Published:Updated:

ஆண்களும் புடவை கட்டலாமா... ஃபோட்டோஷூட் மூலம் செய்துகாட்டிய ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி!

சமூகத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் வழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை. அதன் வெளிப்பாடுதான் ஒருவரைத் திட்டும்போது பெண்ணுறுப்பைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது, ஆண்களை அவமதிப்பதாக நினைத்துக்கொண்டு, `பொம்பள மாதிரி சேலையைக் கட்டிக்கோ' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது. பெண்களும், பெண்கள் பயன்படுத்தும் பொருள்களும் குறைந்த மதிப்பு கொண்டவை என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்தச் சீண்டல்களுக்கு காரணம்.

புடவை என்ன அவ்வளவு மதிப்பு குறைந்த ஆடையா? பெண்கள் பயன்படுத்துவதால் ஓர் ஆடையை எப்படிக் குறைத்து மதிப்பிட முடியும் என்பதே முதல் கேள்வியாக என் மனதில் விழுந்தது. அதற்கான பதிலைத்தான் இந்தப் போட்டோஷூட் மூலம் தந்திருக்கிறார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு