Published:Updated:

"நிறைய அழுது முடிச்சிட்டேன்... இப்போ சிரிக்கிறேன்!"- மரபுகளை உடைத்தெறிந்த ஜாஸ்மின்

ஜாஸ்மின்
ஜாஸ்மின்

அக்கம்பக்கத்துல எல்லாரும் வாழாவெட்டின்னு பேசினாங்க. 'நீ இப்படி இருக்கிறது எங்களுக்குப் பெரிய பாரம். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்'னு மறுபடி வீட்டுல வற்புறுத்தினாங்க.

"ஒருநாள் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்குள்ளே நுழைஞ்சபோது ஒரே கூட்டம். அவசரமா என்னை உள்ளே இழுத்துட்டுப் போன எங்கம்மா, 'சீக்கிரமா டிரெஸ்ஸை மாத்திட்டு வா'ன்னு சொன்னாங்க. வந்தவங்களுக்கு டீ கொடுக்கச் சொன்னாங்க. எதுக்குன்னு தெரியாம சொன்னதையெல்லாம் செய்தேன். அப்புறம்தான் அது என்னைப் பெண்பார்க்க வந்த கூட்டம்னு தெரிஞ்சது. 'கல்யாணமெல்லாம் வேண்டாம், நான் படிக்கணும், நல்ல நிலைமைக்கு வரணும்'னு அழுதேன், கதறினேன், கெஞ்சினேன். அம்மாவும் அப்பாவும் என் பேச்சைக் கேட்கத் தயாரா இல்லை. 18 வயசு முடிஞ்ச மூணாவது நாள் நிக்கா பண்ணிவெச்சிட்டாங்க.

சரி... இதுதான் விதின்னா என்ன செய்ய முடியும்னு மனசைத் தேத்திக்கிட்டு, புகுந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்சேன். அங்கே அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. கல்யாணமான முதல் ராத்திரி... அறைக்குள்ளே நுழைஞ்ச என்னை அவன் வன்முறையா அணுகினான். என்னை அவன் மனைவி மாதிரி நடத்தாம, மூன்றாம் மனுஷி மாதிரி தாக்கினான். அவனுடைய செய்கைகளால் என்னை பயமுறுத்தினான். அன்னிக்கு நடந்தது முதலிரவில்லை; பாலியல் வன்கொடுமை.'' வருடங்கள் கடந்தும் வலியை மறக்கவில்லை ஜாஸ்மின்.

"நிறைய அழுது முடிச்சிட்டேன்... இப்போ சிரிக்கிறேன்!"- மரபுகளை உடைத்தெறிந்த ஜாஸ்மின்

"அவனுடைய அராஜகமும் அசாதாரண நடவடிக்கைகளும் தினசரி வாடிக்கையாச்சு. ஒரு கட்டத்துல அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன்னு தெரிஞ்சதும் அம்மா, அப்பாகிட்ட, 'இனியும் இந்த உறவைத் தொடர முடியாது. தயவுசெய்து விலக்கிவெச்சிடுங்க'ன்னு அழுதேன். விவாகரத்தும் முடிஞ்சது. ஆனா அது என் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலை. அதைவிட பயங்கரமான விஷயங்களுக்கான இன்னோர் ஆரம்பமா மாறினது. விரிவாக படிக்க க்ளிக் செக... http://bit.ly/3aMlIAn

அக்கம்பக்கத்துல எல்லாரும் வாழாவெட்டின்னு பேசினாங்க. 'நீ இப்படி இருக்கிறது எங்களுக்குப் பெரிய பாரம். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்'னு மறுபடி வீட்டுல வற்புறுத்தினாங்க. 'கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி நீங்க பார்க்கிற பையனோடு நான் தனியா பேசணும்'னு கண்டிஷன் போட்டேன். சம்மதிச்சாங்க.

இரண்டாவது வாழ்க்கை நிச்சயம் நல்லதா அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துச்சு மாப்பிள்ளையுடனான அந்தச் சந்திப்பு. எல்லாத்தையும் அவர்கிட்ட சொன்னேன். எல்லாம் தெரிஞ்சும் என்னை அப்படியே ஏத்துக்கத் தயாரா இருந்தார். கல்யாணம் முடிஞ்சது. முதல் திருமணமும் அந்த முதல் ராத்திரியும் தந்திருந்த மிரட்சிகளை எல்லாம் கஷ்டப்பட்டு மறந்து, புது வாழ்க்கையில் அடியெடுத்துவெச்சேன். ஆனா அந்தக் கடவுளுக்கு என்மேல என்ன கோபமோ தெரியலை... முதல்ல திருமணம் செய்தவன் மனநலம் சரியில்லாதவன்னா, அடுத்து வந்தவன் போதை அடிமையா இருந்தான். 24 மணி நேரமும் போதை. மிருகத்தை அடிக்கிற மாதிரி என்னை அடிச்சுக் கொடுமைப்படுத்துவான். நடந்த எதையாவது யார்கிட்டயாவது சொன்னேன்னு தெரிஞ்சா கொன்னுடுவேன்னு மிரட்டுவான் இத்தனை கொடுமைகளுக்கு இடையில் நான் கர்ப்பமானேன்..."

"நிறைய அழுது முடிச்சிட்டேன்... இப்போ சிரிக்கிறேன்!"- மரபுகளை உடைத்தெறிந்த ஜாஸ்மின்

''வாழ்க்கையின் மேல எனக்கிருந்த ஒரே நம்பிக்கையை சிதைச்சுச் சின்னாபின்னமாக்கின குற்ற உணர்வுகூட இல்லாம, விவாகரத்து கேட்டு வந்து நின்னான். அந்த உறவே வேணாம்னு தூக்கிப்போட்டுட்டு இந்தியாவை விட்டே எங்கேயாவது போயிடணும்னு நினைச்சேன். ஆனா என் பெற்றோர் அதை அனுமதிக்கலை. அப்படி ஏதாவது பண்ணிடப் போறேன்னு பயந்து பாஸ்போர்ட்டைக் கொளுத்திட்டாங்க. 'வீட்டை விட்டுப் போகணும்னு நினைச்சா ஒண்ணு நீ பிச்சை எடுக்கணும் அல்லது பாலியல் தொழில் பண்ணணும்'னு சாபம் கொடுத்தாங்க. ஒருநாள் யார்கிட்டயும் சொல்லாம கொச்சிக்குப் போனேன்..."

"...வாழ்க்கையில் நிறைய அழுது முடிச்சிட்டேன். அதுக்கெல்லாம் சேர்த்துவெச்சு இப்போ சிரிக்கிறேன். இனியும் சிரிச்சிட்டேதான் இருக்கப்போறேன்...'' எனச் சிரிக்கிறார். பெங்களூரின் பிரபலமான ஜிம் ஒன்றில் ஃபிட்னெஸ் பயிற்சியாளராக கெத்தாக வலம்வரும் ஜாஸ்மின், "இப்போ என் உலகத்தை அன்பால் நிறைத்திருப்பவள் என் பார்ட்னர் ரிச்சா..." என்கிறார். மரபுகளை உடைத்தெறிந்து அவர் மீண்ட கதையையும் தற்போதைய வாழ்க்கை முறையையும் ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "வலிகளைக் கடந்தேன்... வலிமையால் உயர்ந்தேன்!" https://www.vikatan.com/lifestyle/women/fitness-trainer-jasmine-talks-about-her-life-story

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு