Published:Updated:

எல்லாப் பெண்களும் மகள்போலவே தெரியுறாங்க!

ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தரும் வள்ளி
பிரீமியம் ஸ்டோரி
ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தரும் வள்ளி

ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தரும் வள்ளி

எல்லாப் பெண்களும் மகள்போலவே தெரியுறாங்க!

ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தரும் வள்ளி

Published:Updated:
ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தரும் வள்ளி
பிரீமியம் ஸ்டோரி
ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தரும் வள்ளி

சென்னை ராயபுரத்திலுள்ள ‘சிகா பெண்கள் காப்பகம்’, பிள்ளைகளால் கைவிடப்பட்ட, குடும்ப பிரச்னைகளால் வீட்டிலிருந்து வெளியேறிய பெண்களுக்குத் தாய் வீடுபோல அடைக்கலம் தருகிறது. மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் காப்பகத்தின் நிர்வாகியான வள்ளி கோபால், நாடிவரும் பெண்களைத் தாயுள்ளத்துடன் கவனித்துக்கொள்கிறார். குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை பலரும் இந்த மையத்தால் பயனடைகின்றனர்.

“ஸ்கூல் படிப்பை முடிச்சதும் தலைமைச் செயலகத்துல தட்டச்சரா வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு, பல இடங்கள்ல வேலை செய்துகிட்டே, மாதர் சங்கம், தமிழக பெண்கள் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்பு களின் சார்புல பெண்கள் நலனுக் கான, அடித்தட்டு மக்களின் முன் னேற்றத்துக்கான, தொழிலாளர் களின் உரிமை களுக்கான போராட்டங்கள்ல கலந்துகிட்டேன். இந்த நிலையில, என்னோட நாலு குழந்தைகள்ல ஒரு பெண் குழந்தை உடல்நிலை சரியில்லாம இறந்துடுச்சு. அதனால ரொம்பவே உடைஞ்சு போயிட்டேன். என்னைப்போல மத்தவங்க யாருமே அவங்க குழந்தையை எந்த வகை யிலயும் இழந்திடக் கூடாதுனு முடிவெடுத்தேன். பல்வேறு கஷ்ட சூழல்கள்ல இருக்கிற பெண் களுக்கு இயன்ற உதவிகளைக் குழுவாகச் செஞ்சோம்.

எல்லாப் பெண்களும் 
மகள்போலவே தெரியுறாங்க!

அந்த வகையில இரவு நேரத்துல வட சென்னை பகுதியில ரோந்து போவோம். வீடில்லாம பிளாட்ஃபார்ம்ல தங்கியிருக்கிற பெண்கள், குடும்ப பிரச்னையால வீட்டுல இருந்து வெளியேறி சாலையில தங்கியிருக்கிற பெண்கள், பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகள் பலரும் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதைப் பார்த்து வருந்தினோம். இந்தப் பிரச்னைக்காக மக்கள் பிரதிநிதிகள்கிட்ட வலியுறுத்தினோம். அதன் பலனாக, 2013-ல் மாநகராட்சி சார்பா 20 பகுதிகள்ல பெண் களுக்கான இரவு நேரக் காப்பகம் தொடங்கப் பட்டுச்சு” - இதுபோன்ற காப்பகங்களை சென்னை மாநகராட்சியும் சமூக சேவகர்களும் இணைந்து கூட்டு முயற்சியாக நிர்வகிக் கின்றனர். ராயபுரம் பகுதியில் தொடங்கப்பட்ட இந்தக் காப்பகத்தின் பொறுப்பு வள்ளிக்குக் கிடைத்திருக்கிறது. காப்பகத்தைத் தேடி வந்தோர் தவிர, இரவு நேரக் களப்பணியில் தனியாகவும் குழந்தைகளுடனும் தங்குவதற்கு வழியின்றி தவிக்கும்

பெண்களை அழைத்துவந்தும் அடைக்கலம் கொடுத்திருக்கிறார். குடும்ப பிரச்னைகளில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்களுக்கு கவுன்சலிங் கொடுத்து, அவர்களைக் குடும்பத்தினருடன் சேர்க்கிறார். 500-க்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள இந்த மையத்தில், தற்போது 25 பெண்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு மூன்று வேளை உணவும் மருத்துவத் தேவைகளும் கட்டணமின்றி பூர்த்தி செய்யப்படுகின்றன. எவ்வித ஊதியமும் பெறாமல், இந்தக் காப்பக நிர்வாகப் பணிகளைச் சேவை நோக்கத்துடன் செய்து வருகிறார் வள்ளி.

“இது இரவு நேரக் காப்பகம்தான். ஆனா, நேரங்காலம் பார்க்காம, எல்லாத் தரப்பட்ட பெண்களையும் எந்தக் காலக்கெடு வரையறை யும் இல்லாம தங்க அனுமதிக்கிறோம். சில நாள்கள் மட்டும் தங்கிட்டுப் போறவங்களும் உண்டு. சில வருஷங்களா இங்கேயே தங்கியிருக்கிறவங்களும் உண்டு. அவசரத் தேவைக்கு மட்டும் பெண் குழந்தைகளைத் தங்க வெச்சுட்டு, பெற்றோர்கிட்ட அல்லது குழந்தைகள்நலக் குழுமத்துல அவங்கள ஒப்படைச்சுடுவோம். எனக்கு 74 வயசாகுது. வயசு வித்தியாசம் இல்லாம என்னைத் தேடி வரும் எல்லாப் பெண்களுமே, நான் பறிகொடுத்த என் மகளைப்போலத்தான் எனக்குத் தெரிவாங்க. இந்தக் கட்டடம் மாநகராட்சிக்குக் சொந்தமானது. மாநக ராட்சி மூலமா ஓரளவுக்கு நிதியுதவியும் கிடைக்குது. தவிர, பிறந்த நாள், திருமண நாள் தருணங்கள்ல ஆர்வமுள்ளவங்க உணவு, உடைகளை தானமாகக் கொடுப் பாங்க. மத்தபடி நன்கொடை எதுவும் வாங்க மாட்டோம். தங்க இடம் இல்லாத பெண்கள் தனியாவோ, குழந்தைகளுடனோ இந்தக் காப்பகத்தை நாடி வரலாம். உங்க பாதுகாப்புக்கான முழு பொறுப்பையும் நான் ஏத்துக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார்.

எல்லாப் பெண்களும் 
மகள்போலவே தெரியுறாங்க!

மூத்த குடிமக்களில் 15-க் கும் மேற்பட்டோர் இந்தக் காப்பகத்தில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான ருக்மணி, “எனக்கு ஒரு மகன் மட்டும்தான். அவனை வளர்க்க ரொம்பவே கஷ்டப் பட்டேன். உடம்பு சரியில் லாம வாலிப பருவத்துல அவனையும் பறிகொடுத் துட்டேன். யாரும் ஆதரவுக்கு இல்லாததால, வாழ வழி தெரியாம தவிச்சேன். தக்க சமயத்துல இந்தக் காப்பகத் தைப் பத்தி தெரிஞ்சுகிட்டு இங்க வந்தேன். யாருமே இல்லைனு வருத்தப்பட்ட எனக்கு, இங்கு நிறைய சொந்தங்கள் கிடைச்சாங்க. இங்கிருக்கிற ஒவ்வொருத் தருமே எங்களால முடிஞ்ச வேலைகளைச் செய்வோம்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.