Published:Updated:

தவில் இசையில் முதல் இளம் பெண் கலைஞா்; தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சிறுமி!

தவிலிசையில் முதல் பெண் கலைஞா் அமிர்தவர்ஷினி

``இசையின் மீதும், இசைக் கருவிகளின் மீதும் பரிச்சயமும் ஈர்ப்பும் ஏற்பட்டதின் விளைவாக ஒவ்வோர் இசைக் கருவிகளைப் பற்றியும் அது வாசிக்கப்படும் முறை பற்றியும் சிறுபருவம் முதலே அமிர்தவர்ஷினி கேட்பார்...”

தவில் இசையில் முதல் இளம் பெண் கலைஞா்; தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சிறுமி!

``இசையின் மீதும், இசைக் கருவிகளின் மீதும் பரிச்சயமும் ஈர்ப்பும் ஏற்பட்டதின் விளைவாக ஒவ்வோர் இசைக் கருவிகளைப் பற்றியும் அது வாசிக்கப்படும் முறை பற்றியும் சிறுபருவம் முதலே அமிர்தவர்ஷினி கேட்பார்...”

Published:Updated:
தவிலிசையில் முதல் பெண் கலைஞா் அமிர்தவர்ஷினி

இந்தாண்டு இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள கலா உற்சவ நிகழ்வுகளில் வைக்கும் விளம்பர பதாகையின் மாதிரியை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள எட அன்னவாசல் கிராமத்தில் வசிக்கும், பாரம்பர்ய இசைக் குடும்பத்தைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான் மணிசங்கர், வயலின் கலைஞர் ஜெயந்தி தம்பதியின் புதல்வி அமிர்தவர்ஷினி படமும் இடம் பெற்றுள்ளது. அமிர்தவர்ஷினி தமிழ்நாட்டின முதல், இளம் தவில் கலைஞர் ஆவார்.

தந்தை மணிசங்கர், தாயார் ஜெயந்தி
தந்தை மணிசங்கர், தாயார் ஜெயந்தி

கலா ​​உத்சவ் என்பது, ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியானின் கீழ், கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியாகும். இது, நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களின்  கலைத்திறன்களை வளர்ப்பதன் மூலம் கல்வியில் கலைகளை ஊக்குவிக்கிறது. ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் (RMSA) இரண்டாம் நிலை மாணவர்களுக்கான அழகியல் மற்றும் கலை அனுபவங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. இது இந்தியாவின் வளமான கலாசார பாரம்பர்யம் மற்றும் அதன் துடிப்பான பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கலை கல்வியின்  (இசை, நாடகம், நடனம், காட்சி கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள்), இந்த முயற்சி, தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2005 (NCF-2005) பரிந்துரைகளால் வழிநடத்தப்படுகிறது.

இது குறித்து, அமிர்தவர்ஷினியின் தாயார் ஜெயந்தியிடம் பேசினோம்...

``இசையின் மீதும், இசைக் கருவிகளின் மீதும் பரிச்சயமும் ஈர்ப்பும் ஏற்பட்டதின் விளைவாக ஒவ்வோர் இசைக் கருவிகளைப் பற்றியும் அது வாசிக்கப்படும் முறை பற்றியும் சிறு பருவம் முதலே அமிர்தவர்ஷினி கேட்பார். எனவே பெண்களுக்கு எட்டாத இசைக்கருவியான மேளத்தை கற்றுக் கொடுக்க தீர்மானித்தோம்.

அவர், 6 வயதில் எங்கள் குழுவில் இருந்த ஆதிச்சப்புரம் ராமதாசு பிள்ளையிடம் தவில் ஆரம்ப பாடங்களை முறையாகக் கற்க துவங்கி, பின்னர் கலைமாமணி கோவிலூர் கல்யாண சுந்தரத்திடம் தவில் கற்கும் மாணவியாக தற்போது வரை பயின்று வருகிறார்.

அமிர்தவர்ஷினி
அமிர்தவர்ஷினி

ராஜ வாத்திய கருவியான நாகசுவரத்திற்கு அடுத்தபடியாக தவிl இசைக்கருவியை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்து வரும் அமிர்தவர்ஷினி, சுமார் 500 மேடைகளுக்குமேல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மேடைக்கச்சேரிகளில் பங்கேற்று தவில் இசைப் புகழீட்டியிருக்கிறார். அவரது படத்தை இந்தாண்டும் தேர்வு செய்து வெளியிட்டிருப்பது, தமிழகத்தின் பாரம்பர்ய இசைக்கு கிடைத்த மரியாதை என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது " என்றார்.