Published:Updated:

தன்னம்பிக்கையையும் செல்ஃப் லவ்வையும் விட்டுக்கொடுத்துடாதீங்க!

ரேச்சல்!
பிரீமியம் ஸ்டோரி
ரேச்சல்!

நிறங்களை ‘வெளுக்கும்’ ரேச்சல்!

தன்னம்பிக்கையையும் செல்ஃப் லவ்வையும் விட்டுக்கொடுத்துடாதீங்க!

நிறங்களை ‘வெளுக்கும்’ ரேச்சல்!

Published:Updated:
ரேச்சல்!
பிரீமியம் ஸ்டோரி
ரேச்சல்!

“எவ்வளோ கறுப்பா இருக்க நீ... அந்த க்ரீமை போடு... இதை தேய்ச்சுக் குளி... கலர் வந்துடும்... கல்யாண வயசு வேற வந்துடுச்சு...எப்படியாவது கலராயிடு - இப்படிப்பட்ட பேச்சுகள் இன்றும் மாறவில்லை. ஸ்கின் கலரை வெச்சு ஒருத்தரை எடைபோடுறது எப்படி நியாயம்..?’’ என்று கோபம் பொங்கக் கேட்கிறார், புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மருத்துவ மாணவி சான் ரேச்சல்.

“கறுப்பா இருந்தாலும் நம்மை எப்படி ப்ரெசென்ட் பண்ணிக்கு றோம் என்பதில்தான் அழகு இருக்குன்னு இப்ப புரியுது. ஆனா... சின்ன வயசுல நான் ஸ்ட்ராங்கா இருந்ததில்ல. ஏன்தான் கறுப்பா இருக் கேனோ’ன்னு ரொம்ப அழுதுருக்கேன். வீட்டுலயே நான் மட்டும்தான் கறுப்பா இருக்கேன்னு சொல் லிட்டே இருப்பாங்க. உன்னை ஹாஸ்பிடல்ல இருந்து மாத்தி கூட்டிட்டு வந்துட்டோம்னெல்லாம் கிண்டல் பண்ணியிருக்காங்க. ரொம்ப கஷ்டமா இருக்கும். அந்த அளவுக்கு நான் ஃபீல் பண்ணியிருக்க வேண்டாம்னு இன்னிக்குத் தோணுது. அந்த அவமானங்களும் கிண்டல்களும் கொடுத்த அனுபவம்தான் இன்னிக்கு என்னை அழகிப் போட்டிகள்ல ஜெயிக்க வைக்குது” என்கிறார் ரேச்சல்.

“பிறந்து வளர்ந்தது எல்லாம் புதுச்சேரி. அம்மா, அப்பா, நான், தம்பினு அழகான குடும்பம். நான் ஒன்பதாவது படிச்சிட்டு இருந்தப்ப எல்லாமே மாறுச்சு. அம்மா கேன்சர்ல இறந்தாங்க. அவங்க கேன்சரால தான் இறந்தாங்கன்றதே இறந்த மூணு நாள் கழிச்சுதான் தெரியவந்துச்சு. முன்னாடியே கண்டுபிடிச்சிருந்தா இன்னிக்கு அவங்க உயிரோட இருந்திருப்பாங்க. அப்பதான் டாக்டர் ஆகணும்னு முடிவெடுத்தேன். டாக்டர் ஆகணும்ங்குற கனவோட இருக்குற மாணவர்களையும் நீட் தேர்வுக்குத் தயார் செஞ்சிட்டு வர்றேன். புற்றுநோயியல் மருத்துவர் ஆகணுங்கிறது என் ஆசை. இன்னொரு பக்கம் மாடலிங்கும் பண்ணப் பிடிக்கும். எம்.பி.பி.எஸ், மாடலிங் ரெண்டும் எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி” என்கிறார் நீட் தேர்வுக்கு மாணவர்களைத் தயாராக்கும் மருத்துவ மாணவி சான் ரேச்சல்.

தன்னம்பிக்கையையும் செல்ஃப் லவ்வையும் விட்டுக்கொடுத்துடாதீங்க!

``மாடலிங்ல ஆசை இருந்துச்சே தவிர எப்படி உள்ள நுழையணும்னு எந்த அடிப் படையும் எனக்குத் தெரியாது. வெறும் ஆர்வத்தை மட்டுமே வெச்சு அடுத்தடுத்த படிகளைக் கடந்தேன். ‘இவ்ளோ கறுப்பா இருக்க... உனக்கெல்லாம் எதுக்கு மாடலிங்’னு அவமானப்படுத்தினாங்க. ஆனாலும் மனசு தளரலை. முயற்சி செய்தேன். முதல் போட்டியிலேயே ‘மிஸ் டார்கெஸ்ட் குயின்’ டைட்டில் வின் பண்ணினேன்” என்பவர், மிஸ் புதுச்சேரி 2020-21, மிஸ் டார்க் குயின், தமிழ்நாடு 2019 மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூடு என நிறைய டைட்டில்களை வென்றிருக்கிறார்.

``என் சொந்த ஊரான புதுச்சேரிலயே ‘மிஸ் புதுச்சேரி’ டைட்டில் வின் பண்ணினதுதான் ரொம்ப ஸ்பெஷல். ஒவ்வொரு முறை நான் வெற்றியைத் தொட்டபோதும் என் கலரை பத்தின பார்வை மாற ஆரம்பிச்சது. என்னை மாதிரி அனுபவம் உள்ளவங்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ்... யார் என்ன சொன்னாலும் தன்னம்பிக்கையையும் செல்ஃப் லவ்வையும் விட்டுக்கொடுத்துடா தீங்க... அந்த ரெண்டும்தான் உங்களை உயரத்துக் குக் கூட்டிட்டுப் போகும்’’

- தன்னம்பிக்கை தளும்பு கிறது ரேச்சலின் பேச்சில்.