Published:Updated:

பாத்ரூம் முதல் பால்கனி வரை பூத்துக்குலுங்கும் பசுமை! - அசத்தும் `லண்டன்' காயத்ரி

`லண்டன்' காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
News
`லண்டன்' காயத்ரி

பசுமை இல்லம்

மிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் காயத்ரி. தற்போது லண்டனில் வசிக்கும் அவர், அங்குள்ள தன் வீட்டுக்குள் வரவேற்பறை, பூஜை அறை, புத்தக அறை, கிச்சன், பெட்ரூம், பாத்ரூம், பால்கனி எனத் திரும்பிய பக்கமெல்லாம் 130-க்கும் மேற்பட்ட செடிகளை வளர்க்கிறார். தவிர, காய்கறிச் செடிகள், பழ மரங்களுடன் வீட்டுத் தோட்டமும் பசுமையில் பூத்துக்குலுங்குகிறது. அனைத்தையும் வீடியோகால் மூலமாக நமக்கு காண்பித்தபடியே அழகு தமிழில் பேசுகிறார் காயத்ரி.

பாத்ரூம் முதல் பால்கனி வரை பூத்துக்குலுங்கும் பசுமை! - அசத்தும் `லண்டன்' காயத்ரி

“சென்னையில்தான் வளர்ந்தேன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கணவரும் நானும் இன்ஜினீயர்கள். இருவருக்கும் இயற்கை விவசாயத்தின்மீது ஆர்வம் அதிகம். கல்யாணம் ஆனதுமே வேலைக்காக லண்டன்ல குடியேறினோம். அப்பார்ட்மென்ட் வாழ்க்கையில், வீட்டுத் தோட்டம் அமைக்கும் எங்க ஆசை நிறைவேறலை. எனவே, சில இண்டோர் செடிகளை வளர்த்தோம். இதுக்கிடையே, கணவர் பிஹெச்.டி-யும், நான் எம்.எஸ் படிப்பும் முடிச்சோம். வேலை விஷயமா அடுத்தடுத்து சில இடங்களுக்கு ஷிஃப்ட்டானோம். ஐ.டி வேலை, வெளிநாட்டு வாழ்க்கைனு இருந்தாலும், ஒருபோதும் நம்ம இயற்கை வாழ்வியல்ல இருந்து விலகிடக் கூடாதுனு உறுதியா இருந்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பாத்ரூம் முதல் பால்கனி வரை பூத்துக்குலுங்கும் பசுமை! - அசத்தும் `லண்டன்' காயத்ரி

2012-ல் ஒரு வீட்டை வாங்கி மறுசீரமைப்பு செஞ்சோம். எங்க வீட்டுச் சூழலுக்கு நல்லா வளரும் செடிகளை அனுபவத்தின் மூலம் தெரிஞ்சுகிட்டு அவற்றை மட்டும் வளர்க்கிறோம். காற்றை சுத்தப்படுத்தும் பாம்புக் கற்றாழை (Sansevieria Plant), ஸ்பைடர் பிளான்ட் உட்பட வீட்டுக்குள் ஒரு பகுதி விடாம சின்னதும் பெரிசுமா நூற்றுக்கணக்கான செடிகளை வளர்க்கிறோம். மனசும் ஆர்வமும் இருந்தால், குறைந்தபட்சம் சில தொட்டிகளில் செடி வெச்சு வீட்டுக்குள்ளேயும் தோட்டம் அமைக்கலாம்” என்று இடைவெளி விடுபவர், வீட்டையும் தோட்டத்தையும் வீடியோவில் காட்டியபடியே தொடர்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“மணி பிளான்ட் உட்பட தண்ணீர் அதிகம் உறிஞ்சும் செடிகளை மட்டும் பிளாஸ்டிக் தொட்டியிலும், மற்ற செடிகளை மண் தொட்டியிலும் வளர்க்கிறோம். கல்யாணத்தின்போது பெண் வீட்டிலிருந்து தரப்படும் பாரம்பர்ய சீர்வரிசைப் பாத்திரங்களைப் பலரும் பரண்ல அடுக்கி வெச்சிருப்பாங்க. சிலர் விலைக்கு வித்துடுவாங்க. நான் அந்தப் பாத்திரங்கள்லயும் செடிகள் வளர்க்கறேன். 6,500 சதுர அடி பரப்பளவுள்ள இடத்துல, 2,000 சதுர அடியில் வீடு இருக்கு. மற்ற 4,500 சதுர அடியில் தோட்டம் வெச்சிருக்கோம்.

பாத்ரூம் முதல் பால்கனி வரை பூத்துக்குலுங்கும் பசுமை! - அசத்தும் `லண்டன்' காயத்ரி

வெண்டை, புடலை, கத்திரி உள்ளிட்ட சில காய்கறிகளின் விளைச்சல் முடிஞ்சுடுச்சு. பீன்ஸ், தக்காளி, பீட்ரூட், கேரட், குடமிளகாய், முள்ளங்கி, புரொக்கோலி, பூண்டு, இஞ்சி, பூசணியெல்லாம் நல்ல விளைச்சல் கொடுக்குது. வீட்டுத் தேவைக்கான 60 சதவிகிதம் காய்கறிகள் தோட்டத்துலயே கிடைக்குது. அத்தி, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பிளம்ஸ் உட்பட பல்வேறு பழ மரங்களும் பலன் தருது. காஷ்மீர்ல விளைவது போன்ற தரத்திலான நார்மல் ஆப்பிள் மரம் ஒண்ணு வெச்சிருக்கோம். 20 கிலோ ஆப்பிள் கிடைச்ச நிலையில், சமீபத்துலதான் சீஸன் முடிஞ்சது. கிரீன் ஆப்பிள் மரம் ஒண்ணும் இருக்கு. நம்ம ஊர்ல முருங்கை மாதிரிதான், இங்க ஆப்பிள் மரத்தைப் பலரும் வளர்ப்பாங்க.”

பாத்ரூம் முதல் பால்கனி வரை பூத்துக்குலுங்கும் பசுமை! - அசத்தும் `லண்டன்' காயத்ரி

- படபடவென ஒருகூடை நிறைய கிரீன் ஆப்பிளைப் பறித்துக்காட்டிச் சிரிப்பவருடன், கணவரும் மகளும் இணைந்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாத்ரூம் முதல் பால்கனி வரை பூத்துக்குலுங்கும் பசுமை! - அசத்தும் `லண்டன்' காயத்ரி

“வீட்டை வெறும் நாலு சுவர்கள் இருக்கிற கூடாரமா மட்டும் வெச்சுக்காம, எங்க திரும்பினாலும் கண்களுடன் மனதும் பசுமையாகும்படி மாத்தினோம். இதனால, வீட்டுக்குள் இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் புத்துணர்ச்சி கிடைக்குது. செடிகளோடு சிரிச்சுப் பேசினால் பாரமெல்லாம் பறந்துபோயிடும். இண்டோர் செடிகளுடன், தோட்டத்தில் வளர்க்கும் காய்கறிச் செடிகளையும் பதியம் செஞ்சு நிறைய கன்றுகளை உருவாக்குவோம். வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசாகக் கொடுப்போம்.

பாத்ரூம் முதல் பால்கனி வரை பூத்துக்குலுங்கும் பசுமை! - அசத்தும் `லண்டன்' காயத்ரி

தோட்டம், இண்டோர் செடிகள் பராமரிப்புக்குத் தினமும் ரெண்டு மணிநேரம் செலவிடுவேன். இதனால, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு, மன அமைதினு நிறைய நன்மைகள் கிடைக்குது. மகளைக் கவனிச்சுக்க போன வருஷக் கடைசியில் வேலையை விட்டுட்டேன். எவ்வளவு பிஸியா இருந்தாலும், கணவர் மகேஸ்வரன் தோட்டப் பராமரிப்பில் எனக்கு உதவியா இருப்பார். மகள் அக்யாவுக்கும் தோட்டப் பராமரிப்பிலும் இயற்கை யின்மீதும் ஆர்வம் ஏற்பட்டிருக்கு. அடுத்து கோழி வளர்க்கத் திட்ட மிட்டிருக்கோம்” என்கிறார் காயத்ரி.

மூவரும் பசுமைப் புன்னகையுடன் விடைபெற்றனர்.

எந்தச் செடிக்குத் தண்ணீர் தேவை?

“தொட்டி, செடி, பருவ நிலையைப் பொறுத்து வாரத்துல ஒருசில முறை மட்டும் இண்டோர் செடிகளுக்குத் தண்ணீர் விடுவேன். தொட்டியிலுள்ள மண்ணுல ஒரு விரலை ரெண்டு இன்ச் உள்ளே விடணும். விரல்ல மண் ஒட்டாம இருந்தால் அந்தச் செடிக்குத் தண்ணீர் தேவை. விரலில் மண் ஒட்டி ஈரப்பதம் படிந்தால் தண்ணீர் தேவையில்லை. பெரும்பாலான தொட்டிகளுக்கு அடிப்பகுதியில் தட்டு வெச்சிருப்பேன். அதில் வடியும் நீரை அவ்வப்போது நீக்கிடுவேன்.

பாத்ரூம் முதல் பால்கனி வரை பூத்துக்குலுங்கும் பசுமை! - அசத்தும் `லண்டன்' காயத்ரி

வாரத்துக்கு ஓரிருமுறை இண்டோர் செடிகளின் மண்ணைக் கிளறிவிடுவேன். ஏதாவது, பூச்சிகள் தென்பட்டால் கையால் எடுத்து அழிச்சுடுவேன். ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை வேப்பெண்ணெயில் தண்ணீர் கலந்த கரைசலை செடிகள்மீது தெளிப்பேன். இதனால் பூச்சித் தாக்குதல் தொந்தரவு ஏற்படாது. கிச்சன் கழிவுகள், தோட்டக் கழிவுகளை சேகரிச்சு மட்க வெச்சு, செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்துவோம். செயற்கை உரங்கள் இல்லாம, முழுக்கவே இயற்கை முறையில்தான் தோட்டத்தைப் பராமரிக்கிறோம்” என்கிறார் காயத்ரி.