‘மூர்த்தி - தலம் - தீர்த்தம்’ எனப் பெருமையுடன் அழைக்கப்படும் புனிதத்தலம் ராமேஸ்வரம். சேது தீர்த்தத்தில் நீராடி ராமநாத ஸ்வாமியை வழிபட்டால் மக்கட்பேறு கிடைக்கும் என்பது பக்தி சார்ந்த நம்பிக்கை.

இந்த நம்பிக்கையால் காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை வாழும் மக்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் ராமேஸ்வரத்தில் புனித நீராடிச் செல்ல விரும்புகின்றனர். ராமாயண தொடர்புடைய தீர்த்தங்கள் பல ராமேஸ்வரம் தீவு மட்டுமில்லாது ராமநாதபுரம் மாவட்டம் முழுமைக்கும் இருந்தன. கால மாற்றம், இயற்கைச் சீற்றம் போன்ற காரணங்களால் சிதைந்துபோன தீர்த்தங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் தனியொரு நபராகக் களமாடி வருகிறார் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தின் பணியாளரான சரஸ்வதி.

நீர் ஆதாரங்களை

மீட்டெடுக்கும் முயற்சி

நான்கு திசைகளிலும் உப்புக் கடலால் சூழப்பட்ட ராமேஸ்வரம் தீவின் நிலப்பரப்பில் நல்ல தண்ணீரும் கிடைக்கிறது. இதற்குக் காரணமாக இருப்பது கடலோரம் அமைந்திருந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளும், தெய்வங்களின் பெயரால் உருவாக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தீர்த்தக் குளங்களும்தாம். மூன்று இலக்கங்களில் அமைந்திருந்த தீர்த்தங்கள் காலப்போக்கில் இரண்டு இலக்க எண்ணிக்கையாகச் சுருங்கிவிட்ட நிலையில் மீண்டும் அவற்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சரஸ்வதி.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைப் பூர்வீகமாகக்கொண்ட சரஸ்வதி ஒரு வரலாற்று பட்டதாரி. பொருளாதார அரசியலிலும் பட்டம் பெற்றுள்ளார். 1984-ம் ஆண்டு, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் தொண்டராகச் சேர்ந்த சரஸ்வதி, அப்போது முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கேந்திரத்தின் சமூக நலப்பணிகளைச் செய்து வந்தார். அதோடு, இயற்கை அபிவிருத்தி தொடர்பான பணிகளுக்காகவே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

2014-ம் ஆண்டில் சுவாமி விவேகானந்தர் பிறந்த 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ‘பசுமை ராமேஸ்வரம்’ என்ற அமைப்பை அப்துல் கலாம் தொடங்கினார். அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரானார் சரஸ்வதி. ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் குறைந்துவரும் நீர் ஆதாரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கிய சரஸ்வதிக்குப் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டின.

ராமேஸ்வரம் தீவில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த நாட்டுநலப்பணித் திட்ட மாணவர் களின் துணையோடு மண்மூடிக்கிடந்த 34 தீர்த்தக் குளங்களை மீட்டெடுத்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த 61 வயதைத் தொட்டுள்ள சரஸ்வதி, சிறிதும் தொய்வின்றி, கிராமம் கிராமமாகச் சென்று நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணியை உற்சாகமாகச் செய்து கொண்டிருக்கிறார்.

‘`ராமேஸ்வரம் தீவில், ராமர் உள்ளிட்ட தெய்வங்கள் பெயரில் ஏராளமான தீர்த்தக் குளங்கள் இருந்துள்ளன. இவற்றில் நீராடினால் தோஷங்கள் நீங்கி நன்மைகள் கிடைக்கும் என்று காலங்காலமாக மக்கள் நம்பினார்கள். அதுமட்டுமல்ல, ராமேஸ்வரத்தில் வசிக்கும் மக்கள், வந்துசெல்லும் யாத்ரீகர்களின் குடிநீர்த் தேவைக்கும் இத்தகைய குளங்கள் உதவியாக இருந்துள்ளன. காலப் போக்கில் இவற்றில் பல மணல் மூடி, இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. இவற்றை மீட் டெடுக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் எல்.ஐ.சி, டி.ஆர்.டி.ஓ, ஓ.என்.ஜி.சி போன்ற மத்திய அரசு நிறுவனங்களும் கைகோத்தன.

தர்ம தீர்த்தம், பனச்சர் தீர்த்தம், விரேக தீர்த்தம், ஞானவாபி தீர்த்தம், வாலி தீர்த்தம், நாரண தீர்த்தம், ஹர தீர்த்தம் என இதுவரை 34 தீர்த்தங்களை மீட்டெடுத்துள்ளோம். இரண்டு கோடி ரூபாய் செலவில் இந்தக் குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட குளங்கள், அந்தந்தப் பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக அவர்களின் பொறுப்பிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் புதையுண்டு கிடக்கும் மற்ற தீர்த்தங்களையும் கண்டறிந்து அவற்றைப் புனரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட உள்ளோம்’’ என்கிறார் சரஸ்வதி.

நீரின்றி அமையாது உலகு!