Published:Updated:

ஆண்களைப் புரிந்துகொள்வோம் - 12 - ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?

ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?
பிரீமியம் ஸ்டோரி
ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?

''ஆண்களுக்குப் பிடிக்காத வார்த்தைகள் என்பதைவிட கேள்விகள் என்று சொல்லலாம்.''

ஆண்களைப் புரிந்துகொள்வோம் - 12 - ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?

''ஆண்களுக்குப் பிடிக்காத வார்த்தைகள் என்பதைவிட கேள்விகள் என்று சொல்லலாம்.''

Published:Updated:
ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?
பிரீமியம் ஸ்டோரி
ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?

`பெண்களைவிட ஆண்கள் குறை வாகவே பேசுவார்கள். ஏனென் றால், ஆண்கள் தகவலை மட்டுமே சொல்பவர்கள். பெண்கள் தங்கள் உணர்வுகளையும் சேர்த்துப் பேசுபவர்கள். அதனால்தான், பெண்கள் அதிகம் பேசுகிறார்கள்’ - ஆண், பெண் பேச்சு தொடர்பான இந்தக் கருத்து பல காலமாக நம் சமூகத்தில் உலவிக்கொண்டிருக்கிறது. இது எந்தளவுக்கு உண்மை; ஆண்களுக்குப் பிடிக்காத வார்த்தைகள் என்னென்ன... மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் சொல்வதைக் கேளுங்கள்.

‘‘ஆண்களைவிட பெண்கள் மூன்று மடங்கு கூடுதலாகப் பேசுவார்கள் என்பது மரபணு ரீதியில் நிரூபிக்கப்பட்ட ஒன்றுதான். தவிர, ஒரு காலகட்டம் வரை ஆண்கள் மட்டுமே வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். வீட்டிலிருந்த பெண்கள் பேச்சின் மூலமே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் அல்லது தனிமையைக் கடந்தார்கள். அதனாலும் அவர்கள் அதிகம் பேசுபவர்களாக அறியப்பட்டிருக்கலாம். பொதுவாகவே ஆண்கள் தங்கள் உணர்வுகளை வெளிக் காட்டுவது குறைவு. இதற்கு மிகப்பெரிய உதாரணம், அழுகை.

சரி, ஆண்கள் குறைவாகப் பேசுவதும் பெண்கள் அதிகமாகப் பேசுவதும் தற்போதும் அப்படியே இருக்கிறதா என்றால், மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆண் களிலும் அதிகமாகப் பேசுபவர்கள் இருக் கிறார்கள். பெண்களிலும் குறைவாகப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். சில நேரத்தில் இது சரிசமமாகவும் இருக்கிறது. சமீபத்திய ஆராய்ச்சிகளும் இதை ஏற்றுக் கொண்டிருக் கின்றன.

ஸ்வாதிக் சங்கரலிங்கம்
ஸ்வாதிக் சங்கரலிங்கம்

உளவியல்ரீதியாகப் பார்த்தால், ஆணோ, பெண்ணோ குறைவாகப் பேசுகிற இயல்பு கொண்டிருந்தால் நிதானமானவர்களாகவும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். தேவைப் படுகிற இடங்களில் சரியாகப் பேசவும் தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் பல உச்சங் களைத் தொடும் அளவுக்கு அவர்கள் வளர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. மற்றபடி, குறைவாகப் பேசுவதால் அவர் நல்லவர்; அதிகமாகப் பேசுவதால் இவர் கெட்டவர் என்றெல்லாம் நம்ப வேண்டியதில்லை’’ என்றவர்,

`ஆண்களுக்குப் பிடிக்காத வார்த்தைகள் என்னென்ன... ஏன்?’ என்பதைப்பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

‘`ஆண்களுக்குப் பிடிக்காத வார்த்தைகள் என்பதைவிட கேள்விகள் என்று சொல்லலாம். அதையும் ‘மனைவி கேட்கிற கேள்விகள்’ என்று குறிப்பிட்டுச் சொல்லலாம். உதாரணத்துக்கு சில கேள்விகள். ‘ஆபீஸ்ல இருந்து எப்போ வருவீங்க’, ‘ஏன் லேட்’, ‘நிஜமாவே ஆபீஸ்லதான் இருக்கீங்களா’, ‘எப்போ வேலை முடியும்.’

இந்தக் கேள்விகளை ‘உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா’ என்கிற சந்தேகத்திலும் கேட்கலாம். அல்லது ‘கணவருக்கு என்னாச்சோ’ என்கிற பயத்திலும் கேட்கலாம். மனைவி கேட்கிற விதத்தி லேயே, கணவனுக்கு அது எந்த தொனியில் கேட்கப் படுகிறது என்பது புரிந்துவிடும். ‘கிளம்புற நேரத்துல புதுசா வேலை கொடுத்துட்டாங்க. வேற வழியில்லாம செஞ்சுகிட்டிருக் கேன். இதுல உன் சந்தேகத் துக்கு வேற பதில் சொல் லிட்டிருக்கணுமா’ என்று எரிச்சலாகிவிடுவான். இவை அவனுக்குப் பிடிக்காத வார்த்தைகள் ஆகிவிடு கின்றன, அவ்வளவுதான்.

மனைவி சந்தேகத்துடன் கேள்வி கேட்டால் ‘தான் அப்படியில்லை’ என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது கணவனின் கடமை. அதைப் புரிந்துகொள்வது மனைவி யின் பொறுப்பு. ‘நீங்க லேட் நைட்ல வீட்டுக்கு வர்ற வரைக்கும் எனக்குத் தனியா இருக்க பயமா இருக்கு; உங்களுக்கு என்னவோ ஏதோன்னு டென்ஷனா இருக்கு’ என்ற தன்னுடைய பயத்தை மனைவி கணவருக்குப் புரியவைக்க வேண்டும். கணவன் அந்த பயத்தைத் தடுக்க, தான் தாமதமாக வருவதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் மெசேஜாவது செய்ய வேண்டும். இவற்றைச் செய்ய மறந்துவிட்டால், மனைவியிடமிருந்து போன் வந்தால் ‘இத்தனை மணிக்குள்ள வந்துடுவேன்’ என்பதை எரிச்சல் இல்லாமலாவது சொல்ல வேண்டும்.

ஆண்களைப் புரிந்துகொள்வோம் - 12 - ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?
Kadek Bonit Permadi

இந்தக் காலத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். கணவர் தாமதமாக வந்தால் மனைவிக்கு சந்தேகம், பயம் வருவதைப்போல, மனைவி தாமதமாக வந்தால் கணவருக்கும் வருகிறது. பரஸ்பர நம்பிக்கை சந்தேகத்தை விரட்டிவிடும். தன் மீதான துணையின் அக்கறைதான் பயமாக வெளிப்படுகிறது என்பதை கணவன்/மனைவி உணர வேண்டும். இத்தனை முறை போன் செய்தும் எடுக்கவில்லை என்றால், கணவன்/ மனைவி ஏதோ வேலையில் இருப்பார் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

நம்பிக்கையும் அக்கறையுமே திருமண வாழ்க்கையின் அஸ்திவாரம் ஆட்டம் காணாமல் காக்க வல்லவை. அதற்குப் பெண்கள், ஆண்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்கள், பெண்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.’’

(நிறைவடைந்தது)

***

26 வருஷத்துல மூணு, நாலு தடவைதான் சண்டை போட்டிருப்போம்! - பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணன்

``என்னோட இயல்பே குறைவான பேச்சுதான். இது எங்க அப்பாகிட்ட இருந்து எனக்கு வந்த குவாலிட்டி. ஸ்கூல் படிக்கிறப்போ ஃபிரெண்ட்ஸோட சினிமாவுக்குப் போவோம். இடைவேளையில வாங்குற பாப்கார்னை மத்தவங்க எல்லாம் பத்து நிமிஷத்துல சாப்பிட்டு முடிச்சிருப்பாங்க. நான் மட்டும் படம் முடியுற வரைக்கும் சாப்பிட்டுகிட்டு இருப்பேன். ’உனக்கு ரொம்ப பொறுமை ஜாஸ்திடா’ன்னு கிண்டலடிப்பாங்க. ஆனா, அந்த இயல்புதான் இன்னிக்கு வரைக்கும் என் வாழ்க்கையை ஸ்ட்ரெஸ் இல்லாம வழி நடத்துது.

உன்னிகிருஷ்ணன்
உன்னிகிருஷ்ணன்
Unspecified

பேச்சு குறைவா இருந்தா மத்தவங்க பேசுறதை உன்னிப்பா கவனிக்க முடியும். அப்படி கவனிச்சுட்டு பேசுறப்போ நம்மளோட பதில் ரொம்ப தெளிவா இருக்கும். மத்தவங்க பேச்சுக்கு உடனே ரியாக்ட் பண்ணா அது தப்பாகூட போகலாம். மத்தவங்க பேசுறதை உள்வாங்கி, அதுக்குப் பதில் சொல்லணுமா, வேண்டாமான்னு யோசிச்சுதான் பதில் சொல்வேன். அதனால, என்னோட துறையில `கமிட்டியில உன்னிகிருஷ்ணன் இருந்தா அந்த இடம் ஸ்மூத்தா இருக்கும்’னு சொல்வாங்க.

வீட்டுக்குள்ளேயும் எனக்கு ரொம்ப சீக்கிரம் கோபம் வராது. எப்பவாவது கொஞ்சம் கோபப்பட்டு பேசினாலும் வீட்ல அதுக்கு உடனே ரெஸ்பான்ஸ் இருக்கும். குழந்தை வளர்ப்புலயும் எப்பவும் கத்திக்கிட்டே இருந்தா நம்ம மேல மரியாதை இருக்காது. ஆனா, எப்பவாவது நியாயமா கோபப்பட்டா, அந்தக் கோபத்துக்கு மரியாதை கிடைக்கும். அந்த நேரத்துல நாம சொல்ற விஷயங்கள் குழந் தைங்க மனசுல நல்லா பதியும். அதனாலதான், ‘பிள்ளைங்க விஷயத்தை அவர் பார்த்துப்பாரு’ன்னு சொல்வாங்க என் மனைவி.

திருமண வாழ்க்கை நிம்மதியா இருக்கணும்னா கணவன் மனைவி ரெண்டு பேர்ல ஒருத்தர் பொறுமைசாலியா இருந்தா போதும். என் மனைவி மனசுல இருக்கிறதை அப்படியே பேசக்கூடியவங்க. ஆனா, நான் அப்படி கிடையாது. இடம், பொருள் பார்த்து நிதானமா தான் பேசுவேன். அவங்க என்னை, `நீங்க ரொம்ப சாஃப்டா இருக்கீங்க. யாராவது உங்களை ஏமாத்திடுவாங்க. கவனமா இருங்க’ன்னு சொல்லிட்டே இருப்பாங்க. குடும்பத்துல ஒருத்தர் அப்படி ஒருத்தர் இப்படி இருந்தாதான் பேலன்ஸ்டா இருக்கும்கிறது என்னோட கருத்து.

எங்களுக்கு கல்யாணமாகி இருபத்தி ஆறு வருஷங்கள் ஆச்சு. இதுல மொத்தமா மூணு அல்லது நாலு முறைதான் சண்டை போட்டிருப்போம். `நாம ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கிறதுக்கு உங்க இயல்புதான் காரணம்’னு மனைவி சொல்வாங்க. ஆண்கள் குறைவா பேசினா, கிடைக்கற பெரிய பலன் இதுதாங்க!’’