கோடிக்கணக்கில் செலவு செய்து, பிரமாண்ட திருமணங்களைச் செய்வதற்கான மோகம் அதிகரித்திருக்கும் அதே வேளையில், அண்மைக்காலமாகப் பிரபலமாகி வருகிறது `ஈகோ ஃப்ரெண்ட்லி மேரேஜ்’ எனப்படும் பசுமைத் திருமணங்கள்.

சூழலை மாசுபடுத்தாத பொருள்களின் பயன்பாடு, கார்பன் அதிகரிப்பைக் குறைத்தல், உணவுப்பொருள்கள் வீணாதலைத் தடுத்தல், உள்ளூர்ப் பொருளாதாரத்துக்கு உதவுதல்... இவைதான் பசுமைத் திருமணங்களின் மிக முக்கிய நோக்கம். அப்படியான திருமணங்களில் ஒன்றுதான் ‘ஆர்கானிக் அப்ஷான்’ என்ற அப்ஷான் அகமதுவின் திருமண நிகழ்ச்சியும்.

``என் திருமணத்தைப் பசுமைத் திருமணமாக நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பெற்றோரிடம் தெரிவித்தேன். ஆனால், நிறைய விஷயங்களுக்கு அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எனக்கு, விதைகள் பதித்த காகிதத்தில் அழைப்பிதழ்களை அச்சடிக்க ஆசை. பெங்களூரு, கோயம்புத்தூரில் விசாரித்தபோது அதற்கான செலவுகள் அதிகம் எனத் தெரிந்தது. அதனால், சிங்கிள் கலர் அழைப்பிதழாகத் தேர்ந்தெடுத்து, அவற்றை அகமதாபாத்திலிருந்து வரவழைத்தேன். ஓர் அழைப்பிதழுக்கு கூரியர் கட்டணத்துடன் சேர்த்து ஆறு ரூபாய் மட்டுமே செலவானது. வழக்கமாகவே, எங்கள் மதத்தில் திருமண நிகழ்ச்சிகள் பகல் நேரத்தில்தான் நடக்கும். அதனால் மின் அலங்காரங்கள் தேவைப்படவில்லை. திருமண நிகழ்ச்சியில் முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் பார்த்துக்கொண்டேன். திருமண விருந்தைப் பொறுத்தவரை அளவாக, அதே நேரம் நிறைவாகப் பரிமாறினோம். இப்படிப் பசுமை சார்ந்த சிறுசிறு விஷயங்களால் எங்கள் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது’’ என்கிறார் பெருமிதத்தோடு.

அழகியல் பேசும் இ-அழைப்பிதழ்கள்!

இன்றைய தலைமுறையே இணையம் வழியாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. திருமண அழைப்பிதழ்களை வீடியோ வாகவோ, இ-அழைப்பிதழ்களாகவோ தயாரித்து அதை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மெயில் வழியாக அனுப்பினால் காகிதங்கள் வீணாவது தடுக்கப்படும். இவற்றில் நினை வூட்டல் வசதிகளையும் இணைத்துக்கொள்ள முடியும் என்பது கூடுதல் வசதி.

திருமண அழைப்பிதழ்களில் பூஞ்செடிகள் அல்லது காய்கறிகளின் விதைகளைப் பதித்து வழங்குவதும் இப்போது பிரபலமாகி வருகிறது. அவற்றை வீட்டுத்தோட்டத்தில் புதைப்பதால் செடிகளாக, மரங்களாக வளர்ந்து, அதன் ஆயுள் உள்ளவரை மண மக்களின் பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.

குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என முடிந்தவரை குறைந்த எண்ணிக்கையிலேயே விருந்தினர்கள் வாழ்த்த மண வாழ்க்கையை இனிதே தொடங்கலாம். இதனால் உங்களின் செலவு மட்டுமல்ல; அவர்களின் செலவும் சிரமமும் கூடக் குறையும். திருமண நிகழ்ச்சியைச் சில நிமிட வீடியோ பதிவாக்கி அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

வேண்டாம் பிளாஸ்டிக்!

திருமண விசேஷங்களில் பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட டம்ளர்கள், இலைகள், தட்டுகள், தண்ணீர் பாட்டில்களுக்குப் பதிலாக களிமண் குடுவைகள், ஸ்டீல் டம்ளர்கள், ஆர்கானிக் டிஸ்போஸபிள் தட்டுகள் மற்றும் காகித கப்களைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாகத் துணி அல்லது ரீ-சைக்கிள் காகிதப் பைகளைப் பயன்படுத்தலாம். இப்போது பாக்கு மட்டைகளில் தயாரிக்கப்படும் டம்ளர், தட்டு, கப் ஆகியவை பிரபலமாகி வருகின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம்.

வழிபாட்டுத் தலங்களில் திருமணம் நடத்துவது எளிது; சிக்கனமானதும்கூட. கல்யாண மண்டபத்தைத் தவிர்த்து, திறந்தவெளி அரங்கு அல்லது ஒரு தோட்டத்தில் எளிமையாகத் திருமணத்தை நடத்தினால், அலங்காரங்களைக் குறைக்க முடியும். அவுட்டோர் திருமணம் என்றால், இயல்பான வெளிச்சம் ஒரு ப்ளஸ் பாயின்ட். இரவில்தான் திருமணம் என்றால் ஈகோ ஃப்ரெண்ட்லி விளக்கு / லேன்டெர்ன் அல்லது ஆர்கானிக் கேண்டில்கள் பயன்படுத்த லாம். இதனால் மின்சாரம் மிச்சமாகும். மாசையும் குறைக்க முடியும்.

நினைவுகளைச் சுமக்கும் கிரீன் கிஃப்ட்!

புதுமணத் தம்பதியருக்கு அளிக்கப்படும் பரிசுகளில் பொக்கேக்களைத் தவிர்க்கச் சொல்லலாம். வீட்டை அழகுபடுத்தும் இண்டோர் பிளான்ட்களை பசுமை நினைவுகளாக வழங்கலாம். திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்று அல்லது விதைப்பந்துகளைப் பரிசளிப்பது திருமண நினைவுகளைச் சுமக்கும் கிரீன் கிஃப்டாக இருக்கும்.

இன்று எளிமையாக இருப்பதற்கே அதிக வசதி தேவைப்படுகிறது. அதற்கு இந்தப் பசுமைத் திருமணங்களும் விதிவிலக்கல்ல. இதற்கான பொருள்களும் சேவையாளர்களும் கிடைப்பது இன்று அரிதாகத்தான் இருக்கிறது. ஆனாலும், கொஞ்சம் முயற்சி செய்தால் பட்ஜெட், ஸ்டைல் எதிலும் சமரசம் செய்துகொள்ளாமல் பசுமைத் திருமணத்தை ஜாம்ஜாமென்று நடத்தி முடித்து விடலாம்.

இது என் மகளின் பசுமைத் திருமணம்!

மகள்களைப் பெற்ற அப்பாக்கள் அனைவருக்கும் ஆனந்தம், அழுகை, அக்கறை, பேரின்பம் என அனைத்து உணர்ச்சிகளும் ஒரே நேரத்தில் வெளிப்படுவது மகளின் திருமணத்தில்தான். திருமணத்தை ஊர் மெச்சும்படி நடத்த வேண்டும் என்பதே ஒவ்வோர் அப்பாவின் கனவாக இருக்கும். நடுக்கரையைச் சேர்ந்த மகேஷ்குமார், தன் மகளின் திருமணத்தை எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக நடத்தி முடித்திருக்கிறார்.

``என் மகள் ஸ்வாதியின் திருமணம், பசுமை சார்ந்த திருமணமாக இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தேன். அதற்காக ஒன்பது மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட ஆரம்பித்துவிட்டோம்.

திருமண அழைப்பிதழ்களை, பூஞ்செடிகளின் விதைகளுடன் கூடிய காகித அட்டைகளில் அச்சடித்து வழங்கினோம். மணமக்கள் அமரும் திருமண மேடையைப் பூக்களோடு, கரும்பு, இளநீர் என இயற்கையான பொருள்களைக் கொண்டு வித்தியாசமாக அமைத்தோம். வந்தவர்கள் ஆச்சர்யமாகி, தங்கள் பிள்ளைகளின் திருமணத்துக்கும் இதுபோன்ற மேடை அலங்காரம் அமைக்க வேண்டும் என்றார்கள். எதற்காக இந்த பசுமைத் திருமணத்தை நடத்த நினைத்தேனோ, அந்த முயற்சி வெற்றியடைந்துவிட்டதாகவே அந்தத் தருணத்தில் உணர்ந்தேன்.

`0% wastage; 100% eco friendly marriage' என்கிற கான்செப்ட்டில் மகளின் திருமணத்தை நடத்தியதோடு, ஆசிரமக் குழந்தைகள் நூறு பேருக்குப் புத்தாடைகள் வழங்கி, திருமணத்துக்கு அழைத்து, விருந்து பரிமாறி, ஆனந்தமாக அனுப்பியது வரை எங்கள் இல்லத் திருமண விழா இனிதாக முடிந்திருக்கிறது. என் மகளின் திருமணம் எனக்கு மனநிறைவை மட்டுமல்ல; இந்தச் சமூகத்தின் மீதான என் அக்கறையை, என் சுற்றத்தாரிடம் கொண்டு சேர்த்திருக்கிறது'' என்கிறவரின் முகத்தில் ஆயிரம் சூரியப் பிரகாசம்!