Published:Updated:

திவ்யா ஐ.ஏ.எஸ்... அரசுப் பணியும் அரசியல் பணியும்

திவ்யா ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா ஐ.ஏ.எஸ்

காதல் பரிசு

திவ்யா ஐ.ஏ.எஸ்... அரசுப் பணியும் அரசியல் பணியும்

காதல் பரிசு

Published:Updated:
திவ்யா ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா ஐ.ஏ.எஸ்

கலகலாவல்லவி... இப்படித்தான் கேரளமே கொண்டாடுகிறது திவ்யாவை. தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி திவ்யா. இப்போது திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட இயக்குநராகப் பணிபுரிகிறார். திருவனந்தபுரம் சப் கலெக்டராக இருந்தபோது, அருவிக்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான சபரிநாதனுடன் காதல் வயப்பட, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்கள். இருவர் அன்பின் வெளிப்பாடாக `மல்ஹார்' என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏழு மாதமே ஆன மல்ஹாரின் முதல் ஓணம் பண்டிகையை ஆகோஷித்த ஆனந்தத்தில் இருந்த திவ்யா ஐயர்- சபரிநாதன் தம்பதியை திருவனந்தபுரத்தில் சந்தித்தோம்.

திவ்யா ஐ.ஏ.எஸ்
திவ்யா ஐ.ஏ.எஸ்

``என் பாட்டிக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி டவுன். அப்பா வீடு புனலூர். இஸ்ரோல வேலைபார்த்த அப்பா திருவனந்தபுரத்திலேயே செட்டில் ஆகிட்டாங்க. நான் பிறந்தது, வளர்ந்தது, பன்னிரண்டாம் வகுப்புவரை படிச்சது எல்லாமே திருவனந்தபுரத்தில்தான். வேலூர் சி.எம்.சி-யில் எம்.பி.பி.எஸ் முடிச்சுட்டு, ஏழு வருஷம் அங்கேயே வேலை செய்துட்டு இருந்தேன். அதற்கப்புறம் சிவில் சர்வீஸ் மேல ஆசை திரும்ப, இங்க வந்து படிச்சு தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் ஆனேன். இப்பவும் அரசு சம்பந்தமான முகாம்களில் வாய்ப்பு கிடைக்கிறப்ப மருத்துவ சேவையும் செய்றேன்” என்று தன்னைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
``காதலிச்சப்ப நாங்க அதிகமா பேசிகிட்டது புத்தகங்கள் பத்திதான். அவர் எனக்குக் கொடுத்த முதல் பரிசும் புத்தகம்தான்!''

மனைவியின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சபரிநாதன் பேச ஆரம்பித்தார். “என் அப்பா கார்த்திகேயன் கேரள அமைச்சராகவும் சட்டசபை சபாநாயகராகவும் இருந்தார். அவர் உடல்நலம் சரியில்லாமல் காலமானதால், அவரது தொகுதியான அருவிக்கரையில் 2015-ம் ஆண்டு இடைத்தேர்தல் வந்தது. பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டங்களோட மும்பை டாடா நிறுவனத்தில் வேலை செய்துட்டிருந்த என்னை வேட்பாளரா அறிவிச்சாங்க. அப்பா பெயரைக் காப்பாத்துறதுக்காகத் தொகுதியில் தீவிரமா வேலை பார்த்ததன் பலனாக இடைத்தேர்தலில் ஜெயிச்சேன். அடுத்ததா வந்த பொதுத் தேர்தலிலும் ஜெயிச்சு இரண்டாவது முறையா எம்.எல்.ஏ-வா இருக்கேன். உங்களுக்கே தெரியும்... எங்களோடது லவ் மேரேஜ்'' என்றவரை இடைமறித்துப் பேசினார் திவ்யா...

``திருவனந்தபுரம் சப் கலெக்டரா இருந்தப்ப அமைச்சர் கூட்டிய அலுவலக மீட்டிங்ல அரசு அதிகாரிங்கிற முறையில நானும், எம்.எல்.ஏ என்கிற முறையில் இவரும் கலந்துக்கிட்டோம். அதுக்கப்புறம் அலுவல் சம்பந்தமா தொடர்ந்து பேசினார். அப்புறம் கொஞ்சம் பேசி, பழகினப்ப அவர் நல்ல மனிதர்னு தெரியவந்தது. `கல்யாணம் பண்ணிக்கலாம்'னு முதல்ல சபரிதான் சொன்னார்” என்கிற திவ்யாவிடம் ``அரசியல்வாதிகிட்ட எச்சரிக்கையா இருக்கணும்னு தோணலியா” என்று கேட்டால், வெடித்துச் சிரிக்கிறார்கள் இருவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“காதலிச்சப்ப நாங்க அதிகமா பேசிக்கிட்டது புத்தகங்கள் பத்திதான். அவர் எனக்குக் கொடுத்த முதல் பரிசும் புத்தகம்தான். இதுல ஆச்சர்யம் என்னன்னா, நாங்க ரெண்டு பேருமே `ஆண்ட்ரே அகஸ்ஸி' எழுதின `ஓப்பன்’ புத்தகத்தையே பரிசா கொடுக்க தேர்ந்தெடுத்திருந்தோம். அப்போ பரிமாறிக்கிட்ட புத்தகத்தை இப்பவும் பத்திரமா வெச்சிருக்கோம்'' என்கிறவரின் சிரிப்பில் வெட்கம். பேச்சு மகன் பற்றி திரும்புகிறது.

``மேஹ மல்ஹார் ஒரு ராகத்தோட பெயர். எங்க ரெண்டு பேருக்கும் இசைன்னா ரொம்ப இஷ்டம். இது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட பொதுவான பெயர்ங்கிறதும் இதைத் தேர்ந்தெடுக்க காரணம்” என்றதும் குழந்தை சிணுங்கி அழ, கணவரிடம் இருந்து குழந்தையை வாங்கி தாலாட்டு பாடி தூங்கவைக்கிறார் திவ்யா.

திவ்யா ஐ.ஏ.எஸ்
திவ்யா ஐ.ஏ.எஸ்

“திவ்யா ஒரு சகலகலாவல்லி. வேலை, சங்கீதம், பாட்டு, நடனம், எழுத்துன்னு பல்துறை வித்தகியா இருக்காங்க. மகன் வந்தபிறகுகூட, `நேரம் இல்லை'ங்கிற வார்த்தையே திவ்யா கிட்ட வந்ததில்லை. முன்பைவிட உற்சாகமா முழு ஈடுபாட்டோடு அவங்க வேலைகளைச் செய்றாங்க'' என்று மனைவியின் செயல்பாடுகளை ரசித்துப் பேசுகிறார் சபரிநாதன்.

``சபரி, திடீர்னு அரசியல்வாதி ஆனவர். ஆனா, இப்ப மக்கள் பிரச்னைகளை கைதேர்ந்த அரசியல் தலைவர்கள் போல கையாள்றதைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டுட்டே இருக்கேன். இங்க அவர்தான் மக்கள் நாயகன்'' என்று நெகிழ்ந்தபடியே கணவரைப் பார்த்தவர் தொடர்கிறார்... ``நான் சின்ன வயசுலே சங்கீதம், நடனம் படிச்சேன். கோட்டயத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில நடனமாடியிருக்கிறேன். தேர்தல் விழிப்புணர்வுக்காக கவிதை எழுதி, அதையே பாட்டாகவும் பாடியிருந்தேன். முதியோர் இல்லத்தில் இருக்கிற ஓர் அம்மாவை பத்தின கதையான `ஏலி அம்மச்சியுடே ஆத்யத்த கிறிஸ்துமஸ்'ங்கிற மலையாள சினிமாவில் அந்த இல்லத்தை நடத்துற கன்னியாஸ்திரியா நடிச்சிருக்கேன். சிவில் சர்வீஸ் படிக்கிற மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமா புத்தகம் எழுதியிருக்கேன். வனிதா பத்திரிகையில குழந்தைகளுக்கான தொடர், வெற்றிபெற்ற பெண்களைப் பற்றிய புத்தகம் எழுதுகிற பணின்னு என் வேலை சிறப்பா போயிட்டு இருக்கு. ஒரு விஷயத்தை கத்துக்கணும்கிற ஆர்வம் இருந்தால் நாமே அதற்கான நேரத்தைக் கண்டுபிடித்துவிடுவோம்” என்கிற திவ்யா, அலுவல் நிமித்தம் சந்தித்துக்கொண்டாலும் வீட்டில் அது பற்றி விவாதிப்பதில்லையாம்.

``அரசுப்பணியையும் அரசியல் பணியையும் அர்ப்பணிப்புடன் மக்களுக்குப் பயன்படும்படி செய்யணும் கிறதுதான் எங்களுடைய கொள்கை” என முத்தாய்ப்பாகத் தெரிவித்தார் திவ்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism