Published:Updated:

2K Kids: சின்னச் சின்ன வெற்றிகள்தான் பெருசு!

2K Kids
பிரீமியம் ஸ்டோரி
2K Kids

ச.பிரவின் குமார்

2K Kids: சின்னச் சின்ன வெற்றிகள்தான் பெருசு!

ச.பிரவின் குமார்

Published:Updated:
2K Kids
பிரீமியம் ஸ்டோரி
2K Kids

‘`சிறப்புக் குழந்தைகளுக்குக் கலைப்பொருள்கள் செய்ய கற்றுக் கொடுக்கிற தருணங்கள், வாழ்வை நிறைவா உணர வைக்குது’’ என்கிறார் கிரிஜா. சென்னையைச் சேர்ந்த தொழில் பயிற்சியாளர்; சிறுதொழில் முனைவோர். அடையாற்றில் தன் வீட்டில் சிறப்புக் குழந்தை களுக்கு ஜூட் கிஃப்ட், சாரி டிசைனிங், க்ளாஸ் பெயின்டிங், 3டி க்வில்லிங், எம்ப்ராய்டரி, டெரகோட்டா ஜுவல்லரி போன்ற கலை வேலைப்பாடுகளைக் கற்றுக்கொடுத்து வருகிறார். ‘வீட்டிலிருந்தபடியே ஆக்கபூர்வமா செயல்படலாம்’ என்ற உத்வேகம் அளிக்கும் பெண்.

‘`பொதுவா பொண்ணுங்க கல்யாணத்துக்கு அப்புறம் சுய முன்னேற்றம் என்பதை யெல்லாம் மறந்தேபோயிடுவாங்க. கணவர், குழந்தைகளுக்காக வாழுறதுதான் இனி நமக்கான வாழ்க்கைனு தங்களை சமரசப் படுத்திக்குவாங்க. ஆனா, ‘வருமானத்துக்கு ஏதாச்சும் வழி பண்ணியே ஆகணும்’னு சில பெண்கள் நினைக்கத் தொடங்குற புள்ளியிலதான், அவங்களுக்கான சுயம், அடையாளம், வெற்றி எல்லாம் ஆரம்பமாகுது. அப்படித்தான், என் 30-வது வயசுல நானும் எனக்கான முதல் புள்ளியை வெச்சேன்’’ - ரசிக்கும்படி பேசுகிறார் கிரிஜா.

2K Kids: சின்னச் சின்ன வெற்றிகள்தான் பெருசு!

‘`ஒரு குழந்தைக்கு அம்மாவா நான் என் 30 வயசை அடைஞ்சப்போ, ‘ஏதாச்சும் கத்துக்குவோம், எதையாச்சும் பண்ணு வோம்’னு தோணுச்சு. ஃபேஷன் டிசைனிங் டிப்ளோமா படிச்சிருந்த நான், கிராஃப்ட் பொருள்கள் செய்யும் பயிற்சிகளையும் முடிச்சேன். பாலவாக்கம் பக்கத்துல சீமா என்பவர் நடத்தின கலைப்பொருள்கள் பயிற்சிக்கூடத்துல பயிற்சியாளரா சேர்ந்தேன். அங்கே பெயின்டிங், டெரகோட்டா ஜுவல்லரி மேக்கிங், 3டி க்வில்லிங், ஃபேப்ரிக், எம்ப்ராய்டரி போன்றவற்றை கற்றுத் தந்தேன்.

அந்த அன்பான சூழலாலும், அங்கே இருந்தவங்க தந்த ஊக்கத்தாலும் நான் மேலும் சில கலைகளைக் கத்துக்கிட்டு என்னை மெருகேத்திக்கிட்டேன். பயிற்சி கொடுக்கிறதிலும் பல புதிய விஷயங்களை கத்துக்கிட்டேன். நான் என் மேல வெச்சிருந்த நம்பிக்கையும், செலவழிச்ச ஆற்றலும் என்னை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனது’’ என்ற கிரிஜா, தன் முயற்சிகளுக்கு எல்லாம் முழு ஆதரவு தந்தவர் தன் கணவர் பாலாஜிதான் என்கிறார்.

2K Kids: சின்னச் சின்ன வெற்றிகள்தான் பெருசு!

“அடுத்ததா, அடை யாற்றில் இருக்கும் லைஃப் அண்டு ஆர்ட் அகாடமி யில மண் பாண்ட சிற்பம் மற்றும் கலைப் பொருள்கள் மற்றும் சிற்பம் செய்ய கத்துக்கிட்டேன். இந்த அகாடமி மூலம், ‘மித்ர’ எனும் சேவை அமைப்பின் மூலமா, சிறப்புக் குழந்தை களுக்கு மண்பாண்ட கலைப்பொருள்கள் பயிற்சி முகாம் நடத்தக் கிடைச்ச வாய்ப்பு, வாழ்வை இன்னும் அழகா வும் அர்த்தமுள்ளதாவும் அணுக எனக்குக் கற்றுக்கொடுத்தது. சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்குறது, வழக்கமான பயிற்சிகளை விட மனசுக்கு அதிகம் வேலைவைக்கும் பொறுப்பு. அந்தப் பொறுப்பை என் மேல நம்பிக்கை வெச்சு எனக்குக் கொடுத்த லைஃப் அண்டு ஆர்ட் அகாடமி உரிமையாளர் திவாகர் சாருக்கு நன்றி சொல்லணும்’’ என்றவர், அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

2K Kids: சின்னச் சின்ன வெற்றிகள்தான் பெருசு!

“சிறப்புக் குழந்தைகளைச் சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். ஆனா, அவங்க காட்டும் பாசமும் அன்பும், அவங்களுக்காக என்ன வேணாலும் செய்யலாம்னு நினைக்கவைக்கும். பொதுவா, மூணு மாசத்துல முடியுற இந்தப் பயிற்சிக் காலம், இந்தக் குழந்தை களுக்கு நீண்டுகிட்டே போகும். ஆனாலும், அவங்க அதைக் கத்துக்கிட்டு செய்யும்போது அந்த வெற்றியின் அளவு விஸ்வரூபமா தெரியும். ஒரு வருட பயிற்சிக்குப் பின், அவங்க செய்த கலைப் பொருள்களை வைத்து நாங்க நடத்தின கண்காட்சியில கிடைச்ச பாராட்டுகளும் கைதட்டல்களும் எனக்குத் தந்த உணர்வை வார்த்தைகள்ல சொல்ல முடியாது.

2K Kids: சின்னச் சின்ன வெற்றிகள்தான் பெருசு!

தொழில்பயிற்சி ஒருபக்கம்னா, அந்தக் குழந்தைகளின் மனநிலை யிலும் இந்தப் பயிற்சிகள் ஏற்படுத்தும் நன்மைகள் பல. குறிப்பா, அவங்க மனநிலையை சமநிலையில வைக்க இந்தக் கலைப் பயிற்சிகள் உதவும். இதைச் சொன்னப்போ, இன்னும் பல பெற்றோர் சிறப்புக் குழந்தைகளை ஆர்வத்துடன் பயிற்சிக்கு அழைச்சிட்டு வந்தாங்க’’ எனும் கிரிஜா, அரசுத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கும் சில காலம் பயிற்சியளித்திருக்கிறார். இப்படி தனக்குக் கிடைத்த சிறு சிறு வாய்ப்புகளையும் தவறாமல் பயன்படுத்திக்கொண்டவர், இப்போது தன் ‘ராட் கிரியேஷன்’ மூலம் தன் வீட்டிலேயே கிராஃப்ட் பயிற்சி அளித்து வருகிறார். அதன் மூலம் மாதம் 32,000 ரூபாய்க்கு வருமானம் பார்ப்பதாகக் கூறுகிறார்.

2K Kids: சின்னச் சின்ன வெற்றிகள்தான் பெருசு!
“இப்போ 44 வயசாகுது. 14 வருஷத்துக்கு முன்னாடி ‘ஏதாச்சும் பண்ணணும்’னு நான் யோசிக்க ஆரம்பிச்சதுதான் இன்னிக்கு என்னை சுய சம்பாத் தியம் உள்ள பெண்ணா வளர்த் தெடுத்திருக்கு. இந்த ஆணாதிக்க உலகத்துல, ஒவ்வொரு பெண்ணின் சின்ன வெற்றியும் அவளைச் சுத்தி யிருக்குற பெண்களுக்கு உந்து சக்தியா இருக்கும்.

அந்த வகையில சின்னச் சின்ன வெற்றிகள்தான் இங்க பெருசு’’ என்று புன்னகை யுடன் முடிக்கிறார் கிரிஜா.