‘India’s Dhol Girl’ என சர்வதேச பத்திரிகைகள் பாராட்டும் பெண், ஜஹான் கீத். 21 வயதாகும் இவர், பல சமூக விழிப்புணர்வு இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயில்கிற ஜஹானிடம் பேசினோம்.

‘`பஞ்சாப் கலாசார பண்டிகைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில், டோல் ஒரு தவிர்க்க முடியாத இசைக் கருவி. என் தோழிகள் பலர் கிடார், சிதார், ஹார்மோனியம் என சில இசைக் கருவிகளைக் கற்றனர். எனது 12-வது வயதில், ஓர் இசை நிகழ்ச்சியில் என் உறவினர் ஒருவர் டோல் வாசிப்பதைக் கேட்டேன். அந்த ஒலி என்னை வசீகரித்தது. அந்த நிமிடமே, டோல் வாத்தியத்தை முறைப்படி பயில வேண்டும் என்கிற ஆசை பிறந்தது. ஆனாலும், இசைக்கலைஞர்கள் பலர், நான் பெண் என்பதால் டோல் இசைக் கருவியை எனக்குப் பயிற்றுவிக்கத் தயங்கினர். வேறு எளிய இசைக் கருவியைத் தேர்ந்தெடுத்துப் பயிலும்படி அறிவுரை கூறினர்’’ என்கிறவருக்கு, ஒரு கட்டத்தில் சரியான குரு கிடைத்திருக்கிறார்.

‘`டோல் இசைக் கலைஞர் சர்தார் கர்தர் சிங்கிடம் எனக்கு டோல் இசைக்கக் கற்றுத்தர வேண்டியபோது, ‘ஆண், பெண் பாகுபாடெல்லாம் இசைக்குக் கிடையாது. ஆனால், நீ எழுப்பும் ஒலி மற்ற இசைக் கலைஞர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். எனவே, நீ கடினமாகப் பயிற்சிசெய்ய வேண்டும். அதற்கு நீ தயாரா?’ எனக் கேட்டார். முழு நம்பிக்கையுடன் ‘நான் நிச்சயம் சிறப்பாகப் பயிற்சிசெய்வேன்’ என்றேன். என்னை மாணவியாக ஏற்றுக்கொண்ட அவர், தன் சொந்த மகளைப்போல கருதி, டோல் இசைக் கருவியின் நுணுக்கங்களைக் கற்றுத்தந்தார்.

தினமும் மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பின், இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் திறந்தவெளியில் டோல் இசைக் கருவியை வாசிக்கப் பழகினேன். மிகப் பெரியதாக இருக்கும் பாரம்பர்ய டோல் இசைக்கருவியில் பயிற்சி செய்தேன். அதன் எடை என் தோள்களை நோகச்செய்தது. ஒரு மணி நேரம் டோல் இசைக்கருவியை தோளில் சுமந்து பயிற்சி செய்வதற்கு, இரண்டு மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கு சமமான ஆற்றல் தேவைப்பட்டது. தோள் வலியுடன் கைகள் தளர்ந்து ரத்தக் காயம் ஏற்பட்டபோதும், நான் பயிற்சியைக் கைவிடவில்லை. டோல் இசைக்கருவியை சிறிது நேரம் தரையில் வைத்து, சிறிது நேரம் நாற்காலியின் மேல் வைத்து எனப் பயிற்சிசெய்தேன். படிப்படியாக அதன் எடையைத் தாங்க என் உடல் பழகியது.

இரண்டு வருடங்கள் விடாமுயற்சியுடன் பயிற்சிசெய்ததன் பலனாக, டோல் இசைக் கருவி என் வசப்பட்டது. என் 14-வது வயதில் முதன்முறையாக இசை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். ‘ஒரு பெண் டோல் இசைக் கருவியை இசைப்பது இதுதான் முதன்முறை’ என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறியபோது எழுந்த கைத்தட்டல்களில், என் இரண்டு வருடப் பயிற்சியின்போது நான் பட்ட கஷ்டங்கள் பறந்தோடின’’ என்று சொல்லும் ஜஹானின் வீடியோக்களைப் பல லட்சம் பார்வையாளர்கள் ரசித்துள்ளனர். தன் இசைக்கான மையப்பொருளாக, சமூக விழிப்புணர்வுக் கருத்துகளையே இவர் எடுத்துக்கொள்வது இன்னும் சிறப்பு!