பிரீமியம் ஸ்டோரி

ராஜலட்சுமி

வ்வளவு அழகாக இருந்தாலும் அவ்வளவு சுலபத்தில் திருப்தி வராது சிலருக்கு. அழகை அதிகரிக்கும் தேடலில், கண்டது, கேட்டது, படித்தது என எல்லாவற்றையும் முயன்றுகொண்டே இருப்பார்கள்.

புதினாவை அரைத்துத் தடவுவது, சர்க்கரையால் சருமத்தைத் தேய்ப்பது என அவர்கள் முயல்கிற விஷயங்கள் விபரீதத்தில் முடியலாம் என்று எச்சரிக்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா. அழகு விஷயத்தில் பலரும் செய்கிற தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன், அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் இங்கே விளக்குகிறார்.

வசுந்தரா
வசுந்தரா

முகத்துக்கு டால்க் உபயோகிக்கலாமா?

உங்கள் வீட்டில் உபயோ கிப்பது டால்க்கா அல்லது டால்கம் பவுடரா என்று கவனியுங்கள். இவை இரண்டும் வேறு வேறு. டால்க் என்பது நிறமோ, மணமோ சேர்க்கப்படாத சற்றே கொரகொரப்பான பவுடர். டால்கம் என்பது மணம் சேர்க்கப்பட்ட, நிறம் சேர்த்த அல்லது சேர்க்காத நைசான பவுடர்.

அழகில் இருக்கட்டும் அக்கறை #HowToUse...

டால்க் என்பது உடலுக் கானது. அதை முகத்துக்கு உபயோகித்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. அதன் துகள்கள் பெரிதாக இருப்ப தால் அப்ளை செய்யும்போது சொரசொரப்பாக இருக்கும். சருமத்தில் படியாமல் மேலாக நிற்கும். எனவே, அதை முகத்துக்கு உப யோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இதையே இன்னும் நைசாக மாற்றி, நிறமும் மணமும் சேர்த்து காம்பேக்ட் பவுடர் எனக் கிடைக்கிறது. அதுதான் முகத்துக்கு ஏற்றது. திட்டுத்திட்டாக இருக்காது. காம்பேக்ட் வாங்க இயலா தவர்கள், டால்கம் பவுடரை உபயோகிக்கலாம். ஆனால், டால்க் மட்டும் வேண்டாம்.

பாடி வாஷ் Vs ஃபேஸ் வாஷ்

பாடி வாஷையே உடம்புக்கும் முகத்துக்கும் உபயோகிப்பவர்கள் பலர். பாடி வாஷின் தன்மை வேறு. அது முகத்தின் சருமத்துக்கு ஏற்றதல்ல. உடலிலேயே மிகவும் மென்மையானது முகத்திலுள்ள சருமம். உடலின் மற்ற பகுதி களில் உள்ள சருமம் சற்றே தடிமனானது என்பதால் இரண்டுக்குமான அழகு பொருள்களில் வேறுபாடு இருக்கும். அதனால்தான் பாடி வாஷை முகத்துக்குப் பயன்படுத்த வேண்டாம் என்கிறோம்.

முகத்துக்கென பிரத்யேக மாகத் தயாரிக்கப்படுவது ஃபேஸ்வாஷ். சருமத்தின் தன்மைக்கேற்ப அதைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க லாம். அதேபோல ஆண்களுக் கான அழகுத் தயாரிப்புகள், பெண்களுக்கான தயாரிப்பு களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. சில வீடுகளில் முகத்துக்கான க்ரீம் தொடங்கி, மேக்கப் பொருள்கள்வரை அனைத் தையும் ஆண்களும் பெண் களும் பொதுவாக உபயோகிப் பார்கள். இது தவறு.

அழகில் இருக்கட்டும் அக்கறை #HowToUse...

ஆண்களின் சருமம் தடிமனானது. அவர்களது முடியின் தன்மையும் வேறு. அதற்கேற்பவே அவர்களுக் கான பொருள்கள் தயாரிக்கப் படும். அவை பெண்களுக்கு ஏற்றவையல்ல.

இதேபோல ஹேண்ட் அண்டு பாடி லோஷனை சிலர் முகத்துக்கும் பயன் படுத்துவார்கள். அதுவும் மாயிஸ்ச்சரைசர்தானே என்பார்கள்.

உடலின் ஒவ்வொரு பகுதிக்கான அழகு சாதனப் பொருளும் வெவ்வேறு வீரியத்துடன் தயாரிக்கப் படுபவை. அதை அந்தந்தப் பகுதிக்கு மட்டும் உபயோகிப் பதுதான் சிறந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஷாம்பூவோடு சேர்ந்த கண்டிஷனர் சரியா?

ஷாம்பூ உபயோகிக்கும்போது கட்டாயம் கண்டிஷனர் பயன் படுத்த வேண்டும். ஆனால், சில ஷாம்பூக்களில் கண்டிஷனரும் சேர்த்தே வருகிறது. ஷாம்பூ வையும் கண்டிஷனரையும் தனித்தனியே தான் உபயோகிக்க வேண்டும். ஷாம்பூவின் பி.ஹெச் அளவும் கண்டிஷனரின் பி.ஹெச் அளவும் வேறுவேறு. நம் சருமத்தின் பி.ஹெச் அளவானது 4.5 முதல் 5.5 வரை இருக்கும். ஷாம்பூவின் பி.ஹெச் அளவு 8 முதல் 12 வரை இருக்கும். ஆல்கலைன் தன்மையுள்ள அதனால்தான் அழுக்கை எடுக்க முடியும்.

ஷாம்பூவாக இருக்கலாம், தரையைத் துடைக்கும் திரவமாகவோ, பாத்திரம் தேய்க்கும் திரவமாகவோ, துணி துவைக்கும் திரவ மாகவோகூட இருக்கலாம். எதிலிருந்தும் அழுக்கை நீக்க ஆல்கலைன் பொருள் தேவை. அதோடு அமிலத் தன்மை கொண்டதையும் சேர்த்துப் பயன்படுத்தினால் அழுக்கு முழுமையாக நீங்காது. எனவே, முதலில் ஆல்கலைன் பயன்படுத்தி அழுக்கை நீக்கி விட்டு, பிறகு கண்டிஷனர் பயன்படுத்தவும்.

அழகில் இருக்கட்டும் அக்கறை #HowToUse...

ஆல்கலைனாக ஷாம்பூ உபயோகித்த பிறகு, கண்டி ஷனர் உபயோகித்தால்தான் நம் உடலின் பி.ஹெச் அளவானது மீண்டும் 4.5 அளவுக்கு வரும்.

உடையைத் துவைக்க டிடர்ஜென்ட் பயன்படுத்தி அலசிவிட்டு, கடைசியாக ஃபேப்ரிக் கண்டிஷனரில் முக்கியெடுக்கச் சொல்வதன் பின்னணியும் இதுதான். அதை உபயோகிப்பதால் உடையின் மீது நூலெல்லாம் தூக்கிக்கொண்டு நிற்காமல் படிந்திருக்கும்.

தினமும் வேண்டாம் ஸ்க்ரப்

ஸ்க்ரப் வாங்கும்போது, பேக்கிங்கில் தினமும் அதை உபயோகிக்கச் சொல்லியிருப்பார்கள். அது விற்பனை யுக்தி. ஆனால், அதை நம்பி தினமும் ஸ்க்ரப் உபயோகித்தால் முதல் இரண்டு நாள்களுக்கு சருமத்தின் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளிச்சென இருப்பது போலத் தோன்ற லாம். அடுத்தடுத்த நாள்களும் தொடர்ந்து உபயோகிக்கும் போது, உள்ளே இருக்கும் உயிர்ப்புள்ள சரும லேயர் களை நீக்கிக்கொண்டே இருப்பீர்கள்.

அழகில் இருக்கட்டும் அக்கறை #HowToUse...

எனவே, சருமத்துக்கு அடிக்கடி ஸ்க்ரப் உபயோ கிக்கக்கூடாது. 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை ஸ்க்ரப் செய்வதுதான் சிறந்தது. ரொம்பவும் திக்கான சருமம் கொண்டவர்கள், அடிக்கடி வெளியே அலைபவர்கள் மட்டும் வாரம் ஒருமுறை ஸ்க்ரப் உபயோகிக்கலாம்.

ஸ்க்ரப் வாங்கும்போது கடினமான துகள்கள் கொண்டதை வாங்காமல் மெல்லிய துகள்கள் கொண்ட தாக வாங்கிப் பயன்படுத்தவும்.

ஓட்ஸை பாலில் ஊற வைத்தோ, வேகவைத்தோ வீட்டிலேயே ஸ்க்ரப்பாக உபயோகிக்கலாம். கடை களில் வாங்கும் வால்நட் ஸ்க்ரப், ஏப்ரிகாட் ஸ்க்ரப் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தும்போது சருமம் பாதிக்கப்படும்.

வேண்டாம் விஷப் பரீட்சை

தலைக்கோ, சருமத்துக்கோ இயற்கை யான முறையில் அழகு சிகிச்சை மேற்கொள்கிறேன் என்ற பெயரில் பலரும் மருதாணி இலைகளையும் புதினா உள்ளிட்டவற்றையும் பச்சையாக அரைத்து அப்படியே உபயோகிப்பதுண்டு. வீட்டுத் தோட்டங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், எங்கள் வீட்டுத்தோட்டத்தில் பறித்தது என்ற கூடுதல் பெருமையோடு அவற்றை உபயோகிப்பவர்கள் பலர்.

பச்சையாக இவற்றை அரைத்துப் பயன்படுத்தும் போது, அவற்றின் வீரியம் அதிகம் என்பதால் மண்டைப் பகுதி மற்றும் சருமத்தைப் பெரிதும் பாதிக்கும். பச்சை மருதாணி, மண்டைப் பகுதியிலுள்ள சருமத்தைச் சுருக்கி, கூந்தலை வறட்சி அடையச் செய்து, உதிர வைக்கும். புதினாவும் அப்படித்தான். புதினாவை சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்தும்போது சருமம் கறுத்துவிடும், சுருங்கும். அதிலிருந்து சருமத்தைப் பழைய நிலைக்கு மீட்டெடுக்க ஒரு மாதம்கூட ஆகலாம்.

அழகில் இருக்கட்டும் அக்கறை #HowToUse...

இயற்கையான பொருள் கள்தான் என்றாலும் அவற்றை உபயோகிக்கவென முறை இருக்கிறது. குறைவான அளவில், நீர்க்கச்செய்து உபயோகிக்க வேண்டும். மருதாணி போன்றவற்றை காய வைத்துப் பொடியாக்கிப் பயன்படுத்துவதே சிறந்தது. உங்கள் சருமத்துக்கும் கூந்தலுக்கும் தேவையா, ஒப்புக்கொள்ளுமா என தெரியாமல், சமூக வலை தளங்களிலும் வாட்ஸ்அப்பிலும் பரவும் டிப்ஸை பின்பற்றாமல் இருப்பதே பாதுகாப்பானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு