லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

தலைக்கு மேல் பிரச்னை... ஆலோசனைகள், தீர்வுகள்

ஆலோசனைகள், தீர்வுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலோசனைகள், தீர்வுகள்

ராஜலட்சுமி

#HowToMaintainHairHealth

ல்லோருக்கும் தலைக்கு மேல் பிரச்னை. எப்படித் தலைக்குக் குளிப்பது, தினமும் ஷாம்பூ உபயோகிக்கலாமா... முன்னந்தலை வழுக்கையை சரி செய்ய முடியுமா... இப்படி ஆளாளுக்கு ஆயிரம் சந்தேகங்கள்... கூந்தல் தொடர்பான பரவலான சந்தேகங்களுக்கு அழகுக்கலை ஆலோசகரும் அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அஷோக் சொல்லும் எளிய தீர்வுகளையும் ஆலோசனைகளையும்தான் இந்த இதழில் பார்க்கப் போகிறீர்கள்.
கீதா அஷோக்
கீதா அஷோக்

தினமும் தலைக்குக் குளிக்கலாமா?

தலைமுடி உதிர்வுக்குச் சரியான பராமரிப்பின்மையே முக்கிய காரணம்.ஒருநாள் விட்டு ஒருநாள் தலையில் எண்ணெய் தடவி ஊறவைத்துக் குளித்தால் மண்டைப்பகுதியில் உள்ள வறட்சி நீங்கி முடி உடைந்து உதிர்வது குறையும்.

ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய் மூன்றையும் தலா 100 மில்லி எடுத்துக் கலந்துகொள்ளவும். அதில் லாவண்டர் மற்றும் ரோஸ்மெரி அரோமா ஆயில்களில் தலா 35 துளிகள் கலந்து ஊறவிட்டுக் குளிக்கவும். இது முடியின் வேர்க்கால்களைப் பலப்படுத்தும். தலைக்குக் குளிக்க வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்தவும்.

வெறும் தண்ணீரில் கூந்தலை அலசினால் அழுக்கு வெளியேறாமல் பிசுக்காகப் படியும். நாள்பட்ட பூஞ்சைத் தொற்றாக மாறிவிடும்.

தலைக்கு மேல் பிரச்னை...  ஆலோசனைகள், தீர்வுகள்

தினசரி ஷாம்பூ உபயோகிப் பதில் தவறில்லை. சீயக்காய், ஷாம்பூ இரண்டுமே கிளீனிங் ஏஜென்ட்டுகள்தான். தினசரி ஷாம்பூ குளியல் எடுப்போர், குளிப்பதற்கு முன் தலையில் சிறிது எண்ணெய் வைத்துக் கொள்வது மண்டை ஓட்டு வறட்சியைத் தவிர்க்கும்.

நீங்கள் உபயோகப்படுத்தும் ஷாம்பூவில் பாரபன் மற்றும் சோடியம் லாரல் சல்பேட் அதிகமாக இருந்தால், கண்டிஷனர் அவசியம். கண்டிஷனர் உப யோகிக்காவிட்டால் கூந்தல் நார்போல ஆகிவிடும்.

தலைக்கு மேல் பிரச்னை...  ஆலோசனைகள், தீர்வுகள்

வெயில் காலத்தில் கூந்தலை எப்படிப் பராமரிப்பது?

தலையில் அதிகப்படியான வியர்வை படிவதால் வேர்க்கால்களில் உப்பும், அழுக் கும் படிந்துவிடும். மேலும் நீர்ச்சத்து குறைந்து விடுவதால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.

தினசரி வெயிலில் போக வேண்டியிருந்தால் நல்லெண்ணெய் தடவி ஊறவிட்டுக் குளிப்பது சிறந்தது. சூரிய ஒளியால் நம் ஸ்கால்ப் பாதிக்காமல் நல்ல சன் ஸ்க்ரீனாக நல்லெண்ணெய் செயல்படும். இதைத்தான் தொன்றுதொட்டு நாம் செய்துவருகிறோம். எண்ணெய்க் குளியல் வெயில் காலத்துக்கேற்ற மிகச் சிறந்த கேசப் பராமரிப்பு.

அதிக வியர்வை காரணமாகத் தலையில் ஒருவித துர்நாற்றமும் ஏற்படும். எனவே, தினசரி தலைக்குக் குளிப்பது நலன் பயக்கும். 100 மில்லி டிஸ்டில்டு வாட்டரில் 100 சொட்டுகள் லைம் ஆயில், 100 சொட்டுகள் ரோஸ் ஆயில் கலந்து கொள்ளவும். தலைக்குக் குளித்து தலைதுவட்டிய பின் இந்தக் கலவையை ஸ்பிரே செய்து தலை வாரினால் தலையில் உள்ள துர்நாற்றம் போய்விடும்.

வெயிலுக்கு இதமாக நீங்கள் போட்டுக்கொள்ளும் இறுக்கமான பன் கொண்டைகளால் பிரச்னைகள் வரும். அடியில் வியர்வை தங்கி முடியில் உப்பு சேர்ந்து முடி அறுபடும். முடியை லேசாக தூக்கி க்ளிப் செய்துகொள்ளலாம். அவ்வப்போது க்ளிப்பைக் கழற்றிவிட்டு கூந்தலை சிறிது உலர்த்திவிட்டுத் திரும்ப மாட்டிக்கொள்ளலாம்.

சம்மரில் நல்லெண்ணெய் தேய்த்து ஊறவிட்டுக் குளிப் பது சாலச்சிறந்தது.

தலைக்கு மேல் பிரச்னை...  ஆலோசனைகள், தீர்வுகள்

குழந்தைகளுக்கு வரும் இளநரை... தவிர்க்க முடியுமா?

இளநரை... கேள்விப்பட்டுள்ளோம். பால்ய நரை? சமீப காலமாக சின்னஞ்சிறு குழந்தைகளுக்குக்கூட நரைமுடி வருவதைக் காண முடிகிறது.

குழந்தை, கர்ப்பத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதுதான் பிரதான காரணம். குழந்தைப் பருவத்தில், இரும்புச்சத்து, புரதச்சத்துக் குறை பாடு மற்றும் அமினோ அமில உற்பத்தி இல்லாமை போன்ற காரணங்களால் மெலனின் எனப்படும் நிறமி உற்பத்தி குறைந்து இளநரை ஏற்படுகிறது. இதை ஆரம்பநிலையில் கண்டறிந்தால் தடுத்து விடலாம். ரத்தப் பரிசோதனையில் ஹீமோகுளோபின் மற்றும் புரோட்டீன் அளவுகள் குறைவாகக் காணப்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.

விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் சம அளவில் எடுத்து, அந்தக் கலவையில் பிரிஞ்சி இலை, மரிக்கொழுந்து பட்டை, தவனம், கொடுவேலி, வேம்பாளம் பட்டை கலந்து ஒரு வாரம் ஊறவைத்து அந்த எண்ணெயை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தடவி ஊறவைத்து மிதமான ஷாம்பூ கொண்டு அலச வேண்டும்.

இரும்புச்சத்தும் புரதச் சத்தும், மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

30 வயதுவரை நரை யைக் கட்டுப்படுத்த முடி யும். இளநரைக்கான சரி யான வழிமுறைகளைப் பின் பற்றினால் 50 வயது வரை தள்ளிப்போடலாம்.

குழந்தைகளுக்குத் தலை யில் மருதாணி உபயோகிக்கக் கூடாது. மருதாணி எண்ணெய் உபயோகிக்கலாம். `ஃப்ளாக் சீட்ஸ்' எனப்படும் ஆளி விதை எண்ணெயில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருப்பதால் இளநரையைத் தடுக்கும். மருத்துவரின் ஆலோசனை யோடு உள்ளுக்குச் சாப்பிட மிகவும் நல்லது. அதேபோல் டூனா மற்றும் சால்மன் மீன் எண்ணெய் மாத்திரை களும் பலனளிக்கும்.

தலைக்கு மேல் பிரச்னை...  ஆலோசனைகள், தீர்வுகள்

ஹேர் டிரையர் பயன்படுத்துவது தவறா?

நான்கு வாரங்களுக்கு ஒரு முறை முடியை ட்ரிம் செய்வது முடி உடைவதையும், நுனிப் பிளவையும் குறைக்கும். ஹேர் கட் பண்ணும்போது நமக்கு அந்த ஸ்டைல் பொருந்துமா என்று யோசிக்க வேண்டும். கூடுமானவரை அனுபவமிக்க ஹேர் டிரஸ்ஸர்களிடம் செய்துகொள்ளும்போது தகுந்த ஆலோசனைகள் சொல்வார்கள்.

லேயர் கட் என்பது டிரெண்டில் உள்ளது. அதற்கு முடியை மேலிருந்து கீழாக வெட்டுவதால் முடி சிதையும். அதற்குப் பதிலாக ஸ்டெப் கட்டிங் செய்வது நல்லது. ஸ்ட்ரெயிட்டனிங், அயர்னிங், ரீ பாண்டிங், பெர்மிங் செய்வது என்றால், நிபுணரின் ஆலோசனையின்படி, சிகிச்சைக்குப் பிறகான போஸ்ட் கேர் எடுப்பது முடி சிதைவதைத் தடுக்கும்.

வெயில் காலங்களில் லூஸ் ஹேர் ஸ்டைலில் போவது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும். தவிர்க்க முடியாதென்றால் ஹேர் மிஸ்ட் மற்றும் சீரம் உபயோகிப்பதன் மூலம் மண்டை ஓடு வறண்டு போகாமல் பாதுகாக்கலாம்.

ஹேர் டிரையர் வாங்கும்போது கூல் மோடு உடன் சேர்ந்ததாக வாங்க வேண்டும். கூல் மோடில் டிரையரை சிறிது தள்ளி வைத்து உபயோகப்படுத்தலாம்.

ஸ்டைலிங் புராடக்ட்ஸ் எப்போதாவது உபயோகிக்க லாம். ஆனால், உபயோகப் படுத்திய பிறகு, மறக்காமல் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட வேண்டும். முக்கியமாக ஹேர் ஸ்பிரேக்கள் முடியின் மிருதுத் தன்மையைக் கெடுத்து விடும். ஈரத்தலையில் ஸ்பிரே அல்லது சீரம் தடவினால் முடி உடையும். நன்கு காய்ந்த பிறகு தடவலாம்

தலைக்கு மேல் பிரச்னை...  ஆலோசனைகள், தீர்வுகள்

முன்னந்தலை வழுக்கை... சரியாகுமா?

பெண்களுக்கு நெற்றி தொடங்கும் இடத்திலும் உச்சியிலும் வரும் வழுக்கை இப்போது பரவலாகக் காணப் படுகிறது. பரம்பரைத் தன்மை, முன்னே உள்ள முடியை பின்னே இழுத்து பேண்டு போடுவது, குழந்தைப் பருவத்திலிருந்து நடு வகிடு எடுப்பது, திருமணமான பெண்கள் கெமிக்கல் கலந்த குங்குமத்தை வைத்து துவாரங்களை அடைப்பது போன்ற பல காரணங்களால் இந்தப் பிரச்னை வரலாம்.

தலையை தளர்வாகப் பின்னல் போட வேண்டும். டெர்மா ரோலர் கொண்டு முன்னால் உள்ள வழுக்கையில் ரோல் செய்து எண்ணெய் தடவி நன்கு ஊறவிட்டு அலச வேண்டும். கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய் சம அளவில் எடுத்து அதில் நன்கு இடித்த இஞ்சி, சதாவாரி கலந்து காய்ச்சி ஒரு வாரம் ஊறவைத்து உபயோகித்தால் சிறு சிறு முடிகள் வளர்ந்து அந்த வழுக்கையை மறைக்கும்.

பிளாக் ஜமாய்க்கன் ஆயிலில் சம அளவு கடுகு எண்ணெய் கலந்து அதில் ஜின்ஜர் ரூட் ஆயில் சில துளிகள் கலந்து டபுள் பாய்லிங் முறையில் லேசாக சூடாக்கவும். முன் நெற்றியில் டெர்மா ரோலர் கொண்டு ரோல் செய்து பஞ்சால் இந்த எண்ணெயைத் தொட்டு அழுத்துவது நல்லது. கீழா நெல்லி, முடக்கத்தான், வல்லாரை இலைகளை அரைத்துத் தலைக்கு பேக் போடுவதும் நலன் பயக்கும்.