Published:Updated:

ஸ்லிம்மா இருந்தா மட்டும்தான் அழகா? - மல்லிகா சௌத்ரி

மல்லிகா சௌத்ரி
பிரீமியம் ஸ்டோரி
மல்லிகா சௌத்ரி

ரோல் மாடல்

ஸ்லிம்மா இருந்தா மட்டும்தான் அழகா? - மல்லிகா சௌத்ரி

ரோல் மாடல்

Published:Updated:
மல்லிகா சௌத்ரி
பிரீமியம் ஸ்டோரி
மல்லிகா சௌத்ரி
‘`ஸ்லிம்மாக இருப்பதுதான் அழகு என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, பருமனான பெண்களைத் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்குகிறது நம் சமூகம். அதிலிருந்து பெண்கள் விடுபட வேண்டும். நம் உடலை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், நேசிக்க வேண்டும்” என்கிறார் மல்லிகா சௌத்ரி.

‘பாடி பாசிட்டிவிட்டி’ இன்ஃபுளுயன்ஸர், ப்ளஸ் சைஸ் மாடல், டாட்டூ கலைஞர், நடிகை எனப் பன்முகம் கொண்டவர். சமீபத்தில் பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம் எடுத்த மல்லிகாவின் பாடி பாசிட்டிவிட்டி புகைப்படங்கள் கவனம்பெற்றன. மல்லிகாவிடம் பேசினோம்...

‘`நான், அசாமி - பஞ்சாபி பெற்றோரின் மகள். ஐந்து வயதிலிருந்து மேடை நாடகங்களில் நடிக்கிறேன். அமெரிக்கா, லண்டனில் நாடகங்கள் இயக்கியும் உள்ளேன். கனடாவில் வசிக்கும் நான், மாடல், நடிகை கனவுடன் சென்னைக்கு வந்தேன். ஆனால், சைஸ் ஸீரோதான் இங்கு நடிகைகளிடம் எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளஸ் சைஸ் பெண்கள் திறமையிருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்கள், புறக்கணிக்கப்பட்டேன். அந்த காயத்தில், `Love Every Body’ என்ற டிஜிட்டல் கேம்பெயினை மூன்று வருடங்களுக்கு முன் தொடங்கினேன்’’ என்பவர், சென்னையில் கடந்த இரண்டரை வருடங்களாக ‘லாஃபிங் புத்தா’ (Laughing Buddha) என்ற டாட்டூ ஸ்டூடியோவை நடத்தி வருகிறார்.

‘`பருமனாக இருப்பவர்கள் மட்டுமல்ல, ஒல்லியாக இருப்பவர்கள், நிறத்தின் அடிப்படையில் அழகுக்கான அளவுகோலில் வைக்கப்படுபவர்கள் என இவர்கள் அனைவருமே பல நேரங்களில் உருவகேலிக்கு ஆளாகிறார்கள். ஒருவரின் உடல் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்தச் சமூகம் ஏன் முடிவு செய்ய வேண்டும். நான் எவ்வாறு இருக்கிறேனோ, அதையே நான் விரும்புகிறேன். என் எடையைக் குறைக்க வேண்டுமென்று நினைத்தால், என்னால் முடியும். ஆனால், அதை மற்றவர்களுக்காக ஏன் செய்ய வேண்டும். நான், என் உருவம் குறித்துப் பெருமைப்படுகிறேன். இந்த எண்ணத்தை என்னைப்போன்ற மற்ற பெண்களுக்கும் ஏற்படுத்த, என் சமூக வலைதளப் பக்கங்களில் 'பாடி பாசிட்டிவிட்டி' கேம்பெயின் செய்துவருகிறேன். வெளியிடங்களில் இதுகுறித்த கலந்துரையாடல் நடத்தியிருக்கிறேன். என் ப்ளஸ் சைஸ் புகைப்படங்களைப் பார்த்த பல பெண்கள், தங்கள் உடல் அமைப்பால் தங்களுக்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை, மனஉளைச்சலை, அவை மறுபரிசீலனை செய்ய வைத்ததாகவும், நேர்மறை எண்ணங்கள் இப்போது தங்களிடம் தோன்ற ஆரம்பித்திருப்பதாகவும் கூறினர்.

ப்ளஸ் சைஸ் மாடலான ஆஸ்லே கிரஹாம், எனக்கு முன்மாதிரி. அவர் ஓர் உடையை அணிந்து இன்ஸ்டா வில் பதிவிடும்போது, ‘எனக்கும் அந்த உடை நன்றாக இருக்கும்’ என்ற பாசிட்டிவ் எண்ணம் தோன்றும். இப்படி, என் இன்ஸ்டாவில் என்னை ஃபாலோ செய்யும் 53,000 ஃபாலோயர்களில் பலருக்கு ஒருவித நேர்மறை எண்ணத்தை நானும் கொடுத்துக்கொண்டிருக்கிறேன் என்பதை எனக்குக் கிடைக்கும் ஆதரவு, வரவேற்பு மூலம் அறிகிறேன்’’ என்றவரிடம்,

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘அழகு என்பதைத் தாண்டி, உடலை சீரான எடையில் வைத்துக்கொள்வது ஆரோக்கியம் தொடர்பானதும்தானே?’ என்றோம்.

மல்லிகா சௌத்ரி
மல்லிகா சௌத்ரி

‘`பாடி ஷேமிங்க்கான ரியாக்‌ஷனாகவோ, அழகை முன்னிறுத்தியோ செய்யாமல், உடல்நலனை முன்னிறுத்திச் செய்யப்படும் உடற்பயிற்சிகளை நான் வரவேற்கிறேன். என்னைப் பொறுத்தவரை, ஸ்லிம்மாக இருந்தால் ஆரோக் கியம், பருமனாக இருந்தால் ஆரோக்கியமின்மை என்பதில்லை. என்னால் ஒரு நாளைக்கு 8 கிலோமீட்டர் நடக்க முடியும். நான் அன்ஃபிட் இல்லை. எனர்ஜியுடன் இருக்கிறேன்’’ என்று ஸ்மைலிக்கும் மல்லிகா,

‘`என் முயற்சிகளுக்குப் பெற்றோர், நண்பர்கள் ஆதரவாக உள்ளனர். ஆனால், என் முன்னாள் காதலர், ‘நீ ஏன் உலகத்தை மாற்ற வேண்டும்?’ என்று எதிர்ப்பு தெரிவித்தார். காதல் முறிந்தது. ஆனாலும், பல இளம்பெண்களுக்கு, அவர்களை அவர்களே நேசிக்கக் கற்றுக்கொடுக்கும் இந்த முன்னெடுப்பு, என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. பெண்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான். மற்றவர்களின் உடல் கேலிகளுக்குக் காதையோ, மனதையோ கொடுக்காதீர்கள். உங்களை நீங்கள் நேசியுங்கள்’’ என்கிற மல்லிகா,

‘`ஒரு குட் நியூஸ். வெங்கட் பிரபுவின் வெப் சீரிஸில் நான் இப்போது நடித்துக்கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் உற்சாகமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்லிம்மா இருந்தா மட்டும்தான் அழகா? - மல்லிகா சௌத்ரி

மூன்று நாள்கள்... ஒரு டாட்டூ!

‘`சென்ற ஆண்டு கோவாவில் நடைபெற்ற டாட்டூ கன்வென்ஷனில் சென்னையின் பிரதிநிதியாக கௌரி ஷங்கர் மிஸ்த்ரி, முதுகில் ஆரம்பித்து காலில் முடிவதுபோல என் உடல்முழுக்கப் பரவியிருக்கும் வகையில் ஒரு மயிலிறகு டாட்டூவை வரைந்தார். இந்த டாட்டூவை வரைந்து முடிக்க கிட்டத்தட்ட மூணு நாள்கள் ஆனது. ப்ளஸ் சைஸ் மாடல்களுக்கு ஊக்கம் அளிக்கும்விதமாகவும் பாடி பாசிட்டிவிட்டியை வலியுறுத்தும் விதமாகவும் புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம் அந்த டாட்டூவை அழகாக போட்டோஷூட் செய்தார்’’ என்கிறார் மல்லிகா சௌத்ரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism