‘`நடிகையா இருந்தப்ப இந்த ஸ்டூடியோவுக்கு டப்பிங் பேச வந்திருக்கேன். அப்போ, இதை வாங்குவேன்னு நினைச்சதேயில்லை. இந்த தியேட்டரை வாங்க நிறைய பேர் போட்டி போட்டாலும் என்கிட்டதான் கொடுத்தார் ஜி.வி. (ஜி.வெங்கடேஸ்வரன்). அவர் இறப்புக்குப் பிறகு அவருடைய சொந்தக்காரங்க சிலர் எனக்குத் தொந்தரவு கொடுத்தாங்க. தினம் தினம் கோர்ட்டுக்குப் போய் போராடிதான் இன்னிக்கு இந்த தியேட்டரை வெற்றிகரமா நடத்திட்டு வரேன்’’ என்று மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்குகிறார், சென்னை Le Magic Lantern நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நடிகை லிசி.

உதவும் உள்ளங்கள்

சினிமாவில் ஆண் ஆதிக்கம்தானே அதிகம்? ஸ்டூடியோவை விலைக்கு வாங்கினதும் எல்லா ரும் என்கிட்ட கேட்ட கேள்வி, ‘உங்களால இதை நடத்த முடியுமா... டெக்னிகல் நாலெட்ஜ் இருக்கா’ என்பதுதான். என்னை நிரூபிக்க எனக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. கமல் சாரை ஸ்டூடியோ திறப்பு விழாவுக்குக் கூப்பிட்டிருந்தேன். நட்புக்கு மரியாதை கொடுத்து அவர் வந்தது எனக்கு ரொம்பப் பெருமையா இருந்தது

ரஜினி சாரோட ‘கபாலி’ படத் தயாரிப்பாளர் தாணு சார்கிட்ட, ‘நம்பி கொடுங்க. உங்களுக்கு டெக்னிகலா என்ன தேவைப்படுதோ, செய்து கொடுக்கறேன்’னு சொன்னேன். அடுத்த நாளே டப்பிங் யூனிட் மொத்தத்தையும் என் ஸ்டூடியோவுக்குக் கூட்டிட்டு வந்துட்டார் தாணு சார். `கபாலி' படத்தின் அஞ்சு மொழி டப்பிங்கும் இங்கேதான் நடந்தது. இப்ப, பல படங்களோட டப்பிங் என் ஸ்டூடியோவில் தான் நடக்குது. பர்சனலோ, ஸ்டூடியோவோ... எனக்கு ஏதாவது பிரச்னைன்னா நேரம் காலம் பார்க்காமல் வந்து நிற்பார் நடிகர் மோகன். நடிகை ஸ்ரீபிரியாவும் அவங்க கணவரும் எனக்கு என்ன தேவைன்னாலும் உடனே வந்து உதவுவாங்க.

கொண்டாட்டம்

‘கபாலி’, ‘பேட்ட’ - இந்த ரெண்டு படத்துக்கும் ரஜினி சார் என் ஸ்டூடியோவுக்கு வந்துதான் டப்பிங் பேசினார். வீட்டுக்குக்கூட போகாம, ஸ்டூடியோவிலேயே ரெண்டு நாளும் தங்கியிருந்து, கூப்பிட்டப்ப எல்லாம் வாய்ஸ் கரெக்ஷன் பண்ணிக்கொடுத்தார். ஸ்டூடியோவுல வேலை பாக்குற எல்லார்கூடவும் நின்னு போட்டோஸ் எடுத்துக்கிட்டார். ‘பேட்ட’ படத்தோட சக்சஸ் பார்ட்டியும் இங்கேதான் நடந்தது. ரஜினி சார் குடும்பத்தோடு சேர்ந்து ‘பேட்ட’ படத்தை விசில் அடிச்சு, கைதட்டி செமையா ரசிச்சுக் கொண்டாடினோம். ரஜினி சார் கேக் வெட்டி எல்லாருக்கும் அவரே ஊட்டிவிட்டார். அவரோட பேரக் குழந்தைகளெல்லாம் டான்ஸ் ஆடினாங்க.

நடிப்பு

பிசினஸ்தான் ஃபர்ஸ்ட். படத்துல என் பார்ட் ஏதோ வந்தோம், போனோம்னு இருக்கக் கூடாதுன்னு நினைப்பேன். பாலிவுட்ல ஹிட் அடிச்ச ‘2 States’ படத்தை, தெலுங்கில் எடுத்துட்டு இருக்காங்க. அதுல ஹீரோவோட அம்மா கேரக்டரில் நடிக்கிறேன். படத்துல ரொம்ப முக்கியமான கேரக்டர். அதனாலதான் நடிக்கவே ஒப்புக்கிட்டேன்.

குடும்பம்

பையன் சித்தார்த் அமெரிக்காவில் விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சிட்டு வந்திருக்கான். இப்பதான் கரியரை ஆரம்பிச்சிருக்கான். நல்லா வருவான். பொண்ணு கல்யாணி பிரியதர்ஷன் பிஸியான நடிகை ஆகிட்டா. நிறைய மலையாளப் படம் பண்ணியிருக்கா. தமிழில் இப்போதான் நடிச்சிட்டு வர்றா. சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்துக்கு டப்பிங் கொடுக்க என் ஸ்டூடியோவுக்குத்தான் வருவா. அவளை நினைச்சு ரொம்ப பெருமைப்படுறேன். ஹீரோயின் ஆகணும்னு ஆசைப்பட்டு, அதுக்காக நிறைய கஷ்டப்பட்டு உழைச்சு இன்னிக்கு இந்த இடத்துக்கு வந்திருக்கா. முதல் பட ஆடிஷனுக்கு என்னையும் கூப்பிட்டுட்டுப் போனா. என்ன செய்யணும், எதை செய்யக் கூடாதுங்கிறதுல தெளிவா இருக்கா.

80’ஸ் சந்திப்பு

இந்த ஐடியா முதலில் எனக்குத் தோணுச்சு. சுஹாசினிகிட்ட பேசிட்டிருந்தப்போ சொன்னேன். அவங்களும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. எங்களுக்குத் தெரிஞ்சவங்களை ஒண்ணா சேர்த்து முதலில் என் வீட்ல மீட் பண்ணோம். இதோ, இப்போ பத்தாவது வருஷத்துல வந்து நிக்குது. இந்த வருஷம் சிரஞ்சீவி சார்தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கார். ஹைதராபாத்தில் உள்ள அவரோட வீடுதான் ஸ்பாட். இந்தச் சந்திப்பு மூலமா நிறைய நல்ல விஷயங்களும் பண்ணிட்டு இருக்கோம். சென்னை வெள்ள நிவாரணத்துக்காக நான், சுஹாசினி, குஷ்பு, அமிதாப்ஜி எல்லோரும் ஒண்ணா சேர்ந்து ஃபேஷன் ஷோ நடத்தி, அதுல சேர்ந்த பணத்தை டிரஸ்ட்டுக்குக் கொடுத்தோம். கேரள வெள்ளத்தின்போது 40 லட்சம் ரூபாய் வரை பணம் சேர்ந்தது. அதை அப்படியே கேரள அரசுக்குக் கொடுத்தோம். இப்படி எங்க `80-ஸ் குரூப்' மூலமா எங்களால் முடிஞ்ச உதவியை பண்ணிட்டிருக்கோம்!