Election bannerElection banner
Published:Updated:

`அப்போ என் நிறத்துக்காக விமர்சனங்களை சந்திச்சேன்; இப்போ சாதிக்கிறேன்!' - `மிஸ் பாண்டிச்சேரி' ரேச்சல்

San Rechal
San Rechal

``வீட்டுல எல்லாருமே நல்லா கலரா இருபாங்க. நான் மட்டும்தான் கறுப்புன்னு சொல்லிட்டே இருப்பாங்க".

எம்.பி.பி.எஸ், மாடலிங்... எனக்கு இரண்டுமே இரண்டு கண்கள் மாதிரி என்கிறார் இவர். ``பிறந்து வளர்ந்தது எல்லாம் பாண்டிச்சேரி. அம்மா அப்பா தம்பி நான் என அழகான குடும்பம். நான் ஒன்பதாவது படிச்சிட்டு இருந்தப்ப எல்லாமே மாறுச்சு. அம்மா கேன்சர்ல இறந்துட்டாங்க.

San Rechal
San Rechal

புற்றுநோயாலதான் அவங்க இறந்தாங்கனு யாருக்குமே தெரியாது. இறந்ததுக்கு அப்பறமா மூணு நாள் கழிச்சுதான் ரிப்போர்ட்ல எங்களுக்கே தெரிய வந்துச்சு. முந்தைய ஸ்டேஜ்ல கண்டுபிடிச்சிருந்தாகூட இன்னைக்கு அவங்க உயிரோட இருந்திருப்பாங்க. அப்பதான் டாக்டர் ஆகணும்னு தோணுச்சு. அப்படித்தான் இன்னைக்கு நான் டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கேன். புற்றுநோயியல் நிபுணர் ஆகணும்ங்குறதுதான் என் விருப்பம்.

மாடலிங்கும் பிடிக்கும். ரொம்ப ஆசையோடு மாடலிங் துறைக்குள்ளே நுழைஞ்சேன். ஆனா... நான் கறுப்பா இருக்கேன்னு ஆரம்பத்துல என்கிட்ட பேசவே நிறைய பேர் தயங்கினாங்க.

San Rechal
San Rechal

இந்த மாதிரியான சங்கடங்கள் இங்க இருந்து ஆரம்பிக்கல... சின்ன வயசுல எங்க வீட்டுல இருந்தே ஆரம்பிச்சிடுச்சு. எங்க வீட்லயே நான் மட்டும்தான் கறுப்பு. உன்னை ஹாஸ்பிடல்ல இருந்து மாத்திக் கூட்டிட்டு வந்துட்டோம்ன்னு கிண்டல் பண்ணியிருக்காங்க.

``மாடலிங்ல ஆசை இருந்துச்சே தவிர எப்படி உள்ள நுழையணும்னு எந்த அடிப்படையும் அப்ப எனக்குத் தெரியாது. தெரியாத துறைக்குள்ள வெறும் ஆர்வத்தை வச்சு மட்டுமே நுழைஞ்சு அடுத்தடுத்த படிகளைக் கடந்தேன். கலந்துகிட்ட முதல் போட்டிலயே `மிஸ் டார்கெஸ்ட் குயின்' டைட்டில் வின் பண்ணினேன்.

San Rechal
San Rechal

மிஸ் பாண்டிச்சேரி 2020-2021, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019-ன்னு வரிசையா டைட்டில்ஸ் வின் பண்ணி இருந்தாலும் `மிஸ் பாண்டிச்சேரி'தான் என் மனசுக்கு எப்போதும் நெருக்கமானது. நான் கேலிக்கும் அவமானத்துக்கும் ஆளான என்னோட சொந்த ஊரான பாண்டிச்சேரிலயே டைட்டில் வாங்கினதுதான் என்னோட ஃபேவரைட்".

``இன்னைக்கு எனக்காக நிறைய பேர் சப்போர்ட் பண்றாங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஆனா மாடலிங் பண்றேன்னு சொன்னப்ப இதே ஆட்கள்தான் என் கலருக்காக என்னை ரொம்ப விமர்சனம் பண்ணினாங்க. ஒவ்வொரு டைட்டிலா நான் வின் பண்ண பண்ணதான் அந்த பார்வை மாற ஆரம்பிச்சது. தன்னம்பிக்கையும் செஃல்ப் லவ்வும் இருந்தாலே போதும்... எல்லாமே கைக்கு வந்து சேரும்."

San Rechal
San Rechal

`எந்த வேலையா இருந்தாலும் மனசுக்குப் பிடிச்சு செய்யணும். அந்த வகையில நான் ரொம்ப கொடுத்து வச்சவ' என, தான் கடந்து வந்த சோகங்களுக்கும் அவமானங்களுக்கும் அர்த்தம் சேர்த்து வருகிறார் தன்னம்பிக்கை நாயகி சான் ரேச்சல்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு