Published:Updated:

பாரம்பர்ய பரதம்... பரபர விளம்பரம்... அசத்தும் காதல் தம்பதி

காதல் தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
காதல் தம்பதி

முதுமையும் இனிக்கும்

ரு பக்கம் பாரம்பர்ய பரதம், இன்னொரு பக்கம் டிரெண்டி விளம்பரங்கள் என்று அசத்திக்கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தின் மூத்த நடனக்கலைஞர்கள் சாந்தா - தனஞ்ஜெயன் தம்பதி. முதல் சந்திப்பு, அரை நூற்றாண்டு கடந்த தாம்பத்யம், விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருக்கிற அனுபவம் என எல்லாவற்றையும் எனர்ஜி குறையாமல் பகிர்கிறார்கள்.

‘‘50-களின் தொடக்கத்தில் நாங்க கலாக்ஷேத்ராவுல சேர்ந்தோம். மலையாளம் மட்டும் தெரிஞ்ச இவரை பார்த்துக்கச் சொன்னாங்க கலாக்ஷேத்ராவின் நிறுவனர் ருக்மணியம்மா. இதோ இப்போ வரைக்கும் அவரை நான் பத்திரமா பார்த்துக்கிட்டிருக்கேன்’’ என்று சாந்தா சிரிக்க, ‘‘என் காதலைச் சொன்னப்போ சாந்தா `யெஸ், நோ' எதுவும் சொல்லலை. திரும்பி வருவேன்னு சொல்லிட்டு சொந்த ஊருக்குப் போயிட்டா. மூணு வருஷம் காத்திருந்து பெற்றோர் சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்’’ - மலரும் நினைவுகள் பகிரும் தனஞ்ஜெயனின் வார்த்தைகளில் இன்னமும் அதே காதல்.

‘‘திருமணமான புதுசுல கஷ்ட ஜீவனம்தான். டான்ஸ் கிளாஸ் நடத்திக்கிட்டிருந்தோம். சாந்தாவோட அப்பா அந்தக் காலத்துல 5,000 ரூபாய்க்கு ஓரிடத்தை வாங்கிக்கொடுத்தார். அங்கே நடனத்தை நம்பி வாழ்க்கையை ஆரம்பிச்சோம். கலை கைவிடல’’ - நெகிழ்கிறார் தனஞ்ஜெயன். விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அனுபவங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தார் சாந்தா.

பாரம்பர்ய பரதம்... பரபர விளம்பரம்... அசத்தும் காதல் தம்பதி

‘‘எங்க இளைய மகன் சத்யஜித் மூலமாதான் விளம்பரப்பட வாய்ப்பு வந்தது. ஓகே சொன்னோம். அடுத்த நாளே கோவாவில் ஷூட்டிங். இவர் என்னை பைக்குல உட்கார வெச்சு கூட்டிட்டுப் போற மாதிரி சீன். அங்க போன பிறகுதான் எங்களுக்குச் சொன்னாங்க. இவருக்கு பைக் ஓட்டத் தெரியாது. இருந்தாலும் முயற்சி பண்ணி ஓட்டினார். ஆனா, டபுள்ஸ் ஓட்ட பேலன்ஸ் வரலை. சட்டுனு இவரோட சாயல்ல ஒருத்தரைக் கூட்டிட்டு வந்து லாங் ஷாட்ல வண்டி ஓட்டறதை ஷூட் பண்ணிட்டு, குளோசப் ஷாட்டுக்கு இவரை எடுத்தாங்க. சில நொடிகள் மட்டும் வர்ற விளம்பரங்களுக்குப் பின்னாடி எவ்வளவு உழைப்பு இருக்குன்னு பிரமிச்சுப் போயிட்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதே விளம்பரத்துக்காக ஜப்பானிய மக்களோடு பஸ்ல போற ஷாட். அதுல எல்லோரும் அவங்க மொழியில படம் பார்த்துக்கிட்டு இருக்கிறப்போ நாங்க செல்போன்ல ரஜினி படம் பார்த்துட்டு ‘தலைவர் படம்’னு சொல்லி சத்தமா சிரிக்கிற மாதிரி சீன். நாங்க சிரிச்ச சிரிப்புல பஸ்ல இருந்த அத்தனை பேரும் திரும்பிப் பார்க்க, ரகளை மொமென்ட் அது. அப்புறம் வெஸ்டர்ன் டான்ஸ் கத்துக்கிட்டு பப்ல ஆடுற மாதிரி ஒரு சீன். புடவை கட்டிண்டு வெஸ்டர்ன் டான்ஸ் ஆடின அந்த விளம்பரத்தை இப்ப பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிப்போம்’’ என்று நகைக்கிற சாந்தாவிடம் தனி செல்போனே கிடையாது. இருவருக்கும் ஒரே செல்போன்தான்.

பாரம்பர்ய பரதம்... பரபர விளம்பரம்... அசத்தும் காதல் தம்பதி

‘‘கல்யாணமானபோது சாந்தாவுக்கு சமைக்கத் தெரியாது. எனக்கு நன்னா சமைக்கத் தெரியும். ஒரே வருஷத்துல என்கிட்டருந்து சமையல் கத்துக்கிட்டா. நாங்க நடிச்ச ஒரு விளம்பரத்துல நான் சாந்தாவுக்காக காபி போட்டுத் தருவேன். காய்கறி நறுக்கித் தருவேன், சமைச்சுத் தருவேன். அந்த விளம்பரம் எங்களோட பழைய நினைவுகளை ஞாபகப் படுத்திடுச்சு’’ என்கிறார் தனஞ்ஜெயன்.

அடுத்தடுத்து வரிசையாக விளம்பரப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி யிருக்கிறார்கள் இந்தத் தம்பதியர். வயதில் மூத்தோரை வீடுகளுக்குள் முடக்கிப்போட்டிருக்கிற கொரோனா காலத்தில் சாந்தா-தனஞ்ஜெயன் தம்பதி விதிவிலக்கு. குறையாத எனர்ஜியும் என்றும் மாறாத இளமையும்கொண்ட தம்பதியருக்கு வாழ்த்துகளும் வணக்கமும்.