Published:Updated:

சாப்பிடத் தெரியுமா? #HowtoEat

சாப்பிடத் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
சாப்பிடத் தெரியுமா?

#Lifestyle

வித்யா

சாப்பிடத் தெரியுமா? #HowtoEat

சாப்பாடு விஷயத்துல எல்லோரையும் ரெண்டே வகையா பிரிச்சிடலாம். வயித்த நிரப்பணுமேன்னு வெந்துச்சு, வேகலைனு கண்டுக்காம தக்காளிச் சட்னியா, காரச் சட்னியான்னு தெரிஞ்சுக்கக்கூட பிரயத்தனப் படாம தட்டுல போட்டதை சாப்பிட்டு, பொழப்பப் பார்க்கப் போகிற ஆட்கள் ஒரு பக்கம். இட்லிக்கு கடலை சட்னி நல்லாதான் இருக்கு, கூடவே `மொளகா சாந்து' இருந்தா அள்ளும்னு ஆப்ஷன் தேடுறவங்களும், கடலை எண்ணெயில பொரிச்சாதான் பூரின்னு அடம்பிடிக்கறவங்களும் இன்னொரு பக்கம்.

மனுஷன் ஆடி ஓடி அலைஞ்சு திரிஞ்சு சம்பாதிக்கிறதெல்லாம் எதுக்கு? எல்லாம் இந்த அரை சாண் வயித்துக்குதானே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சாப்பிடத் தெரியுமா? #HowtoEat
சாப்பிடத் தெரியுமா? #HowtoEat

பிரியாணிக்கு தால்சாதான் சரின்னு ஆரம்பிச்சு பழைய சோத்துக்கு பக்குவமான வெஞ்சனம் வேணும்னு கறாரா இருக்கும் ஆட்களின் ரசனையெல்லாம் வேற லெவலா இருக்கும். அனுபவிச்சு சாப்பிடுறது ஒரு தனி சுகம். அதுவும் இதுக்கு இதுதான் காம்பினேஷன்; இப்படிதான் சமைக்கணும், சாப்பிடணும்னு ஒரு கொள்கை கோட்பாட்டோட இயங்குறவங்க உலகின் ஆகச் சிறந்த ரசனைக்காரங்க. தினம் காலைல குடிக்கிற காபில ஆரம்பிச்சு, வருஷத்துக்கு ஒருக்கா நடக்கிற கெடாவெட்டு பொங்கல் வரைக்கும் அவங்க சாப்பாட்டுல காட்ற ஈடுபாடு இருக்கே அடடா!

இந்த இதழ்ல அங்கங்கே, இந்தந்த ஐட்டத்தை இப்படி, இப்படித்தான் சாப்பிடணும்னு டிப்ஸ் தந்திருக்கோம். படிச்சு, சாப்பிட்டு, என்ஜாய் பண்ணுங்க!