ஜெ.எஃப்

குளிருக்கு எதிரான ஆயுதமா நம்மில் பெரும்பாலானவங்க நினைக்கிறது காபியையும் டீயையும்தான். வழக்கமா ரெண்டு, மூணு கப்புன்னு உள்ளே போனா, குளிர்காலத்துல இதுக்கு மேல ரெண்டைப் போட்டு காபி, டீயோட எண்ணிக்கை ஏறிட்டே போகும்.

கொரோனாவால வந்த வொர்க் ஃப்ரம் ஹோம் கலாசாரம்படுத்துற பாட்டுல ஏற்கெனவே வீட்டுப் பெண்களெல்லாம் ஓவர் டைம் பார்த்து ஓஞ்சு போறாங்க. இப்போ குளிர்காலமும் சேர்ந்துட்டதால, வீட்ல அரை மணி நேரத்துக்கு ஒருமுறை `காபி போட்டுத் தாயேன்!', `ஒரு டீ ப்ளீஸ்!'னு ஆர்டர் பறக்குது.

இது மாதிரி பானங்கள் உடலை வெப்பப்படுத்தும் என்ற எண்ணம் தவறுன்னு அறிவியல் சொல்லுது. சூடா காபி, டீ குடிக்கும்போது உடம்பு வெதுவெதுப்பா இருக்கிற மாதிரி உணரலாம். ஆனா, ஒரு சில நிமிடங்கள்ல மறுபடியும் குளிர் உங்களைத் தாக்க ஆரம்பிச்சுடும். அதிகமா காபி, டீ குடிக்கும்போது அதுல உள்ள கஃபைன் என்ற வேதிப்பொருள் மனப்பதற்றம், உறக்கமின்மை, அமைதியின்மை மாதிரி பிரச்னைகளையெல்லாம் கொடுக்கலாம். தலைவலிக்காக காபி குடிக்கிறேன்னு சொல்றவங்களுக்கும் ஒரு மெசேஜ். அதிக காபி குடிக்கிற பழக்கமே தீவிர தலைவலி, மைக்ரேன் பிரச்னைகளைக் கொடுக் கும்னும் ஆய்வுகள் சொல்லுது.

காபியிலதான் கஃபைன் இருக்கு... இதுனால டீ குடிக்கலாமேன்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. காபி, டீ ரெண்டுலயுமே கஃபைன் இருக்கு. டீ இலைகள்ல 3.5%, காபிக் கொட்டைகள்ல 2.2% கஃபைன் இருக்கு. காபி தயாரிக்கிற முறையினால காபித்தூள்ல இருந்து டீயைவிட அதிக அளவு கஃபைன் பிரியுது. அதனால காபியோ டீயோ, மழையோ குளிரோ ஒரு நாளைக்கு ரெண்டு அல்லது மூணு கப்புக்கு மேல வேண்டாமே!