Published:Updated:

நீங்களும் செய்யலாம்: மணப்பெண்களுக்கான மலர் அலங்காரம்

மணப்பெண்
பிரீமியம் ஸ்டோரி
மணப்பெண்

தன்னுடைய உடை, நகை, மேக்கப், ஹேர் ஸ்டைல் உட்பட எல்லாமே அதுவரை யாரும் முயற்சி செய்யாதவையாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள்.

நீங்களும் செய்யலாம்: மணப்பெண்களுக்கான மலர் அலங்காரம்

தன்னுடைய உடை, நகை, மேக்கப், ஹேர் ஸ்டைல் உட்பட எல்லாமே அதுவரை யாரும் முயற்சி செய்யாதவையாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள்.

Published:Updated:
மணப்பெண்
பிரீமியம் ஸ்டோரி
மணப்பெண்

பூக்கள் இல்லாமல் விசேஷங்களா? அதிலும் கல்யாண வீடுகளிலும், வளைகாப்பு, சீமந்தம் நடைபெறும் வீடுகளிலும் வாசலைத் தாண்டி வீசும் பூக்களின் வாசமே பாசிட்டிவிட்டியை ஏற்படுத்தும். திருமணங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான மணப்பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது தனித்தன்மை. தன்னுடைய உடை, நகை, மேக்கப், ஹேர் ஸ்டைல் உட்பட எல்லாமே அதுவரை யாரும் முயற்சி செய்யாதவையாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். இந்த எதிர்பார்ப்பு மலர் அலங்காரத்தில் கொஞ்சம் அதிகமாகவே பிரதிபலிக்கிறது. மணப்பெண்களுக்கான மலர் அலங்காரம் செய்வதில் எக்ஸ்பர்ட் சென்னை, போரூரைச் சேர்ந்த ஆர்த்தி. திருமணம், வரவேற்பு, வளைகாப்பு, நலங்கு, நிச்சயதார்த்தம் என பெண்களுக்கான அத்தனை விசேஷங்களுக்கும் ஸ்பெஷல் மலர் அலங்காரம் செய்து தருகிறார். ஒரிஜினல் பூக்களில் தலையலங்காரம் மட்டுமன்றி, நெற்றிச்சுட்டி, வளையல், பிரேஸ்லெட் போன்றவற்றையும் டிசைன் செய்து தருகிறார்.

நீங்களும் செய்யலாம்: மணப்பெண்களுக்கான மலர் அலங்காரம்

``எம்.பி.ஏ முடிச்சிருக்கேன். பிசினஸ் ஆர்வம் உண்டு. கல்யாணமாகி, குழந்தை பிறந்த பிறகுதான் அந்த ஆசை நிறைவேறியது. என்னுடைய சீமந்தத்துக்கு எனக்காக முதல் முதலா ஃப்ளவர் டெகரேஷன் பண்ணினேன். யார்கிட்டயும் கத்துக்கலை. நானா என் கற்பனைக்கேற்றபடி பண்ணின டிசைனை எல்லாரும் பாராட்டினாங்க. அப்புறம் வெளியில போகும்போதெல்லாம் வித்தியாசமான ஃபிளவர் டெகரேஷனோடு போறதைப் பார்த்துட்டு மத்தவங்களும் கேட்க ஆரம்பிச்சாங்க. முதல்ல ஃப்ரெண்ட்ஸுக்கு மட்டும் பண்ணிக்கொடுத்திட்டிருந்தேன். சில வருஷங்கள் அது தொடர்பா நிறைய ரிசர்ச் பண்ணி, புது விஷயங்களைத் தேடிக் கத்துக்கிட்ட பிறகு சின்ன பிசினஸா தொடங்கினேன். இது எனக்கு ஏழாவது வருஷம்’’ என்று சொல்லும் ஆர்த்தி, மூன்று கிளைகளுடன் தன் பிசினஸில் வளர்ந்திருக்கிறார். இதைக் கற்றுக்கொண்டு சுயதொழில்முனைவோராக விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நீங்களும் செய்யலாம்: மணப்பெண்களுக்கான மலர் அலங்காரம்
நீங்களும் செய்யலாம்: மணப்பெண்களுக்கான மலர் அலங்காரம்

என்ன ஸ்பெஷல்?

சாதாரண ஜடையலங்காரம், மலர் அலங்காரம் செய்யும்போது கிடைக்கும் பூக்களைவைத்து, அந்தந்த நிறங்களுக்கேற்றபடிதான் டிசைன் செய்ய முடியும். ஊதா கலர் பட்டுப்புடவைக்கு மல்லிகைச் சரமோ, ரோஜா வைத்துப் பின்னிய ஜடையோ பொருந்தாதது போலத் தோன்றலாம். இந்தப் பிரத்யேக மலர் அலங்காரத்தில் ஒரிஜினல் பூக்களில் நம் விருப்பத்துக்கேற்ற கலர் ஸ்பிரே செய்து புடவைக்கு மேட்ச்சாக மாற்றலாம். கறுப்பு கலர் பட்டுப்புடவை, தங்க ஜரிகையில் பார்டர் என்றாலும் கவலையில்லை. ரோஜாவுக்குக் கறுப்பும் கோல்டும் கலந்த ஸ்பிரே அடித்து மேட்ச்சாக்கலாம். நீலநிற ரோஜாவும், ஆரஞ்சுநிற மல்லிகை மொட்டும்... கற்பனைக்கெட்டாத சுவாரஸ்யங்கள்! கலர் காம்பினேஷனைப் போலவே பூக்களைக் கட்டும் டிசைன்களும், ஜடையலங்கார உத்திகளும் மாறுபடும். உதாரணத்துக்கு திருமணத்துக்கு உபயோகிக்கும் அளவுக்கு அதிக பூக்களை வரவேற்புக்கு உபயோகிக்க மணப்பெண்கள் விரும்புவதில்லை. ரிசப்ஷனுக்கான பூ அலங்காரம் சிம்பிளாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதேபோல வளைகாப்பு, சீமந்தத்துக்குக் குட்டிக்குட்டி பொம்மைகள், கிருஷ்ணர் உருவங்கள் பதித்த லைட் வெயிட் அலங்காரங்கள்தான் இப்போது டிரெண்ட்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்களும் செய்யலாம்: மணப்பெண்களுக்கான மலர் அலங்காரம்

என்னென்ன தேவை... முதலீடு?

ரோஜா, மல்லி, முல்லை, நந்தியாவட்டை உள்ளிட்ட பூக்கள், இலைகள், வாழைநார், தேவைப்பட்டால் செயற்கைப் பூக்கள், கோல்டன் மணிகள், ஜரிகை நூல் உள்ளிட்ட அலங்காரப் பொருள்கள். விருப்பமான கலர்களில் ஸ்பிரே.

5,000 ரூபாய் முதலீடு போதுமானது.

நீங்களும் செய்யலாம்: மணப்பெண்களுக்கான மலர் அலங்காரம்

எதில் கவனம் வேண்டும்?

பூக்களைத் தேர்வுசெய்வதில் கவனம் வேண்டும். சில பூக்களை மொட்டுகளாக வாங்க வேண்டும். டெலிவரி செய்யப்போகும் நேரத்தையும், விசேஷம் நடக்கவிருக்கும் நேரத்தையும் கணக்கிட்டு, அதற்கேற்ப ரெடி செய்து தர வேண்டும். பலமணி நேரம் முன்னதாகச் செய்தால் பூக்கள் வாடிவிடும். ஃப்ரெஷ்னெஸ் போய்விடலாம். சில பூக்கள் எல்லா சீசன்களிலும் கிடைக்காது. அந்தப் பூக்கள்தாம் வேண்டும் எனக் கேட்போருக்கு சீசனில் விலை வேறுபடும் என்பதைத் தெரிவித்தபிறகே ஆர்டரை உறுதிசெய்ய வேண்டும். கலர்களிலும், லேட்டஸ்ட் டிரெண்டுகளிலும் அப்டேட் செய்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.

நீங்களும் செய்யலாம்: மணப்பெண்களுக்கான மலர் அலங்காரம்

பிசினஸ் வாய்ப்பு.... லாபம்?

மணப்பெண்ணுக்கான மலர் அலங்காரங்களுக்குக் குறைந்தபட்சம் 2,500 ரூபாயிலிருந்து கட்டணம் வாங்கலாம். ஆடம்பரமான அலங்காரம் என்றால் இது இன்னும் கூடும். சீமந்தத்துக்கு 3,000 ரூபாய் வாங்கலாம்.

அலங்காரங்களைப் படம் எடுத்து வாட்ஸ்ஆப் குழுக்களிலும், சோஷியல் மீடியாவிலும் பகிர்ந்தாலே வாய்ப்புகள் வரும். திருமண கான்ட்ராக்டர்கள், அழகுக்கலை நிபுணர்கள் போன்றோரிடம் பேசிவைத்தும் ஆர்டர் வாங்கலாம். சிலமணி நேர உழைப்பே தேவைப்படும். 50 சதவிகித லாபம் நிச்சயம்.

நீங்களும் செய்யலாம்: மணப்பெண்களுக்கான மலர் அலங்காரம்

பயிற்சி?

ஒருநாள் பயிற்சியில் அடிப்படை மலர் அலங்கார நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளலாம். கட்டணம் 2,500 ரூபாய்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism