பொங்கல், தீபாவளி, நவராத்திரி போன்ற விசேஷ நாள்களில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசளிக்க விரும்புவோம். அப்படிப் பரிசளிக்க விரும்பும் மங்களகரமான பொருள்களில் ஒன்று குங்குமச்சிமிழ். கடைகளில் வாங்கித் தருவதைவிட நீங்களே உங்கள் கைகளால் செய்து தரும்போது அந்தச் சந்தோஷமும் மனநிறைவும் வேற லெவலில் இருக்கும்.எளிதாகக் கிடைக்கும் பொருள்களை வைத்தே அழகான குங்குமச்சிமிழ் செய்யக் கற்றுத்தருகிறார் கைவினைக்கலைஞர் பூமாதேவி.

தேவையான பொருள்கள்: வொயிட் எம்சீல் (White M-Seal - இது களிமண் பக்குவத்தில் இருக்கும் ஒருவகை களிம்பு. கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), சில்வர் அல்லது பிளாஸ்டிக் கிண்ணங்கள், ஃபெவிகால், தேங்காய் எண்ணெய், கத்தி, டால்கம் பவுடர், ஃபேப்ரிக் பெயின்ட், பிரஷ், கிண்ணம், தண்ணீர், வார்னிஷ், வேஸ்ட் கிளாத்.

ஸ்டெப் 1: முதலில் இரண்டு கைகளிலும் டால்கம் பவுடரை நன்றாகப் பூசிக்கொண்டு, வொயிட் எம்சீல் பாக்கெட்டில் இருக்கும் வெள்ளை மற்றும் சாம்பல் நிற களிம்புகளைச் சம அளவில் எடுத்து, இரண்டையும் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.

ஸ்டெப் 2: படத்தில் காட்டியுள்ளவாறு சிறிய பிளாஸ்டிக் தட்டில் லேசாகத் தேங்காய் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்திருக்கும் எம்சீல் கலவையை அதன் மேல் பகுதியில் தடவி காற்றில் உலர வைக்கவும். இது குங்குமச்சிமிழின் அடிப்பகுதிக்கானது.

ஸ்டெப் 3: அடுத்து, சிறிய எவர்சில்வர் கிண்ணத்தின் வெளிப்பக்கம் தேங்காய் எண்ணெய் தடவி, எம்சீல் கலவையை அதன்மீது பூசி உலர வைக்கவும்.

ஸ்டெப் 4: பின்னர் எம்சீல் கலவையை நூல்போல உருட்டி, அதை வட்ட வடிவில் சுருட்டி படத்தில் காட்டியுள்ளவாறு குங்குமச்சிமிழின் மேல் மூடியைச் செய்துகொள்ளவும்.

ஸ்டெப் 5: எம்சீல் கலவையில் இரண்டு, மூன்று சிறு உருண்டைகளாக உருட்டி குங்குமச்சிமிழின் மேல்மூடியின் மையத்தில் ஃபெவிகால் வைத்து ஒட்டி கைப்பிடி செய்துகொள்ளவும்.

ஸ்டெப் 6: அடுத்தாக எம்சீல் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, கத்தரிக்கோல் பயன்படுத்தி படத்தில் காட்டியுள்ளவாறு சிறுசிறு மலர் வடிவங்களைச் செய்துகொள்ளவும்.

ஸ்டெப் 7: இப்போது எம்சீல் கலவையில் நாம் செய்து வைத்துள்ள குங்குமச்சிமிழின் பகுதிகள் எல்லாம் காற்றில் நன்றாக உலர்ந்திருக்கும்.

ஸ்டெப் 8: செய்து வைத்திருக்கும் குங்குமச்சிமிழின் அடித்தட்டு பகுதியின் மேல், படத்தில் உள்ளபடி குங்குமம் நிரப்பும் பகுதியை ஃபெவிகால் கொண்டு ஒட்டவும்.

ஸ்டெப் 9: எம்சீல் கலவையில் செய்துள்ள பூக்கள் காற்றில் உலர்ந்த பிறகு, படத்தில் உள்ளபடி அவற்றை சிமிழின் அடித்தட்டுப் பகுதியில் ஃபெவிகால் கொண்டு ஒட்ட வேண்டும்.

ஸ்டெப் 10: உங்கள் ரசனைக்கேற்ப ஃபேப்ரிக் பெயின்ட் பூசவும். படத்தில் அடித்தட்டுக்கு ஆரஞ்சு, பூக்கள் மற்றும் மேல் மூடிக்கு மஞ்சள், குமிழுக்குச் சிவப்பு நிறம் தரப்பட்டுள்ளது.

ஸ்டெப் 11: பெயின்ட் செய்த பிறகு, அதில் சிறிது வார்னிஷை பூசினால் பளபளக்கும் கண் கவரும் குங்குமச்சிமிழ் தயார்.

ஸ்டெப் 12: மேற்கண்ட ஒரு வடிவில் மட்டுமல்லாமல், படத்தில் காட்டி யுள்ளவாறு உங்கள் ரசனைக்கேற்ப விதவிதமான வடிவங்களிலும் குங்குமச்சிமிழ் செய்யலாம். இவற்றை மஞ்சள், குங்குமம் கொட்டி வைக்கும் சிமிழாகவும், மோதிரம், தோடுகளைப் போட்டு வைக்கும் ஜுவல் பாக்ஸாகவும் பயன்படுத்தலாம்.