700ஆண்டுகளுக்கு முன் தங்கள் இனத்தைக் காத்த தாயும் மகளுமான இரண்டு பெண்களை தங்கள் தலைவிகளாக்கி, அவர்களுக்கு இன்றும் தங்களின் காணிக்கைகளைச் செலுத்தும் திருவிழாதான் ‘மேடாரம் ஜாத்ரா’.

ஆசிய நாடுகளின் பழங்குடி திருவிழாக்களிலேயே இது மிகவும் பிரமாண்டமானது. தெலங்கானா மாநிலம், தண்டகாரண்ய வனப்பகுதியில் முலுகு மாவட்டம் ஈதூர் நகர வனவிலங்குக் காப்பகத்தின் நடுவில் மேடாரம் என்ற குக்கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா நடக்கிறது. இந்த ஆண்டு கொரோனா இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்பே இந்த விழா நடந்து முடிந்திருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றான காக்கதேய வம்சத்தில் முதலாம் பிரதாப ருத்ரன் காலத்தில் தங்கள்மீது சுமத்திய வரியைக் கட்ட முடியாது என எதிர்த்து வாளெடுத்து போருக்குச் செல்கிறார் மேடாநாடு எனும் மிகச்சிறிய நாட்டை ஆண்ட கோவிந்தராஜு. போரில் அவர் தோற்று, இறந்துபோக, அவரின் மருமகன் பகிடிதராஜு தனது மகன், மருமகனோடு போர்க்களத்துக்கு வருகிறார். போரில் பகிடிதராஜுவும் இறந்த செய்தி கேட்டு, அவர் மகன் ஜம்பண்ணா கோதாவரி நதியின் சிறிய கிளை நதியான சம்பங்கிவாகுவில் (இப்போது ஜம்பண்ணவாகு) கழுத்தை அறுத்துக்கொண்டு விழுந்து மரணமெய்துகிறார். இந்த நதியின் நீர் சிவப்பாக இருப்பதற்கு ஜம்பண்ணாவின் ரத்தம் கலந்ததே காரணம் என்று இன்றும் அந்த மக்கள் நம்புகின்றனர்.

போரில் கணவன் இறந்து போனதையும், மகன் தற்கொலை செய்துகொண்டதையும் கேள்வியுற்ற மனைவி சம்மா போருக்குக் கிளம்புகிறார். தாயோடு மகள் சாரளாவும் செல்கிறார். நீண்ட போருக்குப் பிறகு இரண்டு பெண்களும் வெற்றி பெறுகின்றனர். வெற்றியோடு ஊர் திரும்பிய சம்மாவும் சாரளாவும் போரில் பட்ட காயங்களால் மரணமெய்துகின்றனர். தங்களுக்காகப் போரிட்டு வென்று இனத்தைக் காத்த பெண்களைத் தங்களின் தலைவிகளாக பாவித்து நன்றிக் கடன் செலுத்தும் விதமாகவே இவ்விழா கொண்டாடப்படுகிறது.

தலையில் சுமக்கும் எடை வெல்லத்தை ‘பங்காரம்’ என்ற பெயரிலும், மடியில் சுமக்கும் அளவு அரிசியை ‘ஒடிபீயம்’ என்ற பெயரிலும் காணிக்கையாகச் செலுத்தும் இம்மக்கள் ஜம்பண்ணவாகு நதியில் குளிப்பதை புனிதமாக நினைக்கின்றனர். இதன் மூலம் இளைஞர்கள் வீரம் பெறுவதாகவும் கருதுகின்றனர். இந்தக் கொண்டாட்டங்களின்போது கோயா பாரம்பர்ய பாடல்களைப் பாடியபடி இசைக் கருவிகளை இசைத்து ‘கோண்டு’ நடனத்தை ஆடிக் களிக்கின்றனர்.