Published:Updated:

அலைபாயும் கூந்தலில் ஆரம்பிக்கிறது உங்கள் சுதந்திரம்!

'முடியை இழுத்துக் கட்டவேண்டிய அவசியம் இனி இல்லை' என்கிறது #FreedomHair கேம்பைன்.

Freedom Hair
Freedom Hair

`தலைவிரிகோலமா இருக்காதே, முடியை இழுத்துக் கட்டு'  எனும் வசையைக் கேட்டுக் கேட்டு வளர்ந்த பெண்களிடம், 'உங்கள் விருப்பப்படி ஓபன் ஹேரில்  வலம் வாருங்கள்' என்கிறது #FreedomHair கேம்பைன்.

Find Yourself Within You
Find Yourself Within You

இன்றைய தலைமுறைப் பெண்கள், தங்களுக்கான சுதந்திரத்தை அவர்களுக்குள் இருந்துதான் பெறமுடியும் என்பதை உணர்ந்து, அதனை அடைய போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாற்றத்தை உலகுக்கு வலியுறுத்தும் விதமாக, பேன்டீன் இந்தியா #FreedomHair எனும் கேம்பைன் ஆரம்பித்துள்ளது.

இதைப் பற்றிய பேன்டீனின் குறிப்பில், 'கிட்டத்தட்ட 18 மாதங்களாக இந்தியா முழுவதும் உள்ள பல பெண்களிடம் அவர்களின் வாழ்க்கைச்சூழல் மற்றும் அதை அவர்கள் எதிர்நோக்கும் விதம் எனப் பலதரப்பட்ட கருத்துகளை கேட்டறிந்ததில் உருவானதுதான் இந்த கேம்பைன்.

இன்றைய தலைமுறைப் பெண்களிடம், அவர்கள் எதிர்நோக்கும் அனைத்து சவால்களுக்குமான தீர்வு இல்லை. இருப்பினும், முந்தைய தலைமுறைப் பெண்களின் வாழ்க்கை முறையிலிருந்து  வேறுபட்ட ஒரு வாழ்க்கையைத் தேடி அடைவதில் அவர்கள் முனைப்புடன்  இருக்கிறார்கள். அடுத்தவரின் கதையைத் தொடர்வதைவிட, அவர்களுக்கான கதையை அவர்களே எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இவர்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாகத்தான் இந்த கேம்பைன்உருவாகியிருக்கிறது' என்று தெரிவித்திருப்பதுடன், ஃப்ரீ ஹேர், பெண்களுக்கு ஒரு சூப்பர் ஹீரோ உணர்வைக் கொடுப்பதாகவும் குறிப்பிடுகிறது.

தற்போது, பெண்களுக்கான 'மீ டைம்', 'நோ மீன்ஸ் நோ ' போன்ற வலிமையான கருத்துகள் பெண்களின் மனத்தில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் சற்றே அழுத்தமாகப் பதிந்துகொண்டிருக்கிறது. பெண்கள், தாங்கள் உடுத்தும் உடையில் ஆரம்பித்து உயர்கல்வி, கல்லூரி, பணி, திருமணம் எனத் தமக்கான வாழ்க்கை எது என்பதில் தெளிவுடனும் தீர்க்கமாகவும் இருக்கின்றனர். 

Be Yourself Do What You Love
Be Yourself Do What You Love

'ஒரு பெண், தன் கேசத்தை விரித்துவிட்டிருக்கும்போது, அதை சூப்பர் ஹீரோக்களின் கேப் (Cape) போன்று உணர்வதாக எங்களிடம் தெரிவித்தார்' என்கிறார், பேன்டீன் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் டைரக்டர் பினு.

கட்டுப்பாடுகள் சூழ வாழும் வாழ்க்கையில் மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கும் இன்றைய பெண்கள், அம்மாற்றத்தைத் தங்கள் விருப்பப்படி கட்டவிழ்த்து, அலைபாயும் கூந்தலில் இருந்து தொடங்கலாமே' என்கிறது இந்த #FreedomHair கேம்பைன்.