Published:Updated:

2K Kids: ‘மீ டூ’ ‘நோ மீன்ஸ் நோ’... ஒன்றிணைந்து போராடுவோம்!

2K Kids
பிரீமியம் ஸ்டோரி
2K Kids

கௌசிகா இளங்கோவன்

2K Kids: ‘மீ டூ’ ‘நோ மீன்ஸ் நோ’... ஒன்றிணைந்து போராடுவோம்!

கௌசிகா இளங்கோவன்

Published:Updated:
2K Kids
பிரீமியம் ஸ்டோரி
2K Kids

ன்றைய காலகட்டத்தில் ஆண்களைவிட பெண்கள் எந்த வகையிலும் குறைவானவர்கள் அல்லர் என்பதை எல்லா துறைகளிலும் நிரூபித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதை எதிர்கொள்வதற்கான நம்பிக்கை தரும் விஷயங்களைப் பார்ப்போம்.

விக்டிம் பிளேமிங்... மனமாற்றம்...

தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையையும், அதற்குக் காரணமான நபரையும் வெளியே சொன்னால், தான் அவமானத்துக்கு உள்ளாகக்கூடும், தன்னை மற்றவர்கள் தவறாக நினைக்கக்கூடும், தன்னுடைய குரல் நிராகரிக்கப்படக்கூடும்... இவையெல்லாம் பெண்களின் கற்பனைகளல்ல. இதற்கு முன்னர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றிப் பேசிய பெண்களை இந்தச் சமூகம் நடத்திய விதம், அவர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் அச்சம். இப்போதும்கூட, பாதிக்கப்பட்டவர் களின் மீதே பழியைப் போடும் ‘விக்டிம் பிளேமிங் மனநிலை’யில்தான் இருக்கிறது இந்தச் சமூகம். என்றாலும், வெளிப்படையாகவோ அல்லது அதிகாரபூர்வமாகவோ அதைச் செய்ய முடியாத சூழல், தொடர் போராட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களால் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது.

2K Kids: ‘மீ டூ’ ‘நோ மீன்ஸ் நோ’... ஒன்றிணைந்து போராடுவோம்!

உதாரணமாக, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி எழுதப்படும் மொழியில் வரையறை உருவாக்கப்பட்டிருக் கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி பொதுவெளியில் அவதூறான கருத்து களைச் சொல்லும் அரசியல்வாதிகள் முதல் பிரபலங்கள்வரை அனைவருமே கண்டனங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ‘நோ மீன்ஸ் நோ’ என்று மாஸ் ஹீரோவே டயலாக் பேசும் ஆக்கபூர்வமான படங்கள் எடுக்கப்படுகின்றன. விக்டிம் பிளேமிங் விஷயத்தில் 10 சதவிகித மாற்றத்தைதான் எட்டியிருக்கிறோம் என்றாலும், அந்த வெற்றியையும்கூட நாம் கொண்டாடியே ஆக வேண்டும். இதுபோன்ற முன்னெடுப்புகளால் கிடைத்த நம்பிக்கையில் உலகுக்கு அறிமுகமானதுதான் ‘மீ டூ’.

உரக்கப் பேசுவோம்

பாலியல் வன்முறைக்கு பெண்கள் ஆளானாலும், அதை அவர்கள் வெளியில் சொல்லாத மௌனம்தான், காலம் காலமாக ஆண்களுக்கு தைரியம் அளித்துவந்தது. சமீபத்திய ஆண்டுகளில் அதை உடைத்த ‘மீ டூ’ போன்ற முன்னெடுப்புகளைப் பார்க்கிறோம். பெரிய பெரிய ஆளுமைகளை எல்லாம் புரட்டிப்போட்ட அந்தப் பேரலை நமக்கு தரும் நம்பிக்கை... இனி உரக்கப் பேசுவோம்.

இப்போது இளம் பெண்களிடம் பாலியல் வன்முறைக்கு எதிராக வினை யாற்றுவதில் ஓர் ஒருங்கிணைவைப் பார்க்க முடிகிறது. தங்களுக்கு நேர்ந்ததைத் தோழிகளுடன் பகிர்ந்து, தன்னைப்போலவே மற்றவர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் குழுவாக அதை எதிர்கொள்ள ஒன்றிணைகிறார்கள். சமூக வலைதளங்களில் ஸ்கிரீன்ஷாட்களால் தோலுரிக்கிறார்கள். சட்டப் போராட்டத் துக்கு முன்னதாகவே குற்றவாளிக்கு சமூக தண்டனை பெற்றுத் தருபவர்கள், அதே குற்றத்தைச் செய்ய எத்தனிப்பவர்களுக்கு எச்சரிக்கை மணியையும் அடிக்கிறார்கள். மொத்தத்தில், நூற்றாண்டுகளாக கெட்டிப் பட்டிருக்கும் ‘வெளிய சொல்ல மாட்டா’ என்ற ஆண்களின் தைரியம், இப்போது தகர்க்கப்பட்டு வருகிறது.

குற்றமும் தண்டனையும்

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, இந்திய சாட்சிய சட்டம் 1872, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாது காக்கும் சட்டம் 2012 எனப் பல சட்டங்கள் துணைநிற்கின்றன. மேலும், நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரையில் ‘குற்றவியல் நடைமுறை திருத்தச் சட்டம் 2013’ கொண்டுவரப்பட்டது. பெண்கள் மீது ஆசிட் வீசும் குற்றமும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் அவளின் அந்தரங்கங் களைப் படமாக்குவது, சமூக வலைதளங்களில் தொந்தரவு செய்வது, பொதுவெளியில் பின்தொடர்வது போன்றவை எல்லாம் தண்டனைக்குரிய குற்றச் செயல்கள்.

குற்றம் முதல் முறை நடந்திருந்தால் அபராதத்துடன் 1 - 3 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால், குறைந்தது 3 - 7 ஆண்டுகள் சிறை உண்டு.

எதிர்கொள்வோம்!

பெண்கள் நாம் நம்மைக் கல்வியிலும் பொருளா தாரத்திலும் மேம்படுத்திக் கொள்வோம். நம் சட்ட உரிமைகளையும், அவை தரும் பாதுகாப்பையும் அறிந்துகொள்வோம். தனியாகப் போராடுவதை விட குழுவாக இணைந்து எதிர்கொள்ளும்போது கூடுதல் பலன்கள் கிடைக் கும் என்பதை குறித்துக் கொள்வோம்.

லெட்ஸ் கோ!