Published:Updated:

ரிலாக்ஸ் டைம்: ஊரடங்கு... ஊருக்குத்தான், உள்ளத்துக்கு அல்ல!

ரிலாக்ஸ் டைம்
பிரீமியம் ஸ்டோரி
ரிலாக்ஸ் டைம்

எப்போதும் பொங்கட்டும் உற்சாகம்

ரிலாக்ஸ் டைம்: ஊரடங்கு... ஊருக்குத்தான், உள்ளத்துக்கு அல்ல!

எப்போதும் பொங்கட்டும் உற்சாகம்

Published:Updated:
ரிலாக்ஸ் டைம்
பிரீமியம் ஸ்டோரி
ரிலாக்ஸ் டைம்
படிப்பு, வேலை போன்ற காரணங்களுக் காகச் சாதாரண நாள்களில் ஹாஸ்டலில் தங்க வேண்டிய சூழல் வந்தாலே மனம் அதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளாது. லாக்டௌன் நாள்களில் வீட்டைப் பிரிந்து ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்கள் தற்போது எதிர்கொள்ளும் உடல்நல பிரச்னை களிலிருந்து விடுபடுவதற்கான தீர்வுகள் குறித்துப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் கனிமொழி.

``வெளியில் எங்கும் செல்லாமல் அறைக்குள்ளேயே இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் முதல் பிரச்னை வைட்டமின்-டி குறைபாடு. இந்தக் குறைபாட்டால் அவர்களுக்கு உடல்வலி, மூட்டுவலி போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம். இதிலிருந்து விடுபட ஹாஸ்டலின் மொட்டை மாடி அல்லது சூரிய ஒளி நன்றாக விழும் இடங்களில் காலை மற்றும் மாலை வேளையில் சிறிது நேரம் நிற்கலாம், நடக்கலாம். இதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின்-டி கிடைக்கும். அந்தக் குறைபாடு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளும் நீங்கிவிடும்.

 கனிமொழி -  அபிராமி
கனிமொழி - அபிராமி

வெளியில் எங்கும் செல்லாமல், அறைக்குள்ளேயே இருப்பதால் ஏற்படும் மனஅழுத்தம் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு, சீரற்ற மாதவிடாய் சுழற்சி போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படும் பட்சத்தில் டெலிபோனிக் அல்லது வீடியோ கால் மூலம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். சமூக இடைவெளி, சுகாதார முன்னெச்சரிக்கை நடைமுறைகளைப் பின்பற்றி நேரடியாக மருத்துவரைச் சந்தித்தும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

ஹாஸ்டல் பெண்கள் இந்த லாக்டௌன் நேரத்தில் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னை உடல் எடை அதிகரிப்பு. ஒரே இடத்திலேயே வெகுநேரம் அமர்ந்து வேலை செய்யாமல், அவ்வப்போது சிறிது நேரம் இடைவேளை எடுத்துக்கொண்டு உடலுக்கு அசைவு தரும்படியான வேலைகள், எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். தினமும் நடைப்பயிற்சி செய்யலாம்.

கொரோனா காலத்தில் சத்தான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஹாஸ்டலில் இருக்கும் பெண்கள் ஒரு கெட்டில் வாங்கி வைத்துக்கொண்டு தினமும் ஒரு முட்டை, சிறிது கொண்டைக்கடலை வேகவைத்துச் சாப்பிடலாம். காய்கறிகள், பழங்களை வாங்கி நன்றாகக் கழுவி சுத்தம் செய்துவிட்டுச் சாப்பிடலாம். தினமும் ஐந்து பாதாம், பேரீச்சம்பழம் சாப்பிடலாம். கூடவே சிறிதுநேரம் யோகா, தியானம் செய்யும்போது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.”

ஹாஸ்டல் பெண்களுக்கு ஏற்படும் மனநலம் சார்ந்த பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் தருகிறார் சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் அபிராமி.

“காலை எழுந்தது முதல், இரவு உறங்கச் செல்வதுவரை பெரும்பாலான நேரம் ஒரு சிறிய அறையிலேயே அடைபட்டுக் கிடக்க வேண்டும். இதற்கிடையில் எட்டு மணி நேர அலுவலக வேலை வேறு. மனம் விட்டுப் பேசி தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்ல அருகில் யாரும் இல்லாத நிலை; பிடித்த உணவைச் சாப்பிட முடியாதபட்சத்தில் நிச்சயமாக ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்கள் அதீத மன அழுத்தத்துக்கு தள்ளப் படுவது தவிர்க்க முடியாததுதான்.

ரிலாக்ஸ் டைம்: ஊரடங்கு... ஊருக்குத்தான், உள்ளத்துக்கு அல்ல!

இதுபோன்ற நிலையில் இருக்கும் பெண்கள் ‘இந்த நிலை நிரந்தரம் அல்ல’ என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். அறைக்குள்ளேயே அடைபட்டிருப்பது வீண் சிந்தனைகள், எதிர்கால பயம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். நேரம் கிடைக்கும்போது உங்கள் ஹாஸ்டலில் வசிக்கும் மற்ற பெண்களுடன் பேசலாம். நாள் முழுவதும் உங்களை பிஸியாகவே வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் அறையில் நீங்களே சமைத்துக்கொள்ள வசதி இருந்தால் பிடித்த உணவுகளைச் செய்து சாப்பிடுங்கள். பெற்றோர், நண்பர்களுடன் தினமும் வீடியோ காலில் பேசுங்கள். பிடித்த பாடல்களைக் கேளுங்கள். நிச்சயம் அது உங்கள் மனநிலையை மாற்ற உதவும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism