Published:Updated:

உலக கை மல்யுத்த போட்டி: இரண்டு தங்கங்களை வென்ற கேரள பெண் போலீஸ் ராஜு!

Arm wrestling ( pixabay )

2008-ம் ஆண்டில் ராஜுவுக்கு ஏற்பட்ட விபத்தில், தசைநார் முறிவு (Ligament rupture) உண்டானது. அதனால் தடகள விளையாட்டுகளில் பங்கு கொள்ள முடியாத நிலை உண்டானது.

உலக கை மல்யுத்த போட்டி: இரண்டு தங்கங்களை வென்ற கேரள பெண் போலீஸ் ராஜு!

2008-ம் ஆண்டில் ராஜுவுக்கு ஏற்பட்ட விபத்தில், தசைநார் முறிவு (Ligament rupture) உண்டானது. அதனால் தடகள விளையாட்டுகளில் பங்கு கொள்ள முடியாத நிலை உண்டானது.

Published:Updated:
Arm wrestling ( pixabay )

துருக்கியில் நடைபெற்ற உலக கை மல்யுத்த போட்டியில், (World Arm Wrestling Competition) கேரளாவைச் சேர்ந்த பெண் போலீஸான ராஜு, இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 1979-ம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக இந்தப் போட்டியில் இரண்டு தங்கங்களை இவர் வென்றுள்ளார். 

athlete
athlete
pixabay

பி.டி.ஐ - க்கு இவர் அளித்த தகவலின்படி, இவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். காவல்துறையில் சேர்வதற்கு முன்பே, அவர் மாநில அளவில் தடகள போட்டிகளில் பங்கேற்றவர். 2001-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்த பின்னும், தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று வந்தார்.

2008-ம் ஆண்டில் இவருக்கு ஏற்பட்ட விபத்தில், தசைநார் முறிவு (Ligament rupture) உண்டானது. அதனால் தடகள விளையாட்டுகளில் பங்கு கொள்ள முடியாத நிலை உண்டானது. 2018-ல் கோழிக்கோடு காவல்துறையினரால் நடத்தப்பட்ட, கை மல்யுத்த போட்டிகளைப் பார்க்க, ராஜு சென்றிருந்தார். அந்தப் போட்டியில் மனம் ஒன்றிப்போக, ஓபன் போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார்.

எதேச்சையாக அதில் கலந்து கொள்ள ஆரம்பித்தவர், பல வருடங்களாக இந்தப் போட்டியில் சிறந்து விளங்கும் எதிராளிகளையும் தோற்கடித்து, சாம்பியனாகவும், திடமான பெண்ணாகவும் உருவெடுத்துள்ளார்.

தற்போது துருக்கியில் நடைபெற்ற உலக கை மல்யுத்த போட்டியில், இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

உலக கை மல்யுத்த போட்டி: இரண்டு தங்கங்களை வென்ற கேரள பெண் போலீஸ் ராஜு!
kerala police fb post

43 வீரர்களை  வழிநடத்திச் சென்ற இந்திய கேப்டனாக தன்னுடைய பயணத்தில் வெற்றி கண்டுள்ளார். இவ்வீரர்கள் வென்ற 13 பதக்கங்களில், மூன்று தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம். அதிலும் இந்த 13 பதக்கங்களில் 8 பதக்கங்கள் கேரளாவில் இருந்து சென்ற கை மல்யுத்த வீரர்களால் வெல்லப்பட்டவை.

1970களில் கை மல்யுத்த விளையாட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டுக்குச் சிறந்த தசை மற்றும் மன வலிமையைத் தாண்டி, அதிக அளவிலான டெக்னிகல் திறன்களும் தேவை என கேரள கை மல்யுத்த குழு தெரிவித்துள்ளது. 

வாழ்த்துகள் ராஜு...!