வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த காஜா மைதீன், தொழில்முனைவோர் பயணத்தை பத்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். இங்கிலாந்தில் கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்த காஜா, 16-க்கும் அதிக நாடுகளில் தொழில்முறை அனுபவம் பெற்றவர். தொடர் தொழில் முனைவோராகவும் பல்வேறு தொழில் வணிகங்களைத் திறம்படச் சந்தைப்படுத்தும் வல்லுநராகவும் இருக்கிறார். தனது `பிராஃபிட் அனால்டிகா' நிறுவனத்தின் வாயிலாக ஸ்டார்ட்அப் மற்றும் பிசினஸ் ஆலோசகராகச் செயல்படுகிறார்.

`இந்த வருடம் எவ்வாறு பெண்களுக்கு அமையப் போகிறது' என்று ஒவ்வொரு வருடமும் நாம் நிறைய பேசுகிறோம். காரணம், பெண்கள் அடையும் ஆச்சர்யமூட்டும் முன்னேற்றங்கள்!

சர் வில்லியம் கோல்டிங் இப்படி குறிப் பிட்டிருக்கிறார்... `பெண்கள் தங்களை ஆணுக்கு நிகரானவர்கள் என்று தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் ஆண்களை விட மேலானவர்கள்!'

உண்மைதான்... இன்று பெண்கள் யாருடைய உதவியும் இல்லாமலேயே, சமூகத்தோடு போராடி எட்டிக்கொண்டிருக்கிற உச்சங்கள் அதை நிரூபிக்கும்படியே இருக்கின்றன. அப்படி உலக அளவில் பெண்கள் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருக்கும் இன்னொரு துறை ஸ்டார்ட்அப்!

ஸ்டார்ட்அப் துறையில் பெண்கள் வெற்றி பெறுவது அத்தனை சுலபமில்லை. துணிகர மூலதன நிறுவனங்கள் (Venture Capital firms) பெரும்பாலும் ஆண்களால் நிரம்பியவை. இன்னொரு பக்கம் `தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களுக்கு (Tech Startup Business) பெண்கள் சரிவர மாட்டார்கள்' என்ற கருத்தும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. முதலீட்டு நிறுவனங்கள் ஆண் நிறுவனர் களுக்கே பெரும்பாலும் முதலீட்டை அளிக்க முன்வருகின்றன.

இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி நிறைய பெண்கள் பல மில்லியன் டாலர் ஸ்டார்ட்அப் தொழில்களை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஃபார்ச்சுனர் வென்ச்சர், பிபிஜி வென்ச்சர்ஸ் மற்றும் ஃபிமேல் ஃபவுண்டர்ஸ் ஃபண்டு முதலான முன்னோடி முதலீட்டு நிறுவனங்கள் பெண்களுடைய ஸ்டார்ட்அப் மீது நம்பிக்கைவைத்து முதலீடு செய்யத் தொடங்கியிருக்கின்றன.

பின்வரும் பெயர்கள் உங்களுக்கு அறிமுக மானவையாகக்கூட இருக்கலாம்.

மைதாலா (Mydala) - அனிஷா சிவ்

ஷாப்க்ளுஸ் (Shopclues) - ராதிகா காய் அகர்வால்

மொபிக்விக் (Mobikwik) - உபாசனா டாக்கு

யாத்ரா (Yatra) - சபீனா சோப்ரா

இன்ஃபி பீம் (Infibeam) - நீரு சர்மா

ஷிவாமே (Zivame) - ரிச்சா கார்

யுவர் ஸ்டோரி (Your Story) - சாரதா சர்மா

லைம்ரோடு (Limeroad) - சுச்சி முகர்ஜி

ஷீரோஸ் (Sherose) - சாய்ரி சாஹல்

சுகர் பாக்ஸ் (Sugar box) - நிஹாரிகா ஜுன்ஜுன் வாலா

இந்தப் பெயர்கள் உங்களுக்குத் தெரிந்திருந் தால், நீங்கள் நிச்சயம் சொந்தத் தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளவராகத்தான் இருக்க வேண்டும். நம்புங்கள்... உங்களால் நிச்சயம் ஸ்டார்ட்அப் துறையில் வெற்றிகரமாகச் சாதிக்க முடியும்!

ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் என்பவர் யார்?

ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் எனப்படுபவர், `சாதாரணச் சூழ்நிலையில் களைத்துப்போய், புதிய வழிகளின் மூலம் சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு நல்லிணக்கத்தைத் தேடுபவர்' என்று சொல்லலாம்.

ஸ்டார்ட்அப் எவ்வாறு மற்ற தொழில் களிலிருந்து வேறுபடுகிறது?

ஓர் உதாரணம்... குமார் மற்றும் திவ்யா இருவரும் ஆபரணத் தொழிலில் இறங்க முடிவுசெய்கிறார்கள். விற்பனைக்கான இடம் ஒன்றைப் பிடித்து, அந்தப் பகுதியில் சந்தைப்படுத்தி விற்பனை செய்வதே குமாரின் முறை (பிசினஸ் மாடல்).

திவ்யாவின் பிசினஸ் மாடல் வேறுவிதம். ஆபரணம் வாங்குபவர்களின் உண்மையான பிரச்னை என்ன... அதை எந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தின் உதவியோடு கையாளலாம் என்பதை அவர் கண்டறிகிறார். அதாவது... செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் (Artificial Intelligence) மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை அறிதல், அதற்கேற்ப வாடிக்கையாளர்களுக்கு ஆபரணங்களை அளித்தல்... இதுவே திவ்யாவின் செயல்முறை. ஆபரணம் விற்பது என்பது சாதாரணத் தொழில்முறை என்றால், ஆபரணம் விற்பதில் இருக்கும் பிரச்னையைத் தீர்ப்பதே திவ்யா தேர்ந்தெடுத்த ஸ்டார்ட்அப் தொழில்முறை.

செயல்முறையில் வேறுபாடுகள்

குமாரின் தொழில்முறையானது அடிப் படையில் கடை வாடகை, ஊழியர் ஊதியம், கொள்முதல் செலவு, வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அடுத்ததாக... வருமானம் மூலம் கடையை விரிவுபடுத்துவது அல்லது அருகிலுள்ள ஏரியாவில் மேலும் ஒரு கடையை திறப்பது.

திவ்யாவின் தொழில்முறையானது... நிறுவனத்தின் வலைதளம் மூலமும் சமூக வலைதளங்கள் மூலமும் ஒருமித்த கருத்துள்ள வாடிக்கையாளரின் பிரச்னைகளைத் தீர்த்து, அதன்மூலம் விற்பனையைப் பெருக்குவது.

பொருளாதார வேறுபாடு

குமார் தனது சொந்தப் பணத்தின் மூலமும், நண்பர்கள் மற்றும் வங்கிகள் மூலமும் மூலதனத்தைத் திரட்டி தொழிலைத் தொடர்ந்து நடத்த வேண்டிய பிரிவைச் சேர்ந்தவர்.

திவ்யா தொழிலின் முதல் கட்டத்தை சொந்தப் பணத்தில் தொடங்குவார் அல்லது நண்பர்கள் மூலமாகத் திரட்டுவார். அடிப்படையான பிசினஸ் மாடல் தயாரானவுடன் முதலீட்டாளர் மூலம் மூலதனத்தைப் பெற்று தொழிலை வளர்ப்பார்.

ஸ்டார்ட்அப் ஒரு தொடக்கப்புள்ளி மட்டும்தானா?

ஸ்டார்ட்அப் ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே என்பதல்ல. வழக்கமான தொழில்முறையிலிருந்து விடுபட்டு, பிரச்னைக்குத் தீர்வு காண்பதையே முதல் குறிக்கோளாகக்கொண்டு, தேவையான நிபுணர்களின் ஆலோசனையோடு, அதற்கேற்ற முதலீட்டை முதலீட்டாளரிடம் பெற்று உரிய வளர்ச்சியை எட்டும் முறையே ஸ்டார்ட்அப்.

ஸ்டார்ட்அப் தொடங்க விரும்பும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுத்தடுத்த இதழ்களில் ஆராய்வோம்.

காஜா மைதீன்