Published:Updated:

30 நிமிடங்களில் 134 உணவு வகைகள்; ``அடுத்து கின்னஸ்தான்!" - சாதனைப் புத்தகத்தில் மதுரைப் பெண்

30 நிமிடங்களில் 134 வகையான உணவு வகைகளைச் செய்து Asia Book of Records மற்றும் India Book of Recordsல் இடம்பிடித்து சாதனை படைத்திருக்கிறார் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த இந்திரா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

30 நிமிடங்களில் 134 வகையான உணவு வகைகளைச் செய்து Asia Book of Records மற்றும் India Book of Records-ல் இடம்பிடித்து சாதனை படைத்திருக்கிறார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த இந்திரா. `உப்புமா கிண்டவே அரை மணி நேரம் ஆகுமே... 134 வகையான உணவு வகைகளையும் எப்படி செஞ்சீங்க..?' என்றால், சிரிப்புடன் பேசத் தொடங்குகிறார் இந்திரா.

``எனக்கு சொந்த ஊரு மதுரை, திருமங்கலம். கணவர் ரவிச்சந்திரன் கடற்படையில் வேலை பார்க்கிறார். அவரு பளுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் பதக்கம் பெற்றவர். அவர் கொடுத்த உந்துதல்தான், எனக்கும் ஏதாவது சாதனை செய்யணும்னு தோணுச்சு.

இயல்பிலேயே எனக்கு சமையல்னா ரொம்ப இஷ்டம். அதுபோக, நான் சமையலை வேக வேகமா பண்ணுறதை கண்டுபிடிச்சதே என் வீட்டுக்காரர்தான். அதை அவர் சொல்லிப் பாராட்டினப்போதான், `நாம ஏன் குறைந்த நேரத்துல அதிகமான உணவு வகைகள் செய்யும் சாதனை எதுவும் முயலக் கூடாது..?'னு தோணுச்சு. அதைப் பத்தின தேடல்ல இறங்கினப்போ, இதுக்கு முன்ன கேரளாவைச் சேர்ந்த 10 வயசுப் பையன் ஒரு மணி நேரத்துல 174 உணவு வகைகள் செஞ்சதுதான் சாதனையா இருந்துச்சு. அதை எப்படி முறியடிக்கலாம்னு யோசிச்சோம்.

இந்திரா
இந்திரா
105 ஆண்டுகளில் முதல் பெண் தலைவர்; இந்திய உயிரியல் நிறுவனத்தில் சாதனை படைத்த த்ரிதி பானர்ஜி யார்?

ஒரு மணி நேரம் வேணாம், அரை மணி நேரத்துல 87 வகையான உணவு வகைகள் பண்ணலாம்னு முடிவு பண்ணினேன். பத்து வயசுப் பையனே இவ்ளோ பண்ணிட்டாங்க, நாம அதைவிட இன்னும் அதிகமா பண்ணணும்னு இன்னும் அதிகமா உழைப்பு போட ஆரம்பிச்சேன். அதோட பலன்தான், 134 வகையான உணவு வகைகள்.''

எப்படி உங்கள தயார்படுத்திக்கிட்டீங்க..?

``ரொம்பவே கஷ்டம்தான். மூணு மாதம் இதுக்காக பயிற்சி எடுத்துக்கிட்டேன். எல்லா வார இறுதி நாள்களுமே கல்யாண வீடு மாதிரி சமையல் நடக்கும். என் கணவரும், குழந்தைகளும்தான் ரொம்ப சப்போர்டிவ்வா இருந்தாங்க. எல்லா காய்கறிகளையும் வாங்கி வந்து, ஒண்ணு சேர்த்து, வெட்டிக் கொடுத்து, சமைச்சதுக்கு அப்புறம் சுத்தம் பண்ணி அவங்களும் மெனக்கெட்டாங்க. முதல் வாரம் அரை மணி நேர கவுன்ட் டௌன்ல 35 வகையான உணவு, அப்புறம் 80 வகையான உணவுனு படிப்படியா எண்ணிக்கையை அதிகரிக்க ஆரம்பிச்சேன். இந்த பயிற்சி ரொம்பவே உதவியா இருந்துச்சு.''

134 உணவு வகைகள்
134 உணவு வகைகள்
11 வயதில் 70 உலக சாதனை; `இளம் யோகா டீச்சர்' பட்டம்; யோகாவில் கலக்கும் சிறுமி பிரிஷா!

என்னென்ன உணவு வகைகள் பண்ணுனீங்க?

``அடுப்பில்லா சமையல் (Fireless food), அடுப்பில் வைக்கும் சமையல்னு (With fire food) உணவு வகைகளை ரெண்டா பிரிச்சிக்கிட்டேன். பிரியாணி வெரைட்டீஸ், 15 வகையான இட்லி, 16 வகையான பணியாரம், 10 வகையான தோசை, 5 வகையான ஆம்லெட் இப்படி ஏகப்பட்ட வெரைட்டிகள் பண்ணினேன். மூணு ஸ்டவ், ஒன்பது பர்னர்னு அடுப்பும் ரெடி பண்ணிட்டேன்.''

Asia Book of Records, India Book of Records-ல் இடம் பிடிச்சுட்டீங்க... அடுத்து என்ன?

``இதுக்கு நிறைய பயிற்சி எடுத்தேன். வீட்டுல செஞ்சு பழகுறப்போ கொரோனா காரணமா அடுத்தவுங்களுக்கு சாப்பாடும் ஷேர் பண்ண முடியல. அதனால் நிறைய உணவு வேஸ்ட் பண்ண வேண்டியதா போச்சு. அது மட்டும்தான் கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு. மத்தபடி என்னோட இந்த முயற்சி சாதனை புத்தகங்கள்ல இடம் பிடிச்சது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இப்போதைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்து கின்னஸ் சாதனைக்கு முயற்சி பண்ணாலாம்னு இருக்கேன்!"

வாழ்த்துகள் இந்திரா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு