Published:Updated:

அடிக்குது குளிரு! - #HowtoEscape

அடிக்குது குளிரு
பிரீமியம் ஸ்டோரி
அடிக்குது குளிரு

#Lifestyle

அடிக்குது குளிரு! - #HowtoEscape

#Lifestyle

Published:Updated:
அடிக்குது குளிரு
பிரீமியம் ஸ்டோரி
அடிக்குது குளிரு

ஜெ.எஃப்

கோடை வெயில்ல வியர்க்க விறுவிறுக்க சுத்தும்போதுகூட ரெண்டு வேளை குளிக்காதவங்க... குளிர் காலத்துல சின்சியரா ரெண்டு நேரம் குளிப்பாங்க. இதுக்கு ஒரே காரணம்தான்... உடலுக்கு மசாஜ் செய்யுறது போல சுகமா வெந்நீர் குளியலுக்கு ஆசைப்படுறதுதான். கோவிட்-19 பரவல் காணப்படுற இந்த நேரத்துல வெளியில போயிட்டு வீட்டுக்கு வந்த உடனே குளிக்கணும்னு மருத்துவர்கள் அறிவுறுத்துறாங்க.

பொதுவா சாப்பாடு, தூக்கம், குளியல், உடற்பயிற்சின்னு ஒவ்வொருவரும் சில ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவோம். இதுலேருந்தெல்லாம் ஜகா வாங்குறது குளிர்காலத்துலதானாம். அப்படி நாம காட்டுற அலட்சியம் உடல்நலத்தை மட்டுமல்ல மனநலத்தையும் பாதிக்கலாம்னு மருத்துவர்கள் எச்சரிக்கிறாங்க.

அடிக்குது குளிரு! - #HowtoEscape

வெந்நீர்ல குளிக்கிறது உடல் வெப்பத்தை அதிகரிக்கும். தோல்ல இருக்கிற செல்கள் பாதிக்கப்படும். அதனால தோல் வறட்சி, அரிப்பு, ரேஷஸ் போன்ற பிரச்னைகள் வரலாம். தோல்ல சுருக்கம் விழலாம்.

வெந்நீர் குளியல் கூந்தலின் வேர்களை பலவீனப்படுத்தி முடிகொட்டுற பிரச்னையைக் கொடுக்கும். நீண்ட நேரம் குளிக்கிறதால, குளிச்சு முடிச்சதுக்கு அப்புறமும் சோர்வா தூங்கிவழிஞ்ச மாதிரி இருப்போம்.

தொடர்ந்து வெந்நீர்லயே குளிக்கிறதால அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி வெயில் காலத்துல கூட வெந்நீர் குளியல்தான் கேக்குமாம் உடம்பு.

30 நிமிஷங்களுக்கு அதிகமா நீண்டநாள் வெந்நீர்ல குளிக்கிறது குழந்தையின்மைக்குக்கூட காரணமாகலாம். அதனால குழந்தையின்மை பிரச்னை இருக்கிறவங்க குளிர்ந்த நீரில் குளிக்கணும்னு மருத்துவர்கள் சொல் றாங்க.

இவ்ளோ பஞ்சாயத்து இருக்கிறதால குளிர் காலத்துல அடிக்கடி வெந்நீர்ல குளிக்கிறதைக் குறைச்சுக்கோங்க. அதுக்காகக் குளிக்கிறதைக் குறைச்சிடாதீங்க மக்கா...