Published:Updated:

பஞ்சபூதங்கள் - நீர்... நாங்களும் வீராங்கனைகள்தானே!

லட்சுமி அம்மா
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி அம்மா

லட்சுமி அம்மா

பஞ்சபூதங்கள் - நீர்... நாங்களும் வீராங்கனைகள்தானே!

லட்சுமி அம்மா

Published:Updated:
லட்சுமி அம்மா
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி அம்மா

“கடல் தாயிதான் எங்க குடும்பத்துக்குப் படி அளக்கிற சாமி. எத்தனையோ போராட்டங்கள் வந்தாலும், கடலம்மா எங்களைப் பட்டினி போட்டதில்லை” - பொங்கிவரும் கடல் அலைகளைக் கையெடுத்து வணங்கியபடியே பேச ஆரம்பிக்கிறார் லட்சுமி அம்மா. கடல் பாசி சேகரிப்பில் 40 ஆண்டுகளாக ஈடுபட்டுவருபவர்.

பஞ்சபூதங்கள் - நீர்... நாங்களும் வீராங்கனைகள்தானே!

“சொந்த ஊரு ராமேஸ்வரத்தில் இருக்கும் சின்ன பாலம். மீன் பிடிக்கிறது, கடல் பாசி எடுக்கிறதுதான் குலத்தொழில். பத்து வயசுல எங்க அப்பாகூட சேர்ந்து பாசி எடுக்க கடலுக்குள்ள போனேன். இப்போ அம்பது வயசாகிருச்சு. இன்னும் கடலம்மாகூட உறவு தொடருது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கண்ணாலம் பண்ணிக்கொடுத்த பிறகு வீட்டுக்காரரோடு சேர்ந்து மீன் பிடிக்கப் போயிட்டு இருந்தேன். இப்போ அவருக்கு வயசாகிருச்சு. மீன்கள் நிறைஞ்சு இருக்கற வலையை இழுக்க தெம்பு இல்லை. அதனால ஓய்வில் இருக்காரு. நான் பாசி எடுக்கற வேலைக்குப் போயிட்டு இருக்கேன்” என்கிற லட்சுமி அம்மாவிடம் கடல் பாசி எடுப்பது பற்றிக் கேட்டோம்.

லட்சுமி
லட்சுமி

``கரையில இருந்து படகுல போவோம். பாறைகள் நிறைஞ்ச இடத்தில் ஆழம் பார்த்துட்டு, கட்டுன சீலையோடு கடலுக்குள் குதிச்சுருவோம். கண்ணு நல்லா தெரியணும்னு ஒரு சதுரக் கண்ணாடி போட்டுக்குவோம். அலையை பேலன்ஸ் பண்ண ஒரு காலுல ரப்பர் செருப்பும், இன்னொரு காலுல அலுமினிய வட்டத் தட்டையும் மாட்டிக்குவோம். முன்னாடியெல்லாம் பாசி எடுக்கும்போது கையில் காயம்படக் கூடாதுன்னு பிளாஸ்டிக் பைகளைச் சுத்திக்குவோம். இப்போ கிளவுஸ் பயன்படுத்தறோம். இவ்வளவுதான் எங்களோட பாதுகாப்பு உபகரணங்கள்.

ராமேஸ்வரத்தைச் சுத்தி 21 தீவுகள் இருக்கு. எந்தப் பக்கம் காத்து நல்லா வீசுதோ, அங்கே கடலுக்குள்ள குதிச்சு, பாசி சேகரிச்சு இடுப்பில் கட்டியிருக்கிற பையில் போட்டு வெச்சுக்குவோம். ஒவ்வொரு மாசமும் அமாவாசைக்கு பிறகான ஆறு நாளு, பௌர்ணமிக்கு பிறகான ஆறு நாளைக்குத்தான் கடலுக்குப் போவோம். ஒருமுறை கடலுக்குள்ள நீச்சல் போட்டா 10 கிலோ முதல் 20 கிலோ வரை கடல்பாசி எடுத்துட்டு வர முடியும். எடுத்துட்டு வந்த பாசிகளை உலர்த்தி உள்ளூர் வியாபாரிகளிடம் வித்துருவோம்” என்கிறவரிடம் பாசி எடுப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் கேட்டோம்.

``இது கொஞ்சம் சவாலான வேலைதான். உசுருக்கு உத்தரவாதம் கிடையாது. இதுவரைக்கும் மூணு முறை ஆழமான அலைகளில் சிக்கி மீண்டெழுந்திருக்கேன். சுனாமி வந்த நேரம், பாசி எடுக்க குழுவோடு கடலுக்குப் போயிருந்தேன். திடீர்னு ராட்சச அலை வீச ஆரம்பிச்சுருச்சு. என்னால அலையில இருந்து மீள முடியலை. போராடி எங்கேயோ ஓரிடத்துல கரை ஒதுங்கினது மட்டும்தான் ஞாபகத்துல இருக்கு. இப்போ நினைச்சாகூட உடல் சிலிர்க்குது.

அந்த கோர தாண்டவத்திலிருந்து மீளவே சில மாசங்கள் ஆச்சு. சாப்பாடுக்கு வழி வேணும்னு பொழைப்பைப் பார்க்க மறுபடியும் கடலுக்குள்ள போகத்தான் செஞ்சோம். இங்க இருக்கற பொண்ணுங்களுக்கு மனவலிமை ரொம்ப அதிகம். நிறை மாசமா இருந்தாலும்கூட கடலுக்குள்ள போவாங்க. எப்படியும் மீண்டு வந்துருவோம்னு நம்பிக்கை. இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் வாங்குறவங்க வீராங்கனைகள்னா, ஒவ்வொரு நாளும் உசுரைப் பணயம்வெச்சு கடலுக்குள்ள இறங்கற நாங்களும் வீராங்கனைகள் தானே!” என்று பெருமிதமாகச் சொல்கிறார் லட்சுமி அம்மா.