Published:Updated:

``சினிமா அளவுக்கு நிஜ லைஃப்ல நான் `பேக்கு' அம்மா கிடையாது!'' - `கில்லி' ஜானகி

நிஜ வாழ்க்கையில் தான் எப்படிப்பட்ட அம்மா என்பதை இங்கே பகிர்ந்துகொள்கிறார் நடிகை ஜானகி சபேஷ்.

கில்லி திரைப்படத்தில் ஜானகி
கில்லி திரைப்படத்தில் ஜானகி

விஜய் நடித்த 'கில்லி' படத்தில் ஒரு டயலாக். விஜய் அவரது அம்மாவாக நடித்த ஜானகி சபேஷைக் காட்டி த்ரிஷாவிடம் சொல்வார், 'அப்பாவுக்குத் தெரியாம எனக்கு நிறையத் துட்டுக் கொடுப்பாங்க. ஆனா என்னைக்கும் அப்பாகிட்ட என்னை விட்டுக் கொடுக்கவே மாட்டாங்க'. 'கில்லி' மட்டுமல்ல, 'ஜீன்ஸ்' உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் அம்மா ரோலில் நடித்திருக்கிறார் ஜானகி. கலகலப்பான அம்மாவாகவே இவரைப் பார்த்து வந்திருக்கிறோம். சரி, நிஜ வாழ்க்கையில் ஜானகி சபேஷ் எப்படிப்பட்ட அம்மா? பேசினேன்.

ஜானகி சபேஷ்
ஜானகி சபேஷ்

'சினிமாக்கள்ல நான் நடிச்ச அம்மா கேரக்டர்களுக்கும், ஒரே பொண்ணுக்கு அம்மாவா என் வீட்டுல நீங்கப் பார்க்கிற ஜானகிக்கும் பெரிசா எந்த வித்தியாசமும் கிடையாது. நல்லா யோசிச்சுச் சொன்னா, ஒரு விஷயம் வேணும்னா சொல்வேன். சினிமா அளவுக்கு நிஜ லைஃப்ல நான் 'பேக்கு' அம்மாவா இருந்ததில்லை. படங்கள்ல படு 'பேக்'கால்ல காட்டினாங்க' எனச் சிரித்தவர், தன்னுடைய பேரண்டிங் அனுபவம் குறித்துப் பேசத் தொடங்கினார்..

'எனக்கு ஒரே பொண்ணு. பேரு த்வனி. அவளுக்கு இன்னைக்கு 26 வயசு. பெங்களூருவுல பெரிய கம்பெனியில வேலை பார்க்கிறா. அவளோட குழந்தைப் பருவத்துல நான் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில முக்கியமான பொறுப்புல இருந்தேன். அதனால அவளை ரொம்பவே மிஸ் பண்ணினேன். அவ பள்ளிக்கூடம் போகத் தொடங்கின நாட்கள்ல, நான் ஆபீஸ்ல இருந்து வீடு திரும்ப லேட் ஆனா, எனக்குப் போன் பண்ணுவா. ஆபீஸ்ல பேசிப் பேசி அதே 'டோன்'தான் அவகிட்டயும் வரும். 'ஃபோன் பண்ணினா 'அம்மா நீ ஃப்ரீயா'னு கேட்டுட்டுப் பேசணும்'னு சொல்வேன். 'சரி'ன்னு வச்சிடுவா.

இருபத்தைஞ்சு வருஷம் கழிச்சு அது என்னைத் திருப்பி அடிக்குது. இப்ப நான் ஃபோன் பண்ணினா, 'மம்மி, நான் ஃப்ரீயா இருக்கேனா'னு கேட்டுட்டுப் பேசு'ங்கிறா.
நடிகை ஜானகி சபேஷ்

இது எங்கிட்ட இருந்து அவ கத்துக்கிட்ட பழக்கம்தான். இதை பெருமையாகத்தான் சொல்றேன்' என்றவர், உடனே நான் ஒரு 'கறாரான அம்மா'ங்கிற முடிவுக்கு வந்துடாதீங்க' என்றபடி தொடர்ந்தார்.

'ஃபோன்ல அப்புறம் பேசு'னு சொல்றேனே, அப்படிச் சொல்லிட்டு வீட்டுக்குப் போனா வீடு ரணகளம் ஆகும்னு நினைக்கிறீங்களா? அதான் இல்ல. ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்குள் நுழைஞ்சிட்டா, அடுத்த நாள் ஆபீஸ் கிளம்பறவரைக்கும் புருஷன், பொண்ணுக்கான நேரம் அது. அதை வேற எதற்காகவும் விட்டுத் தரவே மாட்டேன். இதனாலேயேதான் என்னால என் மகளை சிறந்த மகளா வளர்க்க முடிஞ்சது. அதுக்காக 'கண்டிப்பா இருக்கக் கூடாதா'னு கேக்காதீங்க. கலகலப்பு கண்டிப்பு ரெண்டுக்குமிடையே உள்ள விகிதம் முக்கியம். 75 சதவிகிதம் கலகலப்பாகவும் 25 சதவிகிதம் கண்டிப்பாகவும் இருந்தேன் நான்.

'கில்லி'யில
நடிகை ஜானகி சபேஷ்

நிறையப் பேர் செய்ற ஒரு தப்பு, என்ன்னா, பிள்ளைங்க கொஞ்சம் பெரியவங்களா ஆன உடனேயே தங்களோட பேரண்ட் ரோலைக் காட்ட நினைக்கிறாங்க. அப்பத்தான் பிள்ளைங்களுக்கும் பெத்தவங்களுக்குமிடையில் ஒரு இடைவெளி உருவாகத் தொடங்குது. தீடீர்னு எதுக்கு நாம அப்படி மாறணும்? எல்லாரோட பிள்ளைகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கதான். ஆனா என் சொந்த அனுபவத்துல நான் சொல்றேன். நம்ம குழந்தைகள்கிட்ட 'நான் அந்தக் காலத்துல அப்படி இருந்தேன்; இப்படி இருந்தேன்'ங்கிற டயலாக்கைத் தயவு செய்து பேசாதீங்க. காலம் மாறிட்டே இருக்கும். டீன் ஏஜ்ல நான் என் பொண்ணுகிட்டச் சொன்னது, 'நீ எங்கிட்டக் கத்துக்க; நான் உங்கிட்ட இருந்து கத்துக்கறேன். இது எனக்கு கரெக்டா ஒர்க் அவுட் ஆச்சு.

காலம் மாறிட்டே இருக்கும். டீன் ஏஜ்ல நான் என் பொண்ணுகிட்டச் சொன்னது, 'நீ எங்கிட்டக் கத்துக்க; நான் உங்கிட்ட இருந்து கத்துக்கறேன். இது எனக்கு கரெக்டா ஒர்க் அவுட் ஆச்சு.

அதேபோல 'பிள்ளைங்க நம்மகிட்ட இருந்து எதையாவது மறைக்கிறாங்களோ'னு சந்தேகப்பட்டுகிட்டே இருக்காதீங்க. உங்களுக்கு அந்தச் சந்தேகம் வந்துட்டே இருக்கா, நீங்களே முந்திக்கிட்டு இப்படிச் செய்யுங்க.. 'இந்த சீக்ரெட் நமக்குள் இருக்கட்டும்; அப்பாவுக்குத் தெரிய வேண்டாம்'னு சின்னச் சின்ன ஃபன்னான ஃபிராடு வேலைகளைச் செய்யுங்க. 'ட்ரெஸ் எடுக்கிறது, சினிமாவுக்குப் போறது'ங்கிற அளவுக்கு மேல போகக் கூடாது அந்த திருட்டுத்தனங்கள். நான் இதையெல்லாம் செய்திருக்கேன்தான்.

மகளுடன் ஜானகி
மகளுடன் ஜானகி

இன்னொரு விஷயத்துலயும் 'கில்லி'யில காட்டினதை அப்படியே ஏத்துக்கிடுவேன். அது என்னன்னா, படிப்பு, வேலை, விஷயங்கள்ல என் பொண்ணு விருப்பத்துக்கு அப்படியே சரி சொல்லியிருக்கேன். அப்பெல்லாம் கணவருடன் வாக்குவாதமெல்லாம் கூட வந்திருக்கு. ஆனா அதையெல்லாம் கவனமாக் கொண்டு போய் யாருக்கும் சேதாரமில்லாதபடி கடந்திருக்கோம்' என்கிறார் இவர்.