Published:Updated:

பெண் நகரம் பெண் நாடு

பெண்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்

பெண் பற்றிய உண்மைகள்

எஸ்.பூமாப்ரியா

குடும்ப வன்முறை ஒரு குற்றமல்ல என்று கருதப்படும் நாடுகளில் 60.3 கோடி பெண்கள் வாழ்கின்றனர்.

உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் பெண்களே.

பெண்ணின் பெயர் சூட்டப்பட்ட ஒரே நாடு செயின்ட் லூசியா. இது கரீபியன் தீவுகளில் அமைந்துள்ள குட்டி தேசம்.

சிறுநீரை அடக்க முடியாத பிரச்னையோடு உலகில் மூன்றில் ஒரு பெண் இருக்கிறார்.

பெண் நகரம் பெண் நாடு

அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை 200-க்கும் அதிக பெண்கள் போட்டியிட்டிருக்கிறார்கள். ஆனாலும், இனிதான் ஒரு பெண் அதிபரை அமெரிக்கா காண வேண்டும்.

ஆண்களைப் போல இரண்டு மடங்கு அமினோ அமிலங்களைப் பெண்கள் தங்கள் உடலில் சுரக்கின்றனர். இதனால்தான் கைரேகையைப் பயன்படுத்தி ஒருவரின் பாலினத்தை அறிய முடிகிறது.

நடுநிலைப் பள்ளியில் படிக்கும்போது 74 சதவிகிதப் பெண் குழந்தைகள் கணிதம், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆர்வம்காட்டுகின்றனர். கல்லூரியில் சேரும்போதோ 0.4 சதவிகித மாணவிகளே அறிவியல் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பாக, கணிப்பொறி அறிவியல்.

இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் ராணுவத்தின் ஆயுதப்படையில் எட்டு லட்சம் பெண்கள் பணியாற்றினர்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஊதிய வேறுபாடு மிகக் குறைவாக இருக்கும் நாடு நியூசிலாந்து. அது 5 சதவிகிதம்!

அமெரிக்காவில் ஒரு பெண்ணால் உருவாக்கப்பட்ட ஒரே நகரம் என்ற சிறப்பு மியாமிக்கு உண்டு. `மியாமியின் தாய்’ என்றழைக்கப்படும் அந்தப் பெண், ஜூலியா டட்டில்.