Published:Updated:

நீங்களே செய்யலாம்... இரவுக்கு இனிமை சேர்க்கும் லேம்ப் ஷேடு!

லேம்ப் ஷேடு
பிரீமியம் ஸ்டோரி
லேம்ப் ஷேடு

நம் வீட்டில் இருக்கும் சாதாரண நைட் லேம்ப்பை ‘லேம்ப் ஷேடில்’ பொருத்தி அலங்கார விளக்காக மாற்றலாம்!

அடர்ந்த இரவுப்பொழுதை அழகாக்கும் நைட் லேம்ப்கள் நம் அனைவரின் வீடுகளிலும் இருக்கும். அலங்கார நைட் லேம்ப்கள் இருப்பிடத்தையும் ரசனையாக்கக் கூடியவை. நம் வீட்டில் இருக்கும் சாதாரண நைட் லேம்ப்பை ‘லேம்ப் ஷேடில்’ பொருத்தி அலங்கார விளக்காக மாற்றலாம்!
 பூமாதேவி
பூமாதேவி

எளிதில் கிடைக்கும் பொருள்களை வைத்து வீட்டிலேயே ‘லேம்ப் ஷேடு’ செய்வது எப்படி..? கற்றுத்தருகிறார் கைவினைக் கலைஞர் பூமாதேவி.

நீங்களே செய்யலாம்... இரவுக்கு இனிமை சேர்க்கும் லேம்ப் ஷேடு!

தேவையான பொருள்கள்:

பலூன், நூல்கண்டு, ஃபெவிகால், பிரஷ், குண்டூசி, கிண்ணம், தண்ணீர்.

நீங்களே செய்யலாம்... இரவுக்கு இனிமை சேர்க்கும் லேம்ப் ஷேடு!

ஸ்டெப்1: உங்களுக்குத் தேவைப் படும் லேம்ப் ஷேடின் சைஸுக்கு ஏற்ப பலூனை ஊதிக்கொண்டு, அதன் வாய்ப்பகுதியை நூல் கொண்டு இறுக்கமாகக் கட்டவும்.

நீங்களே செய்யலாம்... இரவுக்கு இனிமை சேர்க்கும் லேம்ப் ஷேடு!

ஸ்டெப் 2: படத்தில் காட்டியுள்ளவாறு உங்களுக்குப் பிடித்த வண்ண நூலை பலூனைச் சுற்றிலும் இறுக்க மாகச் சுற்றவும்.

நீங்களே செய்யலாம்... இரவுக்கு இனிமை சேர்க்கும் லேம்ப் ஷேடு!

ஸ்டெப் 3: படத்தில் காட்டப் பட்டுள்ளதுபோல உங்கள் பலூன் முழுவதும் நூல் சுற்றப்பட வேண்டும்.

நீங்களே செய்யலாம்... இரவுக்கு இனிமை சேர்க்கும் லேம்ப் ஷேடு!

ஸ்டெப் 4: ஒரு கிண்ணத்தில் ஃபெவிகாலை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலந்துகொள்ளவும்.

நீங்களே செய்யலாம்... இரவுக்கு இனிமை சேர்க்கும் லேம்ப் ஷேடு!

ஸ்டெப் 5: நாம் கலந்து வைத்திருக்கும் ஃபெவிகாலை பிரஷ்ஷில் தொட்டு பலூனில் சுற்றியிருக்கும் நூல் மீது பூச வேண்டும். (இதற்குப் பதிலாக பலூனில் நூல் சுற்றத் தொடங்கும் முன் அந்த நூலை ஃபெவிகாலில் நனைத்தும் சுற்றலாம்).

நீங்களே செய்யலாம்... இரவுக்கு இனிமை சேர்க்கும் லேம்ப் ஷேடு!

ஸ்டெப் 6: நூலின் மீது முழுவதுமாக ஃபெவிகால் பூசிய பிறகு, அந்த பலூனை அதிகபட்சம் இரண்டு நாள்கள் காற்றில் உலர வைக்க வேண்டும்.

நீங்களே செய்யலாம்... இரவுக்கு இனிமை சேர்க்கும் லேம்ப் ஷேடு!

ஸ்டெப் 7: இரண்டு நாள்களுக்குப் பின்னர், படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு குண்டூசியால் பலூனை உடைத்து அதை நீக்கிவிட வேண்டும்.

நீங்களே செய்யலாம்... இரவுக்கு இனிமை சேர்க்கும் லேம்ப் ஷேடு!

ஸ்டெப் 8: பலூன் நீக்கப்பட்டவுடன் நூலால் ஆன கூடு போன்ற வடிவம் நமக்குக் கிடைக்கும். இதுதான் நமக்குத் தேவையான லேம்ப் ஷேடு. படத்தில் வெவ்வேறு வண்ண நூல்களால் செய்யப்பட்டுள்ள லேம்ப் ஷேடுகளும் காட்டப்பட்டுள்ளன.

நீங்களே செய்யலாம்... இரவுக்கு இனிமை சேர்க்கும் லேம்ப் ஷேடு!

ஸ்டெப் 9: இந்த லேம்ப் ஷேடில் படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு பல்ப்பை பொருத்த வேண்டும்.

நீங்களே செய்யலாம்... இரவுக்கு இனிமை சேர்க்கும் லேம்ப் ஷேடு!
நீங்களே செய்யலாம்... இரவுக்கு இனிமை சேர்க்கும் லேம்ப் ஷேடு!

ஸ்டெப் 10: இதை இரவில் அலங்கார விளக்காகப் பயன்படுத்த லாம் அல்லது விளக்குகள் எதுவும் பொருத்தாமல் நூல் கூடுகளை மட்டும் தோரணம்போல் கட்டித் தொங்கவிட்டும் வீட்டை அழகு படுத்தலாம்.