. மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், மகன்களைப் பொறுப்புள்ளவர்களாக வளர்க்க கண்டிப்பு காட்டவும் தயங்க மாட்டேன். கஷ்டப்படாமல் எதையும் அடைய முடியாது என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்தி வளர்க்க நினைக்கிறேன். என் இரண்டு குழந்தைகளும் என்னைப் பார்த்து வியக்கும் வகையில் நான் இன்னும் திறமையுடன் செயல்பட வேண்டும். மகன்களைக் குடியரசுத் தலைவராகவும் பிரதமராகவும் உயர்ந்த நிலையில் பார்க்க ஆசைப்படுகிறேன். என்னைப் போலவே, மகன்களையும் சேவைப் பணியில் ஈடுபட ஊக்கப்படுத்துவேன்” என்கிற பெனோ, மகன்களைக் கொஞ்சியபடியே விடைபெற்றார்.